24 special

களத்துல ரிப்போர்ட் சரியில்ல...! எல்லாம் கையை விட்டு போய்டும்...!அறிவாலய மேசையில் விழுந்த பைல்..! கொடியில் கை வைத்த பின்னணி...!

annamalai, amarprasad
annamalai, amarprasad

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் வீடு சென்னை பனையூரில் அமைந்துள்ளது, பனையூர் அண்ணாமலை அவரது வீட்டில் 45 அடி உயரக் கொடிக்கம்பம் ஒன்று நடுவதற்கு அப்பகுதியின் பாஜக கிளை தலைவர் ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிலையில் அந்த கொடி கம்பம் முழுமை பெறாத நிலையில் அந்த கொடி கம்பம் இருப்பது இடையூறாக இருக்கிறது என சிலர் கொடுத்த புகாரை வைத்துக்கொண்டு காவல்துறையினர் நேற்று இரவோடு இரவாக அந்த கொடி கம்பத்தை அகற்ற வந்தனர். அதன் பின்னர் பாஜகவினர் அங்கு குவிந்ததால் கொடி கம்பம் அகற்றுவதில் பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் சிறு போராட்டம் ஏற்பட்டது.


பின்னர் பாஜகவினரை அடித்து அப்புறப்படுத்திவிட்டு விடியற்காலை 4 மணிக்கு அந்த கொடி கம்பத்தை அகற்றி உள்ளனர் காவல்துறையினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது, இதற்க்கு பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை வலுவாக பதிவிட்டுள்ளார், இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறும் பொழுது 'திமுக அரசின் உத்தரவின்பேரில் நள்ளிரவில் கொடிக்கம்பத்தை அகற்ற வந்த காவல்துறையினரை, எதிர்த்து போராடிய பாஜக சகோதர சகோதரிகள் மீது காட்டுமிராண்டி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். 

பொதுமக்களை ஏய்த்து பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் திமுக எங்கள் தொண்டர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பெரும் விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்பதை சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அதிகாரத் திமிறில் ஆராஜகம் செய்து கொண்டிருக்கும் திமுக தமிழக பாஜகவின் ஒரு கொடி கம்பத்தை வீழ்த்தி விட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம், நவம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 கொடி கம்பங்கள் நடப்படும் எனக்கூறி பிப்ரவரி 8ஆம் தேதி பத்தாயிரம் ஆவது கொடிக்கம்பம் நடப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான விவின் பாஸ்கரனை வைத்து பனையூரில் மீண்டும் கொடிக்கம்பம் திறக்கப்படும்' என தெரிவித்தது பரபரப்பு ஏற்படுத்தியது.

ஏன் இந்த கொடி கம்பத்திற்கு இவ்வளவு பரபரப்பு என கமலாலயத்தில் சிலரிடம் கேட்ட பொழுது திமுக அரசு காழ்புணர்ச்சியின் காரணமாக இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்றனர். ஆனால் இது குறித்து சில அரசியல் விமர்சனங்களிடம் பேசியபோது தற்பொழுது திமுக அரசு பின்னடைவை சந்தித்து வருகிறது, அதன் காரணமாக வரும் தேர்தல்களில் அது எதிரொலிக்கும் அப்படி எதிரொலிப்பது திமுகவிற்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும்  இதற்கு முன்பெல்லாம் திமுகவிற்கு வாக்கு இல்லை என்றால் அது அதிமுகவிற்கு செல்லும், அதிமுகவிற்கு இல்லை என்றால் அது திமுகவிற்கு செல்லும் ஆனால் தற்பொழுது திமுகவின் அதிருப்தி வாக்குகள் அனைத்தும் பாஜகவிற்கு செல்ல போகிறது என்ற அறிக்கையே இந்த நடவடிக்கைக்கு காரணம் என்கின்றனர். 

மேலும் பாஜக யாத்திரை, அண்ணாமலையின் எழுச்சி போன்றவற்றால் வேகமாக பாஜக வளர்ந்து வருவது திமுகவிற்கு பின்னடைவு என இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும் சம்பவம் நடந்த மாலை பாஜகவின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த அமர் பிரசாத் ரெட்டி யாத்திரையின் முக்கிய ஒருங்கிணைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பின்னர் அரசியல் அழுத்தம் இருக்கிறது, இதனால் யாத்திரை பின்னடைவை சந்திக்கும் என திமுக அரசியல் செய்ததாக பாஜகவினர் கூறுகின்றனர்.