ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கடந்த சில நாட்களாக இந்து சமயம் குறித்தும், இந்து சமய கோவில்கள் மற்றும் சிலைகள் பாதுகாப்பு குறித்தும் தொடர்ச்சியாக பேசி வருகிறார். அவர் பேசும்போது கூறும் விஷயங்கள் தற்பொழுது வைரல் ஆவது மட்டுமல்லாமல் ஆளும் திமுக அரசுக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக திமுக அரசு இந்து சமய கோவில்களை கவனிக்க தவறிவிட்டது, திமுக அரசுக்கு நான் சவால் விடுகிறேன், கோவிலில் சிலைகள் பாதுகாப்பதில்லை, சிலைகளை மீட்பதில் அலட்சியம் காட்டுகிறது திமுக அரசு என்பது போன்ற பல விஷயங்களை குற்றச்சாட்டுகளாக பதிவு செய்து வருகிறார்.
இவர் பதிவு செய்வது திமுக அரசுக்கு தலைவலியாக இருப்பது மட்டுமல்லாமல் பலதரப்பட்ட மக்களிடையே கருத்துக்கள் சென்று சேருகிறது, கோவில் விஷயத்தில் அரசு எவ்வளவு அலட்சியமாக நடந்து கொள்கிறது என பலருக்கு விழிப்புணர்வாக இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பொன்.மாணிக்கவேல் மீது வழக்கு ஒன்று கொடுக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் கோவிலுக்கு கடந்த 29 தேதி வருகை தந்த காவல்துறை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் சாமி தரிசனம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசும்போது திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது அவர் கூறும்போது, 'பழமைவாய்ந்த சட்டைநாதர் கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் பணிக்காக குழி தோண்டிய போது ஐம்பொன் சிலைகள் மற்றும் செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டது அதனை தற்போது அரசு கட்டுபாட்டில் கோவில் உள்ளே தனி அறை அமைத்து அதில் வைத்து பூட்டி சீல் வைத்து போலீசார் பாதுகாப்பில் அரசு கட்டுபாட்டில் வைத்துள்ளது அதனை அரசு கருவூலத்திற்கு எடுத்து செல்ல கூடாது அது கோவிலுக்கு தான் சொந்தமானது எனவும் அதனை அரசு எடுக்க முயன்றால் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் ஒன்று திரண்டு அரசுக்கு எதிராக போராட வேண்டும்' என ஆவேசமாக பேசினார் பொன்.மாணிக்கவேல்.
மேலும் அவர் கூறியதுதான் மிகப்பெரிய விஷயம், அந்த சந்திப்பில் பொன்.மாணிக்கவேல் பேசும்போது, 'தற்போது தேர்தல் வருவதால் இரண்டு கட்சிகளும் ஏமாற்றி வருவதால் மூன்றாவது கட்சிக்கு வாக்கு அளிங்க' என யதார்த்தமாக கூறினார், அதுமட்டுமல்லாது 'தமிழக முதல்வரை நான் கோவிலுக்குள்ள வரவே மாட்டேன் ஆனால் ஆட்சி செய்வேன்.அப்படி சொன்னா என்ன அர்த்தம் தேர்தல் வருவதற்கு முன்னே சொல்ல வேண்டும் நான் கோவிலுக்குள்ள வர மாட்டேன் என் ஆளு வரானோ,என் வீட்டு கார அம்மா வருதோ எனக்கு தெரியாதுனு தேர்தலுக்கு முன்னே சொன்னா அது நேர்மை ஆனால் தேர்தல் முடிந்து இப்படி சொன்னா நான் ஏமாறா மாட்டேன்' என தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து விமர்சித்தார்.
இந்த நிலையில் இன்று பொன்.மாணிக்கவேல் மீது காவல்துறையில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் சீர்காழி காவல்நிலையத்தில் 'இஸ்லாமிய மதத்தையும் என்னையும் தரக்குறைவாக பேசி மன உளைச்சலுக்கு ஆளாகிய பொன் மாணிக்கவேலை கைது செய்து செய்ய வேண்டும்' என வேண்டுகோள் விடுத்தது புகார் ஒன்றை கொடுத்துள்ளார். மேலும் சீர்காழி தாலுகா பத்திரிகையாளர் சங்கம் சார்பிலும் பத்திரிகையாளரை மத ரீதியாக அவமதிப்பு, தமிழக முதல்வர், நீதிமன்ற சட்டம்,இந்து சமயத்துறை ஆகியவற்றை தரகுறைவாக பேசிய ஐஜி பொன் மாணிக்கவேல் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய கோரி சீர்காழி காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
இந்த விவகாரம்தான் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. தொடர்ச்சியாக பொன்.மாணிக்கவேல். திமுக அரசுக்கு தலைவலியாக இருக்கிறார் என அவர் மீது நடவடிக்கை எடுக்க தயாராகிவிட்டதோ என சந்தேக விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. இருப்பினும் காவல்துறை தரப்பில் அந்த புகார் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என அறிவிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.