சனாதனம் குறித்து திமுகவில் இருக்கும் முக்கிய அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் அவதூறாக பேசியது தான் தற்போது இந்திய நாட்டில் சனாதனத்தை மதிக்கும் இந்துக்கள் மத்தியிலும் மற்றும் பாஜகவினரிடத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, இந்த நிலையில் உதயநிதியின் பேச்சை கண்டித்து வரிசை கட்டி இணையதளங்களிலும் சமூக ஊடகங்களிலும் தங்கள் கண்டனத்தை தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர் முக்கியமாக வட இந்தியாவில் இந்த சனாதன பேச்சு விவகாரம் மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது, வட மாநில இந்தியர்கள் உதயநிதியின் பேச்சுக்கு கொந்தளித்துள்ளனர். உதயநிதி சனாதனத்தை பற்றி பேசி ஒரு வாரத்திற்கு மேல் ஆகிய நிலையிலும் சனாதனம் குறித்த பேச்சு தான் அனைத்து செய்தி தொலைக்காட்சிகள் உட்பட சமூக வலைதளத்தில் பரவலாகி வருகிறது.உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை பற்றி பேசிய சர்ச்சை சற்று தணிந்து கொண்டு வரும் நிலையில் திமுகவில் உள்ள மற்றொரு முக்கிய அமைச்சரான ஆராசா சனாதனத்தை எச்.ஐவியோடு ஒப்பிட்டு பேசி மீண்டும் இந்த சர்ச்சையை அதிகப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
எனவே இப்படி தொடர்ச்சியாக சனாதனம் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தி வருவதால் இந்தியா கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி திமுகவை இந்திய கூட்டணியில் இருந்து விலக்கி வைப்பதற்கு முயற்சிகள் செய்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் சனாதனத்தை பற்றி பேசியதற்கு உதயநிதி ஸ்டாலின் நான் பேசியது சரிதான் என்பதில் உறுதியாக இருக்கும் நிலையில் கடலூர் மாவட்டத்தில் எம்எல்ஏ ராஜேந்திரனின் திருமண விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அதிமுக கட்சியையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். மேலும் மக்கள் மத்தியில் இருந்த பழைய வழக்கங்களான உடன்கட்டை ஏறுதல் பெண்கள் படிப்பதற்கு வெளியில் செல்லாமல் இருத்தல் ஆகியவற்றை எல்லாம் திமுக தான் ஒழித்தது என்று கூறியதோடு மட்டுமல்லாமல் சனாதனத்தை பற்றி திராவிட கழகத்தில் இருக்கும் அண்ணா பெரியார் கலைஞர் ஆகியோர் பேசிய பேசாததை எல்லாம் நான் பேசிவிடவில்லை என்று திமிராகக் கூறியதுடன் சனாதனம் என்பது இருநூறு ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது என்றும் இனி மேலும் இதைப்பற்றி பேசுவோம் என்றும் கூறியது தான் தற்போது அனைவரிடத்திலும் மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
மேலும் சனாதனத்தை இந்த நாட்டில் இருந்து ஒழித்து கட்டுவதற்கு தான் திமுக கட்சி இருக்கிறது என்றும் சனாதனத்தை ஒழித்து சமூக நீதியை நிலைநாட்டுவது தான் திமுகவின் மிகப்பெரிய கொள்கை என்று கூறியுள்ளார் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு சனாதனத்தை பற்றி எதிர்ப்பதற்கான முயற்சிகளில் முழுமையாக திராவிட கட்சி இறங்கும் என்று கூறியது தற்போது சனாதனத்தை ஆதரிப்பவர்கள் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சனாதனத்தை பற்றி பேசியதே தவறு என்ற பட்சத்தில் சனாதனத்தை முற்றிலும் ஒழித்து கட்ட வேண்டும் என்று உதயநிதி பேசியதோடு மட்டுமல்லாமல் பாஜக ஒரு கிலோ மீட்டர் ரோடு போடுவதற்கு 250 கோடி செலவு செய்துள்ளதாகவும் இறந்தவர்களுக்கு மருத்துவ காப்பீடு என்ற பெயரில் இறந்தவர்களின் பெயரில் மருத்துவ செலவு செய்துள்ளதாகவும் கூறி கடுமையாக தாக்கிப் பேசி உள்ளதால் தற்போது பாஜகவினர் கொந்தளித்து உள்ளனர்.இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசி வருவது சனாதனம் குறித்து பேசிவருவது முதல்வர் குடும்பத்தில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாகவும் இடதுசாரிகளின் பேச்சைக் கேட்டு உதயநிதி ஸ்டாலின் பேசுவதால் திமுகவிற்கு மிக பெரும் பின்னடைவை ஏற்படுத்தப் போகிறது என முதல்வர் மனைவி வருத்தப்பட்டுவருவதாகவும் சில தகவல்கள் கசிந்துள்ளன... மேலும் இதுகுறித்து பேசுவதற்கு முதல்வர் மனைவியும், உதயநிதி ஸ்டாலின் தாயாருமான துர்கா ஸ்டாலின் சற்று அதிருப்தியும் தெரிவித்திருப்பார் என்று வேறு அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.