24 special

விஜயகாந்தின் அறியப்படாத பல உண்மைகள்....மனுஷன் கேப்டன் பொறுப்புக்கு தகுதியானவர் தான்!

vijayakanth
vijayakanth

சிறுவயதிலேயே சினிமா மீது கொண்ட மோகத்தால், படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. பல பள்ளிகள் மாறியும் அவரால் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடிந்தது. அதேநேரம் தான் விரும்பிப் பார்க்கும் எம்.ஜி.ஆரின் படங்களை சீன் பை சீனாகத் தன் நண்பர்களிடம் விவரிக்கும் அளவுக்கு சினிமா மீது அவருக்கு ஆர்வம் இருந்தது. படிப்பை நிறுத்திய பிறகு தன் தந்தையின் அரிசி ஆலையில் பணிபுரிந்தார். அதன் பிறகு சென்னைக்கு வந்த நடிகர் விஜயகாந்த் தனது சுய சரிதத்தை மாற்றியமைத்தார்.1979-ம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான `இனிக்கும் இளமை’ படத்தில் நடித்து, தன் திரைப்பயணத்தைத் தொடங்கினார். விஜயராஜ் என்ற தன் பெயரை விஜயகாந்த் என மாற்றிக்கொண்டார். `சட்டம் ஒரு இருட்டறை’, `தூரத்து இடிமுழக்கம்’, `அம்மன்கோவில் கிழக்காலே’, என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தார்.


குறிப்பாக நடிகர் விஜய், சூர்யா, சுப்பீரிம் ஸ்டார் சரத்குமார் மற்றும் வடிவேலு போன்ற பல நட்சத்திரங்களுக்கு விஜயகாந்த் தன் நடிப்பில் அங்கம் கொடுத்து மேல தூக்கிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.அறியப்படாத உண்மைகள் என்னவென்றால்!"எம்ஜியாருக்கு பிறகு கிராமப்புறங்களில் வெறித்தனமான ரசிகர்கள் இருக்கின்றனர். சினிமாவில் கால் பதித்த பிறகு 1984-ல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சினிமாத்துறையில் வரலாற்றுச் சாதனை புரிந்தார். இதுவரை இந்த ரெக்கார்டை யாராலும் முறியடிக்கமுடியாமல் இருந்து வருகிறது. .ரஜினிகாந்துக்கு ஒரு எஸ்.பி.முத்துராமன் போல், விஜயகாந்துக்கு ஒரு எஸ்.ஏ.சந்திரசேகர் என்று சொல்லலாம். இவரது இயக்கத்தில் மட்டும் விஜயகாந்த் 17 படங்களில் நடித்திருக்கிறார். மற்ற நடிகரக்ள் இயக்குநர்களை மாற்றி புது கதையை தேடுவார்கள் ஆனால், விஜயின் அப்பாவுடன் தனது பயணத்தை தொடங்கினார் இந்த ரெக்கார்டும் முறியடிக்கப்படம் இருக்கிறது. 

திரையில் மாற்றத்தை வேண்டி புது முக இயக்குனர்களிடம் கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் விஜயகாந்த். தமிழ் சினிமாவில் இப்பொது இருக்கும் நடிகர்கள் தமிழை தாண்டி வேறு மொழிகளில் நடிக்க ஆரவாம காட்டும் நிலையில் விஜயகாந்த் தமிழ் படத்தை தாண்டி வேறு எந்த படத்திலும் நடித்ததில்லை.  புரட்சிக்கலைஞர் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட விஜயகாந்த்தின் 100-வது படமான 'கேப்டன் பிரபாகரன்' மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் 'கேப்டன்' ஆக ப்ரோமோசன் கிடைத்தது. 1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராகப் பதவி வகித்தார். அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி அப்போது கடனில் இருந்த நடிகர் சங்கத்தை மீட்டெடுத்தது இவரின் நிர்வாகத் திறமைக்கு மிகப்பெரிய உதாரணம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் விஜயகாந்த் வீட்டில் 100 பேராவது சாப்பிடுவார்கள். ஒவ்வொரு நாளும் அலுவலகத்திலும் அந்த அளவுக்குச் சாப்பாடு நடக்கும். எல்லாத் தம்பி, தங்கைகளுக்கும் திருமணம் செய்து கடமையை முடித்த போது விஜயகாந்த்துக்கு வயது 37 ஆகிவிட்டது. அதற்குப் பிறகுதான் அக்காவின் வற்புறுத்தலின் பேரில் பிரேமலதாவைக் கைபிடித்தார். நீண்ட நாட்களாக விஜயகாந்துக்கு தோல் கொடுத்தவர் அவரது நண்பர் இப்ராஹிம் ராவுத்தர்". தனிப்பட்ட முறையில் அனைவராலும் நேசிக்கக்கூடிய மனிதராகவே இருந்த விஜயகாந்த் இன்று காலை மரணத்தை தழுவினார் மக்கள் கூட்டம் கூட்டமாக நேரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.