24 special

நிஜத்திலும் நடிகனாக அவதாரம் எடுத்தாரா ரஜினிகாந்த் ..? இந்த ஆதாரம்போதுமே..!

Rajinikanth, Stalin, Sasikala
Rajinikanth, Stalin, Sasikala

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக சிம்மாசனம் போட்டு அந்த இடத்தை யாருக்கும் விட்டு கொடுக்காமல் கால் மேல் கால் போட்டு அமர்ந்துள்ளார்.  தொடர்ச்சியாக ஆறு படங்களை தனது வரிசையில் வைத்து உள்ளார். தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த். கடந்த சில மாதமாகவே ரஜினிகாந்த் பேசுவது எல்லாம் பேசு பொருளாக உள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது சினிமாவில் இருந்து கொண்டு அரசியலில் நடிகனாக மாறி பேசுவது விமர்சனமாக மாறியுள்ளது.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவதாகக் சில ஆண்டுகளாக கூறி வந்தார். அதற்கான வேலைகளும் செய்து வந்தார். குறிப்பாக ரசிகர்கள் மூலம் ஆலோசனைகளை மேற்கொண்டு வந்தார். மக்களுக்கும் மாற்றத்தை எதிர்பார்த்து ரஜினிகாந்துக்கு வரவேற்பு கொடுத்து எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால், அரசியல் தமாகு செட் ஆகாது என்று எண்ணி உடல்நலத்தை மனதில் வைத்து அரசிஅயலுக்கு தான் வரப்போவதில்லை என கூறியிருந்தார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் இருந்து ரஜினிகாந்த் பேசுவது சர்ச்சையாக இருந்தது.

சமீபத்தில் லால் சலாம் படத்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அப்பாவை சங்கி என்று அழைக்காதீர் என கூறியதற்கு ரஜினிகாந்தின் விளக்கம் கொடுத்திருந்தார் அது இணையத்தில் பெரியதாக பேசப்பட்டது. அதற்கு முன்னதாக விஜய்யை மறைமுகமாக ரஜினிகாந்த் காக்கா கதையை கூறியிருந்தார். அதுவும் பெரிய சர்ச்சையாக மாறியது இது இணையத்தில் விஜய்-ரஜினி ரசிகர்கள் மாறி மாறி சண்டை போட்டு வந்தனர். ரஜினிகாந்த் நிகழ்ச்சி மற்றும் பட விழாவில் கலந்துகொள்வது வழக்கமாக வைத்துள்ளார் அதில் அவர் பேசுவது தவளை தன் வாயால் கெடும் என்பது போல் ரஜினிகாந்த் மாட்டிக்கொள்கிறார்.

சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் மறு சீரமைக்கப்பட்டு சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். நடிகர் ரஜினிகாந்தும் இந்த விழாவில் கலந்துகொள்ள வந்திருந்தார். அவரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஓடோடி வந்து வரவேற்றார். அதன் பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் அருகே அமர்ந்த ரஜினிகாந்த் பேசினார். நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் " இதை கலைஞர் நினைவிடம் என்று கூறுவதை விட கலைஞரோட தாஜ்மஹால் என்றே கூறலாம்" என கூறினார். ரஜினிகாந்த் இப்படி பேசியது திமுக நிர்வாகிகளிடம் பூரிப்பை ஏற்படுத்தியது. இணையவாசிகளிடம் ரஜினியின் கருத்து கவனத்தை ஈர்த்தது.

இதே ரஜினிகாந்த் தான் அதிமுகவை சேர்ந்த சசிகலா போயஸ் கார்டனில் வீடு ஒன்றை கட்டினார் புகுமனை புகுவிழாவிற்கு சென்ற ரஜினிகாந்த் " வீட்டை கோவில் மாதிரி கட்டிருக்கிங்க" என கூறினார். முன்னதாக சசிகலா வீட்டை பார்த்து கோவில் என்று சொன்ன நிலையில், கலைஞர் நினைவிடத்தை தாஜ்மஹால் வேண்டும் பேசியுள்ளது ரசிஜினிகாந்தை கிண்டலடிக்க தொடங்கியுள்ளனர் நெட்டிசன்கள். அதாவது, ரஜினியாகாந்த் அரசியல் கட்சி தொடங்கவில்லையென்றாலும் அரசியல் கட்சியில் இணையவில்லை என்றாலும் அரசியல் தலைவர்களே தொற்று போகும் அளவுக்கு இடத்திற்கு ஏற்றார் போல் ரஜினிகாந்த் பேசுவதாக கிண்டலடித்து வருகின்றனர்.

அதிமுக மனம் குளிர சசிகலாவை பார்த்து வேட்டை கோவில் போல் இருப்பதாகவும், திமுகவினரின் மனம் குளிர நினைவிடத்தை தாஜ்மஹால் போல் பேசுவதும் என் நிஜத்திலும் ரஜினிகாந்த் மிக சிறப்பான நடிகனாக இருப்பதாக கலாய்த்து வருகின்றனர். முன்னதாக லால் சலாம் படத்தின் போது மதம் வாதத்திற்கு எதிராக வசனம் பேசிவிட்டு முதல் ஆளாக ராமர் கோவில் விழாவில் கந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.