ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பில் முறைகேடு செய்ய நினைத்த திமுக கவுன்சிலரை பொதுமக்களில் ஒருவர் கேள்வி கேட்ட நிலையில் அவருக்கு திமுகவை சேர்ந்த பெண் நிர்வாகி கன்னத்தில் அறையை அடுத்த சில மணி நேரங்களில் அதிரடி மாற்றங்கள் உண்டாகி இருக்கிறது.தமிழக அரசு சார்பில் நேற்று முதல் வேஷ்டி, சேலை கரும்புடன் பொங்கல் தொகுப்பு தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 47 வார்டு, காட்டுபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் விஜயாபுரம் நகர கூட்டுறவு கடன் மூலமாக செயல்பட்டு வரும் நியாய விலை கடையில் முதல் 30 டோக்கன்களுக்கு மட்டும் வேஷ்டி, சேலையுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டதாகவும் அதன் பிறகு வந்தவர்களுக்கு வேஷ்டி மட்டும் வழங்கப்பட்டதாகவும், சேலை இன்று இல்லை நாளை வந்து வாங்கிக் கொள்ளுமாறு நியாய விலை கடை விற்பனையாளர் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் அப்பகுதி தி.மு.க. கவுன்சிலரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.
மேலும் நியாய விலை கடை ஊழியரிடம் இது குறித்து நாகராஜ்ன் கேட்டுக் கொண்டுருந்த பொழுது அப்பகுதியைச் சேர்ந்த தி.மு.க. மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ஆனந்தி மற்றும் அவரது மகன் ஆகியோர் நாகராஜை தகாத வார்த்தைகளை பேசியதாகவும், கைகளால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.இதைத்தொடர்ந்து நாகராஜ் அப்பகுதியில் உள்ள பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட ஆனந்தி மற்றும் அவரது மகனும் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து ஓட்டம் எடுத்து இருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து இந்து அமைப்பினர் நியாய விலை கடை விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து அந்தப் பகுதிக்கு வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, பிரச்சனை தொடர்பாக பொதுமக்கள் மற்றும் விற்பனையாளரிடம் கேட்டனர்.இதன் பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் வேஷ்டி, சேலையுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தால் திமுகவினர் மீது பொதுமக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டதுசேலையை ஆட்டைய போட நினைத்த திமுகவினருக்கு சரியான ஆள் என்றால் அது பாஜகத்தான் பாஜகவை பார்த்தால் தான் திமுக காரன் பயப்படுறான் என அங்கு பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க வந்த இஸ்லாமிய பெண்களே வெளிப்படையாக பேசியது குறிப்பிடத்தக்கது.