இந்த வருடம் எப்படி திமுகவிற்கு கெட்ட நேரமாக உள்ளதோ அதேபோன்றுதான் கடந்த வருடத்திலிருந்து செந்தில் பாலாஜியின் கெட்ட நேரம் ஆரம்பித்தது. சட்டவிரோத பண பரிமாற்று தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி இதுவரை எந்த ஒரு அமைச்சரும் ஏறி இறங்காத படிகளை ஏறி இறங்கியுள்ளார். அதாவது அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்யும் பொழுது நெஞ்சுவலி என்று படுத்துக்கொண்ட செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்ற்கு பிறகு நேரடியாகவே புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்குப் பிறகு அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டது இந்த விசாரணையை எப்படியும் அமலாக்கத்துறை மேற்கொள்ளக்கூடாது என்பதற்காக செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பல வாதங்களை முன் வைத்தாலும் அமலாக்கத்துறை சோதனையில் கைப்பற்றிய பல ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை முன்வைத்து செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டது. இதனை அடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீனுக்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்கள் எங்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதிலேதே பெருமளவு குழப்பங்களை சந்தித்தார் செந்தில் பாலாஜி.
ஏனென்றால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றம் என இந்த மூன்று நீதிமன்றத்திலிமே செந்தில் பாலாஜியின் வழக்கு விசாரிக்கப்பட்டது. இதன் காரணமாகவே இவரது ஜாமீன் மனு பெறப்படுவதிலேயே இழுத்தடிக்கப்பட்டது. இதனை அடுத்தாவது செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறதா என்று பார்த்தால் இதுவரை அவரது நீதிமன்ற காவல் நீடிப்படைந்து கொண்டே செல்கிறதே தவிர ஜாமீன் கிடைத்த பாடில்லை. இதனை அடுத்து செந்தில் பாலாஜியின் தரப்பில் அவரது ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது அந்த மனு மீதான விசாரணை சமீபத்தில் நீதிபதி அபய் எஸ் ஓஹா முன்னிலையில் வந்த பொழுது இந்த வழக்கை தள்ளி வைக்க வேண்டுமென்று அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. அதற்கு கடுப்படைந்த செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இன்னும் எத்தனை காலம்தான் இப்படி இழுத்தடிக்க போகிறீர்கள் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதனை அடுத்து செந்தில் பாலாஜியின் ஜாமின் மீதான வழக்கு உச்ச நீதிமன்றம் ஜூலை 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
ஏனென்றால் இந்த வழக்கில் செந்தில் பாலாஜி குற்றவாளி என்பதும் நிரூபிக்கப்படவில்லை இவருக்கு தண்டனை எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் இவை அனைத்தும் உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்பாகவே கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக செந்தில் பாலாஜி சிறை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அதற்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு நீதிபதி அல்லி முன்பு நேரடியாக ஆஜர் படுத்தப்பட்டார்.
அப்பொழுது நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் வங்கி ஆவண நகலை செந்தில் பாலாஜி தரப்பிடம் அமலாக்கத்துறை வழங்கியதை அடுத்து கையெழுத்தை பெற்றுக்கொண்டது. இதனை அடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீதிபதி அல்லி ஜூலை 18ஆம் தேதி வரை நீட்டி உத்தரவிட்டார். இப்படி செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படுவது 47 வது முறையாகும். மேலும் நாளையும் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படும் இப்படியே தொடர்ந்து இன்னும் மூன்று முறை செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிக்கப்பட்டால் அவர் ஹாப் செஞ்சரி அடித்து விடுவார் என இணையத்தில் கேலி கிண்டல்கள் முளைத்துள்ளது. மேலும் திமுக தரப்பிலும் செந்திபாலாஜியை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள், தலைமை குடும்பமும் இப்பொழுது மகனுக்கு துணை முதல்வர் வழங்குவதில் குறியாக உள்ளார்கள் இப்படியே போனால் அண்ணன் என்ன ஆவது? என கரூர் கேங்க் கலந்தாலோசித்து வருவதாகவும் விரைவில் தலைமை குடும்பத்தை நெருங்கி எதாவது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது....