Cinema

லியோ படத்தின் நெகட்டிவ் விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர்!

actor vijay
actor vijay

நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் ‘லியோ’ படம் (வியாழன், அக்டோபர் 19) அன்று ரசிகர்களின் பெருத்த ஆரவாரத்திடையே வெளியானது . இதில் நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ . திரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.


படத்தை கண்ட ரசிகர்கள் படம் கைதி, விக்ரம் போன்று எதிர்பார்த்த எந்த இடத்திலும் பூர்த்தி செய்யவில்லை என்று விமர்சனத்தை முன் வைத்தனர். லோகேஷின் முதல் படமான மாநகரம், கார்த்தி நடித்த கைதி, கமல்ஹாசனின் விக்ரம் ஆகியவை மேக்கிங் மட்டுமின்றி, கதை, திரைக்கதை போன்றவைகள் சிறப்பாக அமைந்ததால் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. ஆனால், லியோ படத்தில் லோகேஷின் ஸ்க்ரிப்ட் சுத்தமாக எடுபடவில்லை என ரசிகர்களே கூறி வந்தனர். முன்னதாக இருவரது கூட்டணியில் வெளியான மாஸ்டர் படத்திலும் விஜய் லோகேஷ் கனகராஜியிடம் கதையை மற்ற சொன்னதுபோல் சில பேச்சுக்கள் அடிபட்ட்டது.

அதேபோன்று லியோ படத்திலும் அதுபோன்று விஜி கூறியதாக தகவல் வந்து கொண்டு இருக்கின்றன. அதாவது முதல் பாதி விறுவிறுப்பாக சென்றது, ஆனால், இரண்டாம் பாதி எதற்காக படத்தை பார்க்க வந்தோம் என்று ரசிகர்கள் என்னும் அளவிற்கு உள்ளதாக கூறுகின்றனர்.விஜய்க்காக லோகேஷ் இந்த படத்தில் கதையை மாற்றியிருக்கலாம் அதனால் தான் படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை மகிழ்ச்சியில் தள்ளப்படவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக லியோ பட தயாரிப்பாளர் லலித் குமார் ஒப்புக்கொண்டுள்ளார். இதுபற்றி அவர் கொடுத்த பேட்டியில் லியோ கதையில் விஜய் கரெக்‌ஷன் சொன்னது பற்றி மனம் திறந்துள்ளார்.

லலித்குமார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது பீஸ்ட் படம் வெளியானதும் லியோ படத்தை எடுக்க ஆரம்பித்தோம். அப்போது லோகேஷ் கனகராஜ் உலக நாயகன் கமல்ஹாசன் உடன் விக்ரம் படத்தில் இருந்ததால் விஜயும் வாரிசு படம் முடித்து விட்டு லியோ-விற்கு நடிக்க தயாராகினர். லோகேஷ் கன்ஜகராஜ் விஜயிடம் கதை சொல்லியதும் சில மாற்றத்தை அவர் சொன்னார்.அதன்பிறகு விஜய் சொன்ன கரெக்‌ஷனை லோகேஷ் செய்துவிட்டு ஷூட்டிங் சென்றதாகவும் லலித் குமார் தெரிவித்துள்ளார். முக்கியமாக மார்க்கெட் ஃபைட் சீன் தரமாக இருந்தது. அதனால் அதில் இன்னும் கொஞ்சம் இருக்கலாம் என விஜய் கூறினார். அதன்பின்னர் லோகேஷ் அந்த இடத்தில் இன்னும் கொஞ்சம் காட்சிகளை சேர்த்தார்.

இப்படி பல இடங்களில் விஜய்யுடன் நடந்த ஆலோசனையில் அவர் சொன்னபடி தான் லியோ ஸ்க்ரிப்ட் மாற்றப்பட்டதாக லலித் குமார் கூறியுள்ளார். தற்போது இதுதான் லியோ தோல்விக்கு காரணம் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகினனர்.இதனால் லோகேஷ் சினிமாவில் மற்ற இயக்குனர்கள் போல் மாற்றிவிட்டதாக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இப்பொது உண்மை அரிது சாரி லோகேஷ் என்று மன்னிப்பு கேட்க தொடங்கியுள்ளனர். விஜய்க்கு இந்த படம் தோல்வி பெற காரணம், படத்தின் பெயரை மாற்றியிருந்தால் நன்னடராக இருக்கும் என்றும் கூறி வருகின்றனர். அதாவது விஜய் விலங்குகளின் பெயரை வைத்த எந்த படமும் வெற்றி பெறவில்லை என்றும் அந்த வகையில் லியோ படமும் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.