பாண்டிச்சேரியில் அமைச்சர் சந்திர பிரியங்கா தனது அமைச்சர் பதவியை கடந்த வாரத்தில் ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்க்கு அவர் கூறிய காரணம்தான் சர்ச்சைகளை ஏற்படுத்தியது, சந்திர பிரியங்கா தனது ராஜினாமா கடிதத்தில் என்னை தாழ்த்தப்பட்ட பெண் என்பதால் ஒதுக்குகிறார்கள், தாழ்த்தப்பட்ட பெண் இங்கு அமைச்சராக இருக்கக்கூடாதா? அமைச்சர் பதவியில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன். இந்த பதவியை வேறு யாராவது ஒரு சாதியினருக்கு கொடுத்து விடுங்கள்' என தனது ராஜினாமா கடிதத்தில் கூறி தனது அமைச்சர் பதவியை கடந்த வாரம் ராஜினாமா செய்தார்.
புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் இப்படி ஒரு பிரச்சனையா என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன, இந்த சூழலில் இந்த புதுச்சேரி சந்திர பிரியங்கா ராஜினாமா விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் பேசிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், 'சந்திர பிரியங்கா அந்தப் பெண் என்னிடம் எதுவும் கூறவில்லை! அப்படி ஏதும் பிரச்சினை இருக்கிறது தீர்த்து வையுங்கள் எனக்கூறி இருந்தால் கண்டிப்பாக நான் நடவடிக்கை எடுத்திருப்பேன்! ஆனால் அது அவர்கள் உட்க்கட்சி பிரச்சனை என்பது போல் தெரிகிறது. ஏற்கனவே அந்த பெண்ணை அமைச்சரவையில் இருந்து நீக்கி விட போகிறார்கள் என தெரிந்துதான், அந்தப் பெண் தானாகவே ராஜினாமா செய்துள்ளார். ஆனால் வெளியில் சாதி பெயரை சொல்லி மடையமாற்ற பார்க்கிறார்' என்பது போன்ற ஒரு கருத்தை தெரிவித்தார் தமிழிசை சவுந்தரராஜன்...
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது! இந்த நிலையில் தற்பொழுது அமைச்சர் சந்திர பிரியங்கா விவகாரம் குறித்து மேலும் பல தகவல்கள் கசிந்துள்ளன, அதாவது புதுச்சேரியில் முதல் கணவரை விவாகரத்து செய்து வாழும் அமைச்சர் சந்திர பிரியங்கா மனக்குண விநாயகர் கல்வி குழும நிறுவனரான தொழிலதிபர் நாராயண சாமியுடன் நெருக்கம் காட்டி வந்ததாகவும், நாராயணசாமியுடன் திருமணம் செய்ய இருப்பதாகவும் தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது. மணக்குள விநாயகர் குழுமம் குடும்பத்தினர் முதல்வர் ரங்கசாமிக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதனால் இந்த விவகாரத்தை முதல்வர் ரங்கசாமி அழைத்து கண்டித்துள்ளார், இது மட்டுமல்லாமல் சந்திர பிரியங்கா வேறு முதல்வர் ரங்கசாமியின் நெருங்கிய நண்பரான சந்திரகாசுவின் மகள் என்பதால் அவரையும் அழைத்து கண்டித்துள்ளார்.
இது பிடிக்காமல் இருந்த சந்திர பிரியங்கா இதற்கு அமைச்சர் பதவியை தலித் என்கின்ற காரணத்தினால் ஒதுக்கப்படுகிறேன் எனக் கூறி ராஜினாமா செய்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது மட்டும் அல்லாமல் இருபதாம் தேதி அமைச்சர் சந்திர பிரியங்கா மற்றும் தொழிலதிபர் நாராயண சாமியின் திருமணம் நடக்க இருந்த நிலையில் தொழிலதிபர் நாராயணசாமியின் குடும்பத்தினர் சந்திர பிரியங்காவை திருமணம் செய்தால் சொத்தில் ஒரு பங்கு கூட கிடைக்காது எனக் கூறி மிரட்டிய காரணத்தினால் இந்த திருமணம் என்று போய்விட்டதாம்.
இதன் காரணமாக அமைச்சர் பதவியும் பறிபோய் தற்பொழுது திருமணமும் நின்று போய்விட்டதே என்கின்ற காரணத்தினால் சந்திர பிரியங்கா வீட்டை விட்டு வெளியில் வராமல் முடங்கி உள்ளாராம். கடந்த வாரம் வரை என்னை தலித் என்பதால் அமைச்சரவையில் இருந்து ஒதுக்கி வைக்கிறார்கள், எனக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என பேசி வந்த அமைச்சர் சந்திர பிரியங்கா விவகாரத்தில் இதுபோன்ற ஒரு விவகாரம் இருப்பது தற்பொழுது தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.