தமிழகத்தில் கடந்த சில நாட்களாக செந்தில் பாலாஜி குறித்த அமலாக்க துறை ரெய்டு மற்றும் ஆளும் கட்சி முன்னெடுத்த சில பிரச்சனைகள் பேசு பொருளாக இருந்த நிலையில் தற்போது அதை அப்படியே மாற்றி மீண்டும் தேசிய அரசியலில் திமுக உள்ளிட்ட கட்சிகள் கவனம் செலுத்தவும் போராட்டங்களை முன்னெடுக்கவும் அலற விட்டு இருக்கிறார் பிரதமர் மோடி.இவை அனைத்திற்கும் பிரதமர் மோடி பொது சிவில் சட்டம் குறித்து பேசிய ஒற்றை வார்த்தையே காரணமாக பார்க்க படுகிறது.
இன்று மத்திய பிரதேசத்தில் பேசிய பிரதமர் மோடி, முத்தலாக்கை ஆதரிப்பவர்கள் முஸ்லிம் பெண் குழந்தைகளுக்கு அநீதி இழைக்கிறார்கள். மேலும் பொது சிவில் சட்டம் என்ற பெயரில் இன்று சிலர் மக்களை தூண்டுகின்றனர். ஒரு நாட்டை எப்படி 2 சட்டங்கள் கொண்டு நடத்த முடியும்?.அரசியலமைப்பு சட்டம் என்பது சமஉரிமை பற்றி பேசுகிறது.
உச்சநீதிமன்றமும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த கூறியுள்ளது. பொது சிவில் சட்ட விஷயத்தில் எதிர்க்கட்சியினர் விளையாடுகின்றனர். இந்த விஷயத்தில் எதிர்க்கட்சியினர் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொது சிவில் சட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும்
எந்த மதம், சமூகத்தை சேர்ந்த மக்களும் பொது சிவில் சட்டத்தை எதிர்க்க கூடாது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் எதிர்க்கட்சிகள் கூட பொது சிவில் சட்டத்தை எதிர்க்க கூடாது. நாட்டில் வாக்குவங்கி அரசியல் செய்பவர்களால் பாஷ்மாண்டா முஸ்லிம் மக்களின் வாழ்க்கை கடினமாதாக மாறி இருக்கிறது. அவர்கள் சமமாக நடத்தப்படாத நிலை உள்ளது. அவர்கள் சொந்த சமூகத்தை சேர்ந்தவர்களாளே சுரண்டப்படுகின்றனர்'' என்றார் பொது சிவில் சட்டத்தை இந்தியாவில் அமல்படுத்துவது என்பது பாஜகவின் தேர்தல் வாக்குறுதியில் ஒன்றாகும்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பொது சிவில் சட்டம் குறித்து கருத்து கேட்பு மீண்டும் தொடங்கி உள்ளது. ஏற்கனவே ஒரு முறை கருத்து கேட்பு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இது 2வது முறையாக நடக்கிறது.பிரதமர் மோடி இன்று ஊழல் செய்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள் என கூறியதும் எதிர் கட்சிகள் கூட எதிர்க்க கூடாது நிலையில் பொது சிவில் சட்டம் வரவேண்டும் என பேசியது, பொது சிவில் சட்டத்தை எதிர்த்து காத்து இருந்த பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
அதே நேரத்தில் இனி பொது சிவில் சட்டத்தை கொண்டுவர கூடாது என எதிர் கட்சிகள் நாளை முதலே போராட்டத்தில் இறங்கலாம் என்றும் கருத்த படுவதால் நாடாளுமன்ற தேர்தல் அரசியல் களம் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது.