24 special

விளையாட்டு பிள்ளை போல் உதயநிதி மற்றும் அன்பில் மகேஷ் செய்த காரியம்...! கடுப்பில் துர்கா ஸ்டாலின் விட்ட டோஸ்...

anbil magesh, udhayanithi
anbil magesh, udhayanithi

உதயநிதி ஸ்டாலின் அண்மையில் பேசிய சனாதன கருத்து தான் அனைத்து மாநிலங்களிலும் சனாதனத்தை மதிப்பவர்கள் மத்தியில் மிகவும் சர்ச்சையாக வெடித்துள்ளது, உதயநிதி தான் பேசியதில் உறுதியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளது மேலும் அகில இந்திய அளவில் மிகப்பெரும் பூகம்பமாக மாறி உள்ளது. அதாவது உதயநிதி ஸ்டாலின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போது சனாதனத்தை மலேரியா மற்றும் டெங்கு கொசுக்களோடு ஒப்பிட்டு பேசியதால் தற்போது இந்துக்கள் அனைவரும் கோபமடைந்துள்ள நிலையில் இதனை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தையும் செய்து வருகின்றனர் இப்படி ஒரு பக்கம் அனைவரும் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து வரும் நிலையில் மறுபக்கம் I.N.D.I.A கூட்டணியில் இருந்தும் திமுகவிற்கு பலத்த அடி கிடைத்துள்ளது.


அதாவது I.N.D.I.A கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்திமற்றும் ராகுல் காந்தி போன்றவர்கள் சனாதன கொள்கைக்கு  ஆதரவாக பேசி வரும் நிலையில் உதயநிதி பேச்சை கண்டித்து விமர்சிப்பது மட்டுமல்லாமல் இனிமேலும் இந்தியா கூட்டணியில் திமுக இருந்தால் அது இந்தியா கூட்டணிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று எண்ணி திமுகவை இந்தியா கூட்டணியில் இருந்து விலகி வைப்பதற்கு ப்ளான் செய்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது இதனால் தற்போது திமுகவிற்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் ஸ்டாலின் குடும்பத்தில் இருப்பவர்களும் உதயநிதி ஸ்டாலினை எச்சரித்ததாக தெரிகிறது மேலும் இதனால் ஸ்டாலின் குடும்பத்தில் பிரச்சனை உருவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் சனாதன எதிர்ப்பு பேச்சுக்கு அனைவரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில் இவற்றையெல்லாம் பார்த்து எனக்கு மிகவும் ஜோக்காக இருக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் அண்மையில் விமர்சனத்தை தெரிவித்தார் அத்தோடு விட்டு வைக்கவில்லை தனது ட்விட்டர் பக்கத்தில் கொசுவர்த்தி சுருள் படத்தை பதிவிட்டு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளார் அதாவது அண்மையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு கூட்டத்தில்  டெங்கு மலேரியாவை ஏற்படுத்தும் கொசுக்களை ஒழிக்க வேண்டும் என்பதை கூறியதற்கு ஏற்ப தற்போது அதனை ஒழிக்கும் கொசுவர்த்தி சுருளை பகிர்ந்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு சனாதனத்துக்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதியை கண்டித்து மாநிலங்கள் தோறும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டும் என்று பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளது இந்த நிலையில் கொசுவத்தி படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் விமர்சித்து வரும் நிலையில் உதயநிதி ஸ்டாலினின் நண்பர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி 'நீ விளையாடு நண்பா' என பதிவிட்டு  உதயநிதியை ஏத்திவிடும் தோணியில் பதிவிட்டுள்ளார். அத்தோடு சேர்த்து பையர் இமோஜியையும் விட்டுள்ளார், இது தற்போது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஏற்கனவே சனாதனத்தை பற்றி உதயநிதி பேசியது தற்போது திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதனை மூடி மறைக்காமல் ஊதி பெரிதாக்குவது முதல்வர் குடும்பத்திற்கு ஏக  கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் கூட 'ஏன் இப்படி செய்கிறீர்கள்? நான் ஏற்கனவே சொன்னதை கேட்க மாட்டீர்களா? என்று வேறு கடுமையாக திட்டியதாக சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.இவை அனைத்தும் உதயநிதிக்கு அரசியல் பின்னடைவு ஏற்படுத்தும் என முதல்வர் குடும்பம் குறிப்பாக முதல்வர் மனைவி கவலைப்படுவதாகவும் வேறு விமர்சகர்கள் கூறுகின்றனர்.