திமுக அரசின் அமைச்சரவை என்பது பல மாற்றங்களை கண்டது இதுவரை எந்த அரசும் இத்தனை முறை தனது அமைச்சரவை மாற்றி இருக்காது என்று கூறும் அளவிற்கு கிட்டத்தட்ட மூன்று முறை தனது அமைச்சரவை மாற்றி கடைசியாக மாற்றப்பட்ட அமைச்சரவையில் பி டி ஆர் பழநிவேல் தியாகராஜன், நாசர் போன்றோரின் பதவிகள் மாற்றப்பட்டது அதிலும் குறிப்பாக பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசரின் பதவி பறிக்கப்பட்டு அந்த பதவிக்கு மனோ தங்கராஜ் நியமிக்கப்பட்டார். ஏனென்றால் அமைச்சர் நாசர் பால்வளத்துறை அமைச்சராக இருந்த பொழுது ஆவின் பால் நிறுவனம் பல சர்ச்சைகளுக்கு பெயர் போனது, ஆனால் இவருக்கு பிறகு நியமிக்கப்பட்ட மனோ தங்கராஜ் ஆவின் நிறுவனத்தில் உள்ள சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் படி பல அதிரடி உத்தரவுகளை வெளியிட்டார் இருப்பினும் இவர் மக்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்த பச்சை நிற பால் பாக்கெட்டை விற்பனையில் இருந்து நீக்கியதாலும் மற்ற பால் பாக்கெட்களில் உள்ள கொழுப்பு சத்தை மேலும் குறைத்ததும் பெரும் சர்ச்சையை பெற்றது.
இதனால் தமிழக பாஜக மாநில தலைவருக்கும் மனோ தங்கராஜிற்கும் இடையே வார்த்தை பனிப்போர் நிகழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது. குழந்தைகளுக்கு கொழுப்பு சத்து நல்லதல்ல என்பதாலே இந்த கொழுப்பு சத்துக்கள் ஆவின் நிறுவன பால்களில் குறைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதற்கு அண்ணாமலை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து ஆவின் நிறுவனத்தில் நடந்து வரும் ஊழல்களை குறித்து கூறினார். இப்படி அண்ணாமலைக்கும் மனோ தங்கராஜிற்கும் இடையே பனிப்போர் முற்றி இருந்த சமயத்தில் சென்னையில் ஏற்பட்ட கனமழையாய் சென்னை முழுவதும் மழை நீர் வெள்ளம் தேங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. மழை நின்ற பிறகும் வெள்ள நீர் வடியாததும் மீட்பு பணிக்கு யாரும் வரவில்லை என்பதும் மக்கள் மத்தியில் அரசின் மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
மேலும் மின்சாரமும் இன்றி பால், தண்ணீர், உணவு என்ற அத்தியாவசிய பொருள்கள் எதுவும் கிடைக்காமல் சென்னை மக்கள் கைவிடப்பட்டது தமிழக முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை அடுத்து மழை நீர் நின்று இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு அரசு தரப்பில் மீட்பு நடவடிக்கைகளும் நிவாரண பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றது இருப்பினும் ஒரு பாக்கெட் பாலின் விலை 50 ரூபாய் என்றும் படகில் ஏறி மழை நீர் இல்லாத பகுதிக்கு செல்வதற்கு அதிக அளவிலான கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகவும் மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் எங்களால் மழைநீர் இல்லாத பகுதிக்கு செல்ல முடியாமலும் பால் வாங்க முடியாமலும் துயரத்தை சந்தித்து வருகிறோம் ஒரு பாக்கெட்டின் விலையை இவ்வளவு உயர்த்தி விற்பனை செய்கிறார்கள் என்று மக்கள் ஒரு பக்கம் குற்றம் தெரிவித்து வந்த நிலையில் மற்றொரு பக்கம் ஆவின் நிறுவனத்தின் பால் பாக்கெட் வீணாக தெருக்களில் கொட்டப்பட்டிருந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இதனால் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானார். இதனை அடுத்து அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவின் நிறுவனத்தை முழுவதுமாக ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு அதனை ஒரு வீடியோவாக எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார் இந்த வீடியோ பதிவை சண்டை பயிற்சி இயக்குனரும் நடிகருமான கனல் கண்ணன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு ‘நடிப்பும் இயக்கமும் பிரமாதம் டைரக்டர் ராஜமௌலிக்கு டப் கொடுக்கும், Milk Manager’ என்று பங்கமாக கலாய்த்துள்ளார். இது இணையங்களில் கடுமையாக வைரலாகி வருகிறது.