கடந்த சில நாட்களாகவே தமிழக அரசு ஜிஎஸ்டி குறித்தும் மத்திய அரசு ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் வரி பங்கிட்டு தமிழகத்திற்கு உரிய தொகை வழங்கவில்லை உரிய நிவாரணத் தொகைகளை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே வருகிறது அதிலும் சமீபத்தில் நடைபெற்ற வெள்ள பாதிப்பின் பொழுதும் மத்திய அரசு மாநில அரசுக்கு எதுவும் செய்யவில்லை ஒரு ரூபாய் கூட தரவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்துக் கொண்டே வருகிறது ஆனால் தற்போது வெளியாகி உள்ள சில தகவலும் ஜிஎஸ்டி குறித்தும் ஜிஎஸ்டியில் பெறப்படும் வரி எப்படி பகிரப்படுகிறது என்ற தகவலையும் முழுமையாக ஒரு இளம் பெண் பேசிய வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அதாவது 2017க்கு முன்பு வரை பொருள்கள் மீதான வரியில் மத்திய அரசின் உற்பத்தி மற்றும் சேவை வரி மாநில அரசின் மதிப்பு கூட்டு வரி என்ற இரண்டு வரிகள் இருந்தது அதற்கு பிறகு அனைத்து மாநிலங்களிலும் அதாவது ஒட்டுமொத்த நாட்டிலும் ஒரே விதமான வரி கணக்கீடு மற்றும் வரிப்பதிவு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக தலைமையிலான அரசு சரக்கு மற்றும் சேவை வரியை அறிவித்தது.
இது ஒரு மறைமுக வரி ஆகும். இன்னும் எளிதாக கூறப்போனால் மத்திய மற்றும் மாநில அரசுகளால் விதிக்கப்படுகின்ற பல்வேறு வரிகளுக்கு பதில் ஒற்றை வழியாக அறிமுகப்படுத்தப்பட்டது தான் சரக்கு மற்றும் சேவை வரி! இதை ஜிஎஸ்டி சபை மற்றும் அதன் தலைவர் மத்திய நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் அவர்களால் நிர்வகிக்கப்படுகிறது இந்த வரியின் கீழ் பலவிகிதங்களில் பல பொருட்களுக்கு வரிகள் விதிக்கப்படுகிறது அப்படி விதிக்கப்படுகின்ற சதவிகிதத்தின் சரி பாதி மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு பொருளின் மீது ஐந்து சதவிகிதம் வரி சரக்கு மற்றும் சேவை வரியாக மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது என்றால் இந்த ஐந்து சதவிகிதத்தில் 2.5 சதவிகிதம் மத்திய அரசிற்கும் மீதம் இருக்கும் 2.5 சதவீதம் மாநில அரசிற்கும் வரி பகிர்வு கொடுக்கப்படுகிறது. அதோடு தற்போது இந்த சரக்கு மற்றும் சேவை வரி பல மாற்றங்களுக்கு உட்பட்டு கடை உரிமையாளர்கள் என் அனைவருக்கும் எளிதாக பயன்படுத்தப்படும் வகையில் அமைந்துள்ளது.
இருப்பினும் சாமானிய மக்களிடம் இதுகுறித்த முழுமையான புரிதல் இல்லாமல் இருப்பதால் சில மாநில அரசுகள் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தொடர்ச்சியாக மத்திய அரசின் மீது குற்றம் சாடியே வருகிறது. உதாரணமாக மத்திய அரசு அதன் தலைமையில் இயங்கி வரும் மாநில அரசுகளுக்கு அதிக வரி பகிர்வினை கொடுப்பதாகவும் பாஜக தலைமை இல்லாத மாநில அரசுகளுக்கு வஞ்சகம் செய்வதாகவும் திமுக உள்ளிட்ட பாஜக அல்லாத சில மாநில அரசுகள் மத்திய அரசை குற்றம் சாடி மக்களையும் தவறான முறையில் வழி நடத்தியது. இவற்றை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் எது உண்மை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் தற்போது வணிகத்தில் முதுகலை பட்டம் பெற்ற ஒரு இளம் பெண் சரக்கு மற்றும் சேவை வரியை குறித்தும் அந்த சேவை வரி மக்களிடமிருந்து பெறப்பட்ட பிறகு எவ்வளவு சதவிகிதம் மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது எவ்வளவு சதவிகிதம் மாநில அரசருக்கு மத்திய அரசு கொடுக்கிறது என்பதை தெளிவு தெளிவாக கூறியுள்ளார். இது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது ஏனென்றால் அந்த வீடியோவில் ஒரு மாநிலத்திலிருந்து சரக்கு மற்றும் சேவை வரியாக எடுத்துக்காட்டிற்கு இரண்டு லட்சம் ரூபாய் பெறப்படுகிறது என்றால் அதில் ஒரு லட்சம் மத்திய அரசும் மற்றும் ஒரு லட்சத்தை மாநில அரசும் பிரித்துக் கொள்கிறது அதாவது சமமாக பிரித்துக் கொள்கிறது.
இதனை அடுத்து மாநில அரசு தன் பங்கில் பெற்றுள்ள ஒரு லட்சம் ரூபாயின் 59% எந்த மாநிலத்தில் இருந்து அந்த வரியை பெற்றதோ அதே மாநிலத்திற்கு வேண்டிய சேவைகளையும் நலத்திட்ட உதவிகளையும் செய்வதற்கு செலவழிக்கிறது மீதமுள்ள 41% அதே மாநில அரசிற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்துகின்ற திட்டங்களுக்கு செலவிடுகிறது மத்திய அரசு என அந்த இளம் பெண் கூறியுள்ளார், அதன்படி பார்த்தால் மத்திய அரசு ஒரு மாநிலத்தில் இருந்து பெறும் ஜிஎஸ்டி வரியை முழுவதுமாக அதே மாநிலத்திற்கு தான் செலவழிக்கிறது மற்றும் நேரடியாக மாநில அரசுக்கும் கொடுக்கிறது. மேலும் இதற்கு இத்தனை நாளா இது தெரியாம மாநில அரசு கூட சேர்ந்து நாமளும் மத்திய அரசு தப்பா நினைச்சுட்டோமே என பல கமெண்ட்டுகள் முன்வைக்கப்படுகிறது.