24 special

அதிரடியாக மாற்றப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள்...பின்னணியில் திமுகவின் திட்டம் இதுவா?

mkstalin
mkstalin

திமுகவின் ஆட்சி என்றாலே அதிக வன்முறைகளும் கலவரங்களும் அராஜகங்களும் அதிகமாக இருக்கும் ஆட்சி என்ற ஒரு பேச்சு பொதுவாக இருந்து வந்தது. அந்த பேச்சை தற்போது உறுதிப்படுத்தும் வகையில் திமுக தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறது. ஏனென்றால் 2021 திமுக தனது ஆட்சி பொறுப்பை ஏற்றது. ஆனால் இன்று வரையிலும் தமிழக மக்களுக்கு பல அதிர்ச்சிகர செய்திகளையும் வன்முறைகளுமே இந்த திமுக ஆட்சியில் நிகழ்ந்து வந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மின்சார கட்டணத்தில் பல அதிரடி மாற்றங்களை செய்யப் போவதாக கூறிய திமுக, தொடர்ந்து மின்சாரத்தை அதிகப்படுத்தி மட்டுமே வருகிறது சமீபத்தில் கூட மீண்டும் மின்சார உயர்வை அதிகரித்தது உத்தரவு பிறப்பித்தது. 


இது போதாது என்று தொடர்ச்சியாக சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காட்சிப்பட்டு அதில் பல உயிரிழந்தனர் இந்த விவகாரத்திற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று திமுகவே விசாரணை நடத்துகிறது ஆனால் திமுகவின் நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்கள் அனைவருக்குமே இப்படி கள்ளச்சாராயம் விற்கப்படுவது தெரியும் என்றும் அது குறித்து கூறிய போலீஸ் அதிகாரியின் பேச்சையும் பொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்தி தற்போது மக்களின் உயிரைத் தான் காவு வாங்கியுள்ளது என்று மூத்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 

மேலும் சமீபத்தில் பகுஜன் சமாஜ் தேசிய கட்சியை மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் தமிழகத்தின் தலைநகரில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டதும், அவரின் கொலையை தொடர்ந்து டிஜிபி அதிரடியாக மாற்றப்பட்டதும், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதும் திமுக மீது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை தொடர்ந்து அதிமுக பாமக மற்றும் நாம் தமிழர் என தொடர்ச்சியாக அரசியல் தலைவர்கள் வெட்டிக்கொலை செய்யப்படுகின்ற சம்பவம் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்பதை தெள்ளத் தெளிவாக காட்டியது. இப்படி ஒரே மாதத்தில் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு பெரும் கேள்விக் குறியாக மாறியதால் திமுக என்ன செய்வதென்று தெரியாமல் தற்போது அதிரடியாக ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது. அதாவது சிட்கோ மேலாண் இயக்குனராக இருந்த எஸ் மதுமிதா பள்ளி கல்வித்துறை செயலாளராகவும், இதற்கு முன்பாக பள்ளி கல்வித்துறை செயலாளராக இருந்த குமரகுருபல் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராகவும், சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த ராதா கிருஷ்ணனை உணவு மற்றும் கூட்டுறவு துறைச் செயலாளராகவும் அந்த பதவியில் இருந்த கோபாலை கால்நடை பராமரிப்பு பால் மற்றும் மீன்வளத்துறை செயலாளராகவும் நியமித்துள்ளது. 

மேலும் உணவுப் பொருள் வளங்கள் ஆணையர் ஹர்சகாய் மீனாவை சிறப்பு முயற்சிகள் துறைச் செயலாளராகவும் கே வீரராகவராவ்வை தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறைச் செயலாளராகவும், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளராக இருந்த பிஹெச் குமாரை உள் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துணைச் செயலாளராகவும், உள் மற்றும் மதுவிலக்கு ஆயத்த தீர்வைத் துறை செயலாளராக இருந்த பி அமுதாவை வருவாய் துறை செயலாளர் ஆகவும் நியமித்துள்ளது திமுக அரசு. இவர்கள் மட்டுமின்றி கிட்டத்தட்ட 29 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக முழுவதும் இடமாற்றம் செய்த அறிவிப்பை தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ளார். 

திமுக அரசின் இந்த அதிரடி நடவடிக்கை சந்தித்துள்ள சட்ட ஒழுங்கு மாற்றுவதற்கான சிறு முயற்சி என்றும் இப்படி ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் டிஎஸ்பி களை அடிக்கடி மாற்றினால் நாம் நடவடிக்கைகளை எடுக்கிறோம் என மக்கள் நினைத்துக் கொள்வார்கள் என்பதை காட்டுவதற்காகவும் திராவிட மாடல் இந்த அதிரடி மாற்றங்களை செய்துள்ளதாக அறிவாலயத்திலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார்கள் எனவே இப்போதைக்கு அதிகாரிகள் மாற்றம் செய்யலாம் என ஒரு ரகசிய அறிக்கை வேறு முதல்வர் டேபிளுக்கு பறந்ததாக கிசுகிசுக்கப்படுகிறது...