24 special

அட இருங்கப்பா... லிஸ்ட்ல இல்லாதத எல்லாம் சொன்னா எப்படி? விவசாயிகளுக்கா நாங்க இப்படி பண்ணுவோம்?

modi , balakrishnan
modi , balakrishnan

தமிழகத்தின் தற்போதைய நிலையில், பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டு இருக்கின்றது.


இப்படியான. நிலையில் மின்சார சட்ட திருத்த மசோதா 2022 ஐ, நிறைவேற்ற பட்டால்,  விவசாயிகளுக்கு கிடைக்ககூடிய இலவச மின்சாரத்திற்கு பாதிப்பு ஏற்படும். இதற்கு எங்களுடைய கடும் எதிர்ப்பை பதிவு செய்கிறோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

மின்சார  சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால் அரசிடம் இருக்கும் மின்துறை தனியாருக்கு தாரை வார்த்து, அவரவர் இஷ்டத்திற்கு தனியார் நிறுவனங்கள் விலை உயர்வு ஏற்படுத்தும் நிலை உருவாகி மக்கள் மிக பெரிய பிரச்சனையை சந்திக்கும் நிலை ஏற்படும் . 

ஏற்கனவே, தமிழக அரசு செய்யும் பல நல்ல விஷயங்கள் மக்கள் மத்தியில் செல்வதை விட தற்போது உயர்ந்திருக்கும் பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு மின் கட்டண உயர்வு உள்ளிட்டவை தான் ஒரு விதமான தாக்கத்தை தமிழக மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு தீர்வு காண தமிழக முதல்வரிடம் எடுத்துரைப்போம் என பாலகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.

இப்படியான நிலையில் மின்சார திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு விவசாயிகளுக்கு கிடைக்கக்கூடிய இலவச மின் இணைப்பு கிடைக்காவிட்டால் தமிழகத்தில் விவசாயிகளின் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பும் என்பது மறுக்க முடியாத ஒன்று. ஆனால் இதுவரை மின்சார சட்ட திருத்த மசோதாவில், இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என நேரடியாக தெரிவிக்கவில்லை. ஆனால் உரிய மின்கட்டணம் வசூலிக்கப்படும் என்று குறிப்பிட்டு இருக்கின்றனர் என்பது முக்கியமாக கவனிக்கத்தக்கது .

இருந்தபோதிலும் ஆகஸ்ட் 8ஆம் தேதி மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்த மின்சார சட்ட திருத்த மசோதாவிற்கு  எதிர் கட்சிகள் இப்போதே  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மேலும், ஆதார் எண்ணை மின் இணைப்பு எண் உடன்  இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இது ஒரு வரைமுறைக்குள் கொண்டு வருவதற்காக எடுக்கப்படும் லிஸ்ட் என்றும் ஒரு பக்கம் கூறப்படுகிறது.