24 special

A2b சில்லரை வேலை செய்ததா...? வெளிவரும் பல உண்மைகள்...?

srinivasa raja
srinivasa raja

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய முன்னணி தொடர் சைவ உணவகங்களில் ஒன்றாக இயங்கி வருகிறது அடையார் ஆனந்த பவன் எனும் உணவகம், இதன் சுருக்கமாக ஏ டு பி என இளைஞர்களாலும் ஆனந்த பவன் பெரியோர்களாலும் அழைக்கப்படும் இந்த உணவகம் 1979 ஆம் ஆண்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் துவங்கப்பட்டது. ராஜபாளையத்தை சேர்ந்த திருப்பதி ராஜாவால் தொடங்கப்பட்ட இந்த உணவகம் தற்பொழுது தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் கிட்டத்தட்ட 150 கிளைகளை கொண்டுள்ளது, கிட்டத்தட்ட 12 ஆயிரம் பேர் இந்த உணவகங்களில் பணியாளர் பணியாற்றி வருகின்றனர். 


இந்த நிலையில் இந்த உணவகத்தின் உரிமையாளர் சீனிவாச ராஜா அண்மையில் ஒரு youtube சேனலுக்கு பேட்டியளித்திருந்தார்.அந்த பேட்டியில் பேட்டியெடுக்கும் சித்ரா லட்சுமணன் கேள்வி எழுப்பும் பொழுது 'ஒரு காலத்தில் சைவ உணவகம் என்பது பெரும்பாலும் பிராமணர்கள் கையில் இருந்தது, அதன் பிறகு மெல்ல மாறுதல் ஏற்பட்டது எப்படி இது? என கேள்வி எழுப்ப அதற்கு பதில் அளித்த a2b உணவாக உரிமையாளர் சீனிவாச ராஜா 'யாரு வேண்டுமானாலும் இந்த செய்யலாம் என்ற நிலை வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் தந்தை பெரியார் தான்' என பதிலளித்தார். 

மேலும் அவர் கூறும் பொழுது 'தந்தை பெரியார் தான் குலத்தொழில் முறையை மாற்றி காட்டியவர், எந்த தொழிலையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என சொன்னார் காலம் மாறுகிறது, அரசின் ஆதரவு கிடைக்கிறது, வங்கிகள் கடன் கொடுக்கின்றன ஒரு குறிப்பிட்ட சமுதாய மட்டும் செய்து வந்த தொழிலை யார் வேண்டுமானாலும் செய்யலாம். கடலில் யார் வேண்டுமானாலும் மீன்பிடிக்கலாம்' என வேறு கூறினார். இந்த விவகாரம் தான் தற்பொழுது சமூக வலைதளங்களில் தீயாக பரவுகிறது, பொதுமக்கள் பலரும் விரும்பும் ஒரு உணவக உரிமையாளர் இதற்கு காரணம் ஈவேரா தான் எனக் கூறியதும் மேலும் இந்த உணவக உரிமையாளர் ஈவேரா பற்றி பெருமையாக கூறியதும் வலதுசாரிகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாங்கள் அந்த உணவகத்திற்கு தேடி வந்தது நல்ல உணவு சுவைக்காகத்தான் அதை விடுத்து உங்களுடைய எண்ணத்தை எல்லாம் இதில் புகுத்த வேண்டாம், உங்களுக்கு கட்சி சார்பாக இயங்க வேண்டும், கட்சி சார்பாக இருக்க வேண்டும் என்றால் கட்சி பெயரை வைத்திருக்க வேண்டும். எதற்கு அடையார் ஆனந்த பவன் என சொல்லிவிட்டு உள்ளே சாமி படங்களை வைத்துக்கொண்டு இப்படி ஈவேரா பற்றி பேசுகிறீர்கள் உள்ளே இருப்பது வெங்கடாஜலபதி ஆனா பேசுவது ஈவேராவா என பல விமர்சனங்களை இணையதளத்தில் முன்வைத்து வந்தனர் இணையதள வாசிகள். இந்த நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் திமுக எம்பி கனிமொழியும் இந்த வீடியோவை twitter இல் பகிர்ந்து ஏ டு பி உரிமையாளர் ராஜாவின் பேச்சுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

'உண்மையை பேசியதற்கு நன்றி' என அவர் குறிப்பிட்டு உள்ளார் மேலும் ஏற்றி உணவகத்தை பற்றி கனிமொழி பெருமையாக கூறிய விவகாரம் தற்பொழுது இணையத்தில் சூடு பிடித்துள்ளது. இது மட்டுமல்லாமல் மேலும் ஒரு வீடியோ இணையங்களில் தற்பொழுது வைரலாகிறது, அதில் அடையாறு அனந்தபவன் உணவகத்தில் உணவு வாங்கி அதில் ஒரு புழு கிடைப்பது போன்ற ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக உலா வருகிறது. 

இந்த வீடியோ சில தினங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட காரணத்தினால் தான் எங்கே 'ஏ டு பி' பெயர் அடிபட்டு விடுமோ என பயந்து இது போன்ற ஒரு பேட்டியை உணவாக உரிமையாளர் கொடுத்துவிட்டார் எனவும் சிலர் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர் இணையவாசிகள்.இதற்கு 'ஏ டு பி' தரப்பில் விளக்கம் அளிக்கப்படுமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டு வருகிறது.