24 special

உங்கள் மொபைலுக்கு இந்த ALERT வந்ததா?....விளக்கம் இதோ!

alert
alert

தமிழ்நாட்டில் உள்ள பல மொபைல் பயனர்களுக்கு ஃபிளாஷ் செய்தி மற்றும் எமர்ஜென்சி டோனுடன் அவசர எச்சரிக்கை கிடைத்தது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் பயன்படுத்தப்படும் நாட்டின் புதிய அவசர எச்சரிக்கை அமைப்பின் சோதனையின் ஒரு பகுதியாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.உங்கள் போனில் எமர்ஜென்சி அலர்ட் வந்தால், பீதி அடைய வேண்டாம். உங்களுக்கு ஒரு செய்தி கிடைத்தால் அதைப் படிக்கவும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று மத்திய அரசு “அவசர எச்சரிக்கை ஒளிபரப்பு அமைப்புகளை” சோதனை செய்கிறது. அதன் தொடர்ச்சியாகவே 


இந்தியாவில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) இன்று, வெள்ளிக்கிழமை, அக்டோபர் 20 அன்று நாட்டின் புதிய அவசர எச்சரிக்கை அமைப்பின் சோதனையை நடத்த உள்ளது. மொபைல் பயனர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் சாதனங்களில் அவசர எச்சரிக்கையைப் அனுப்பப்படும். இந்த அலெர்ட் வந்ததும் உடனே மொபைல்லில் இருந்து அதிக சத்தத்துடன் கூடிய சவுண்ட் அடிக்க கூடும் இதனை படித்துவிட்டு ஒகே கொடுத்தால் ஆஃப் ஆகிவிடும்."செல் ப்ராட்காஸ்ட் அலர்ட்" சிஸ்டம் என்பது ஒரு அதிநவீன தொழில்நுட்பமாகும், இது இயற்கையான அபாய எச்சரிக்கைகளை செல்போன்களில் அனுப்பும் முயற்சியாகவும்.

கடுமையான வானிலை எச்சரிக்கைகள் (சுனாமி, மழை, வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் போன்றவை) பொது பாதுகாப்பு செய்திகள், வெளியேற்ற அறிவிப்புகள் மற்றும் பிற அவசரகால எச்சரிக்கைகளை வழங்க “செல் ஒளிபரப்பு எச்சரிக்கை” பயன்படுத்தப்படும். பேரிடர் எச்சரிக்கைத் தகவல்கள், சாத்தியமான அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளை பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் பரப்புவதற்கு இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது. தற்போது பொதுமக்களுக்கு மொபைலில் வருவது சோதனை முயற்சிக்காக மட்டும் தான் இதனை கண்டு பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் மொபைல் போனில் அலெர்ட் வந்ததால் பொதுமக்கள் அச்சத்துடன் நாட்டிற்கு எதாவது பிரச்னை ஏற்ப்பட வாய்ப்பு இருப்பதாகவும்,  தற்போது இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் போன்று எதாவது இந்தியாவில் அசம்பாவிதம் ஏற்பட போவதாக சமூக வலைத்தளத்தில் பொய் செய்திகளை பரப்ப தொடங்கியுள்ளனர்.