24 special

டெல்லி போட்ட ஸ்கேட்ச்...! இறங்கி விளையாட ஆரமித்த அண்ணாமலை...!

annamalai, udhayanithi
annamalai, udhayanithi

தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்ற திமுகவிற்கு சனாதன ஒழிப்பு பற்றி உதயநிதி பேசிய பேச்சுக்கள் இன்னும் அவர்களது பின்னடைவின் வேகத்தை அதிகப்படுத்தியது. இதனை அண்ணாமலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார் தனது நடை பயணத்தின் பொழுது மக்களிடம் நேரடியாக சனாதனத்தை பற்றி தெள்ளத்தெளிவான தெளிவுரையை முன் வைத்தார். இது குறித்து அண்ணாமலை கூறும்போது, அனைத்து மதங்களையும் தாண்டியது சனாதனம் பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று கூறுவது சனாதனம் சிறு தெய்வ வழிபாடுகளில் தொடர்வது சனாதனம், கோவிலுக்கு செல்பவர்களுக்கு தெரியும் சனாதனம் என்றால் என்னவென்று ஆனால் கோவிலில் இருக்கும் உண்டியலுக்காக கோவிலுக்கு செல்பவர்களுக்கு எப்படி தெரியும் சனாதனத்தின் அருமை பெருமைகள் என்று சனாதன ஒழிப்பு பற்றி பேசிய உதயநிதியை கிழித்து தொங்க விட்டார். 


இதனை அடுத்து சனாதன ஒழிப்பு பற்றி உதயநிதி பேசும் பொழுதே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உதயநிதியின் கருத்தை கேட்டுக்கொண்டு அமைதியாக வேடிக்கை பார்த்தது கண்டிக்கத் தகுந்தது, மேலும் அவர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்க கூடிய தாரக உரிமையை இழந்து விட்டார் என்றும், அதனால் செப்டம்பர் 10ஆம் தேதி வரையே அவரது காலக்கெடு அதற்குள் அவர் தனது பதவியை விலக வேண்டும் இல்லை என்றால் செப்டம்பர் 11ம் தேதி அன்று முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக தரப்பில் அண்ணாமலை தெரிவித்தார். அதன்படி பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை பதவி விலக கோரி நேற்று போராட்டம் நடைபெற்றது. 

குறிக்கப்பட்ட கெடுக்காலம் வரை அமைச்சர் சேகர்பாபு பதவி விலகாவிட்டால் அவர் பதவி விலக வலியுறுத்தி தமிழக முழுவதும் அறநிலையத்துறை அலுவலகங்கள் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது அதன் படியே சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் பேரணி நேற்று மாலை அளவில் தொடங்கியது, இந்தப் போராட்டத்தின் பொழுது யாருக்கும் எதிரானது சனாதன தர்மம் அல்ல, மற்ற மதங்கள் தோன்றுவதற்கு முன்பில் இருந்தே சனாதன தர்மம் இருந்து வருகிறது அமைச்சர் உதயநிதி கூறியது போல உடன்கட்டை ஏறும் வழக்கம் சனாதன தர்மத்தில் கிடையாது. சனாதனத்தில் சில குறைகளையும் குற்றங்களையும் கொண்டு வந்தது சில மனிதர்கள் அதனை சனாதனத்தை பின்பற்றுபவர்களே எதிர்த்துள்ளனர். ஒட்டுமொத்தமாக சனாதனத்தை அழிப்போம் என்று கிளம்பி இருக்கிறார்கள் அவர்களுக்கு பதிலடி கொடுப்போம் என்று போராட்டத்தில் இறங்கி அண்ணாமலை சரமாரியான கேள்விகளையும் கருத்துக்களையும் திமுகவிற்கு எதிராக முன் வைத்தார். 

இந்தப் போராட்டத்தில் முன்னாள் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், நாராயணன் திருப்பதி, வானதி சீனிவாசன் போன்ற முக்கிய பாஜக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தொடர்ந்து அரசு தரப்பில் எந்த ஒரு பதிலும் கொடுக்கப்படாமல் இருந்த நிலையில் அண்ணாமலை சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இன்னும் சில பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தில் பாஜக நிர்வாகிகளை போலீசார் கைது செய்து அருகில் இருக்கும் தியேட்டர் மற்றும் மஹால்களில் அடைத்து வைத்திருந்த சம்பவமும் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலானது, மேலும் இந்த விவகாரத்தை அரசியலாகவும் குறிப்பாக திமுகவிற்கு தலைவலியை ஏற்படுத்தவும் பாஜக தேசிய அளவில் ஸ்கெட்ச் போட்டு விட்டது, இதற்குப் பிரதமர் மோடியும் பச்சை கொடி காட்டி விட்டார் ஆதலால் நாளுக்கு நாள் இனி சனாதனத்தை வைத்து திமுக வின் தூக்கத்தை பாஜக விரட்டியடிக்க போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களின் கூட்டத்தில் கூட இந்த சனாதன விவகாரத்தை பற்றி பேசியதும் அதனை தொடர்ந்து போராட்டங்கள் அதிகமாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது..