![sivakumar, surya](https://www.tnnews24air.com/storage/gallery/tKM06gfJXSbY6TwYxELDMJa9uAnQpw3pwjhFQw17.jpg)
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் தொடர் போராட்டங்களிலும் அரசியல் சார்ந்த கருத்துக்களையும் பதிவிட்டு வந்த சூர்யா குடும்பம் தற்பொழுது மயான அமைதியை காக்கிறதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அதாவது கடந்த 2018 சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த சொடக்கு மேல சொடக்கு பாடலில் வரும் சில முக்கிய பாடல் வரிகள் அரசியல்வாதி சிலரை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியது. அதிலும் குறிப்பாக அப்பொழுது ஆட்சியில் இருந்த அதிமுகவினரை கடுமையாக விமர்சிக்கும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளதாகவும் பேசப்பட்டது. இதனை அடுத்து 2019 ஆம் ஆண்டில் தனது அகரம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா மத்திய அரசு அறிமுகப்படுத்திய கல்விக் கொள்கையை குறித்து விமர்சித்து அதற்கு கடுமையாக எதிர்ப்பும் தெரிவித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான பொன்மகள் வந்தால் திரைப்படத்தை நேரடியாக ஓடிடி யில் வெளியிட்டு OTT கலாச்சாரத்தை தொடங்கி வைத்தார். இதற்கு அடுத்தபடியாகவே நடிகர் சூர்யா நடித்த சூரரை போற்று படத்தையும் ஓடிடி யில் வெளியிட்டு திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்புகளை பெற்றார். அதோடு ஒரு விருது விழாவில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா கோவில்கள் இங்கு மிக சிறப்பாக அழகாக பேணப்படுகிறது ஆனால் மருத்துவமனைகளோ அதுபோன்று இல்லை கோவில்களுக்கு செலவிடுவது போல மருத்துவமனைக்கும் செலவிட வேண்டும் என்று ஒரு கருத்தை முன் வைத்தது அரசியல் ரீதியாக பல விமர்சனங்களை பெற்றது. மேலும் 2020 ஆம் ஆண்டு நீட் தேர்வு நடந்து முடிந்தவுடன் நீட் தேர்வுக்கு எதிராக கடும் கண்டனத்தை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு பெரும் சர்ச்சையில் சிக்கினார் நடிகர் சூர்யா.
இப்படி கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு புது புது சர்ச்சையில் சிக்கி அரசியல் ரீதியான விமர்சனங்களையும் அரசியலுக்கு ஏற்ற வகையிலான கருத்துக்களையும் முன்வைத்து வந்த நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பம் 2021 இல் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு எந்த ஒரு கருத்தையும் முன்வைக்காமல் எங்கு இருக்கிறார்கள் என்று திரை உலகமே அவர்களை தேடுவது போன்ற ஒரு அமைதியில் இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் தரப்போவதில்லை என்ற முடிவை அறிவித்து டெல்டா பகுதி மக்கள் பெரும் அவதியூற்ற நிலையிலும் நடிகர் சூர்யா தரப்பில் எந்த ஒரு ஆதரவுகளும் வழங்கப்படாமல் இருந்தது ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது. மேலும் இதற்கு முன்பாக மதுரை கீழடியில் புதிதாக அமைக்கப்பட்ட அருங்காட்சியத்தை பார்க்கச் சென்று நடிகர் சூர்யா குடும்பம் சிறு குழந்தைகளை வெயிலில் காக்க வைத்து விட்டு அருங்காட்சியகத்தில் புகைப்பட தொகுப்பு எடுத்தது கடும் விமர்சனங்களை பெற்றது.
இதற்குப்பிறகில் இருந்தே நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்திற்கு பெரிதளவில் பட வாய்ப்புகள் இல்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இதே நிலை நீடித்தால் திரை உலகில் இருந்து நம்மளை ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்பதற்காக அரசியல் சார்ந்த நடவடிக்கைகளில் சூர்யா குடும்பம் இறங்க ஆரம்பித்துவிட்டது. அதாவது நடிகர் சூர்யாவின் தந்தை சிவக்குமார் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவை சந்தித்து நலம் விசாரித்து ஆசி வாங்கி உள்ளார். இதனால் என்ன மீண்டும் அரசியலா என சிவக்குமார் குடும்பத்தை நோக்கி கேள்விகள் முன்வைக்கப்பட்ட வருகிறது. மேலும் திமுகவால் மிரட்டப்பட்டார்களா சிவக்குமார் குடும்பம் என்பது போன்ற கேள்விகளும் இணையத்தில் பறக்கிறது.