ஆந்திர பிரதேசத்தின் திருப்பதி மாவட்டத்தை சேர்ந்த ரோஜா பிரேம தவசு படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். இதனை அடுத்து தமிழ் திரை உலகில் நடிகர் பிரசாந்துடன் நடித்து செம்பருத்தி படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை அடுத்து தொடர்ச்சியாக தமிழ் மற்றும் தெலுங்க என இரு மொழிகளிலும் அதிக படங்களின் நடித்து அவை அனைத்துமே நல்ல வரவேற்பை கண்டதால் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தார் மேலும் ரஜினிகாந்துடன் வீரா படத்திலும் அர்ஜுன் உடன் ஆயுத பூஜை படத்திலும் நடித்து புகழ்பெற்றார். அதிலும் குறிப்பாக ரோஜா நடித்த ஆன்மீக படங்கள் அனைத்துமே இன்றளவும் தமிழக தாய்மார்கள் மத்தியில் நிலைத்து பேசப்படுகிறது.
இப்படி 1991 முதல் 2000 ஆரம்பத்தில் வரை சினிமா துறையில் கொடி கட்டி பறந்த ரோஜா சினிமாவில் இருந்து விலகுவதாகவும் அரசியலில் இறங்கியுள்ளதாகவும் அறிவித்தார். முன்னதாக 1998இல் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்த ரோஜா தெலுங்கு மகிளா பிரிவின் தலைவராக இருந்தார். 2004 மற்றும் 2009 இல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட ரோஜா தோல்வியை பெறாததால் 2009 இல் ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி தலைமையினாலே இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். ஆனால் பிறகு ராஜசேகர் மறைவை ஒட்டி அவரது மகனால் தொடங்கப்பட்ட ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியிலும் இணைந்தார் ரோஜா.
இதற்குப் பிறகு 2019 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரோஜா 2022 சுற்றுலா கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் தற்பொழுது நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ரோஜா மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக அவரது கட்சியும் தோல்வியை சந்தித்து சோகத்தை மூழ்கியுள்ளது. முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டு பிறகு தனது உடல்நிலை காரணமாக அரசியல் பிரவேசத்திலிருந்து பின்வாங்கிக் கொண்டார். அதற்கு சூப்பர் ஸ்டாரை ஒரு மிகப்பெரிய இடத்தில் வைத்திருந்தேன் தற்போது அவர் ஜீரோவிற்கும் கீழ் சென்று விட்டார் என்று சூப்பர் ஸ்டாரின் அரசியல் மறுப்பை கடுமையாக விமர்சனம் செய்தார். இது சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியதை அடுத்து சமூக வலைதளத்தில் ரோஜாவை கடுமையாக ட்ரோல் செய்தனர். அதுமட்டுமின்றி லோக்சபா தேர்தலின் பிரச்சாரத்தின் பொழுது பல சவால்களையும் கண்டனங்களையும் முன்வைத்து வந்த ரோஜா தற்போது தோல்வியை தழுவி இருப்பதாலும் பெருமளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் திருச்செந்தூர் கோவிலுக்கு தரிசனத்திற்கு சென்ற ரோஜா செய்த விஷயம் சமூக வலைதளம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. அதாவது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருடாந்தோறும் பல திருவிழாக்கள் நடைபெறுகிறது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு வருடத்திலும் இரண்டு முறை வருடாபிஷேகம் நடைபெறும். அதன்படி ஆனி உத்திர வருடாபிஷேகம் நடைபெற்றதை ஒட்டி தரிசனத்திற்காக முன்னாள் நடிகையும் முன்னாள் அமைச்சருமான ரோஜா சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து சாமி தரிசனம் முடிந்த பிறகு வெளியே வரும்பொழுது அவரைப் பார்த்த கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் ரோஜாவை சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
அப்பொழுது கோவிலில் பணிபுரிந்து கொண்டிருந்த தூய்மை பணியாளர் இருவர் ரோஜாவை பார்த்த மிகுந்த சந்தோஷத்தில் ஆர்வமுடன் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள அவரை மிக அருகில் வர நெருங்க முற்பட்டனர். அப்போது அவர்களை சற்று தள்ளி நிற்குமாறு சைகையிலேயே ரோஜா காட்டி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.