24 special

விஷாலை பலி வாங்கியதா திமுக...?

vishal , modi
vishal , modi

சென்னையில் மிக்ஜம் புயலால் பெய்த கனமழையால் சென்னை நகரம் முழுவதும் வெள்ள நீரில் மூழ்கியது. பொதுமக்கள் முதல் பல திரை உலக பிரபலங்கள் வரை அனைத்து சென்னை வாசிகளும் வெள்ள நீரில் தத்தளித்தனர் சிலர் உதவிகளை கேட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டனர் சிலர் சென்னையில் அவலம் குறித்து அரசின் நடவடிக்கைகளை குறித்தும் விமர்சனங்களை முன் வைத்தனர். அந்த வகையில் நடிகர் விஷால் சென்னையில் ஏற்பட்ட மழை பாதிப்பை குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில், அன்புள்ள திருமதி பிரியா ராஜன் மற்றும் ஒரு & பெரு சென்னை மாநகராட்சி ஆணையர் உட்பட மற்ற அனைத்து அதிகாரிகளுக்கும். நீங்கள் அனைவரும் பாதுகாப்பாகவும், உங்கள் குடும்பத்தினருடன் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன், குறிப்பாக வடிகால் நீர் உங்கள் வீடுகளுக்குள் நுழையாது மற்றும் மிக முக்கியமாக, உங்களுக்கு நிபந்தனையற்ற உணவு மற்றும் மின்சாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.


நீங்கள் இருக்கும் அதே நகரத்தில் வசிக்கும் குடிமக்கள் என ஒரு வாக்காளராகச் சரிபார்த்தால், நாங்கள் அதே நிலையில் இல்லை. மழைநீர் வடிகால் திட்டம் முழுவதும் சிங்கப்பூருக்காகவா அல்லது சென்னைக்காகவா?2015 ஆம் ஆண்டில், துன்பத்தில் உள்ள மக்களுக்கு உதவ நாங்கள் சாலைக்கு வந்தோம், ஆனால் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் மோசமான நிலையைப் பார்ப்பது பரிதாபமாக இருக்கிறது என்பதை எங்களுக்குத் தெரிவிக்க முடியுமா? இந்த நேரத்தில் உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீருக்கு நாங்கள் தொடர்ந்து உதவி செய்வோம், ஆனால் இந்த நேரத்தில் ஒவ்வொரு தொகுதியின் பிரதிநிதிகள் அனைவரும் வெளியே வந்து பயம் மற்றும் துயரத்தை விட நம்பிக்கை மற்றும் உதவிகளை செய்ய விரும்புகிறோம். நான் உங்களுக்கு எழுதும்போது வெட்கத்தால் தலை குனிந்தேன். ஒரு அதிசயத்திற்காக காத்திருப்பது குடிமக்களுக்கான கடமை என்று அழைக்கப்படுகிறது என பதிவிட்டிருந்தார். 

அதுமட்டுமின்றி இதற்கு முன்பாக நடிகர் விஷால் காசிக்கு சென்ற பொழுது அங்கிருந்து சுற்றுச்சூழல் குறித்தும் காசி கோவில் அழகாக புரணமிக்கப்பட்டுள்ளது என்பதற்காகவும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார், அன்புள்ள மோடிஜி, நான் காசிக்குச் சென்று, அற்புதமான தரிசனம்/பூஜை செய்து, கங்கா நதியின் புனிதநீரைத் தொட்டேன். கோவிலை புதுப்பித்து, அதை இன்னும் அற்புதமாகவும், எளிதாகவும், எவரும் தரிசிக்கக் கூடிய வகையில், கோயிலில் நீங்கள் செய்த மாற்றத்திற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார், ஹாட்ஸ் ஆஃப், சல்யூட் யூ என்று பதிவிட்டார்,  இதற்கு பிரதமர் நரேந்திர மோடியும் நடிகர் விஷாலுக்கு பதில் அளித்திருந்தார். 

இப்படி நடிகர் விஷால் தமிழக அரசே சாடியும் பிரதமரை புகழ்ந்தும் பேசியதற்காக சமயம் பார்த்துக் கொண்டு இருந்த சமயத்தில் விஷாலின் வீடியோ ஒன்றை உலாவருகிறது. அந்த வீடியோவில் நடிகர் விஷால் அயல்நாட்டில் ஒரு பெண்ணுடன் நடந்து செல்கிறார், அப்படி செல்லும் பொழுது விஷால் என்று ஒருவர் கூப்பிடுகிறார் உடனடியாக திரும்பிய விஷால் வீடியோ எடுப்பதை பார்த்துக் கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டு செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இது குறித்து விசாரிக்கும் பொழுது இந்த வீடியோ அதிகமாக திமுக ஆதரவு சமூக வலைதள ஐடிகளில் இருந்துதான் பரப்பப்படுகிறது, ஏற்கனவே பிரதமர் மோடியை விஷால் பிடிக்கும் என புகழ்ந்தார், சென்னை பெருமழை வெள்ளத்தின் சமயத்தில் திமுக அரசை விமர்சித்தார் இதன் காரணமாக இந்த வீடியோ சிக்கியவுடன் இதனை திமுகவினர் அதிகமாக பரப்புகின்றனர் எனவும் சமூக வலைத்தளத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.