![PM Modi, TTV Dhinakaran](https://www.tnnews24air.com/storage/gallery/Y6MLQxYPVCsyLompNN1X3OlnAsG5VZGB8cx39CvP.jpg)
நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பான வேலைகள் மட்டும் கூட்டணி தொடர்பான ஆலோசனைகளை செய்து வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தனக்கு கீழ் கூட்டணி கட்சிகளை வலுப்படுத்த முனைப்பு காட்ட தொடங்கியுள்ளது. இதற்கிடையில் தமிழகம் வரும் பிரதமர் மோடியை அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உள்ளவர்கள் அதிர்ச்சியில் உள்ளார்களாம்.
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சி இனி பாஜகவுடன் கூட்டணி வைக்கப்போவதில்லை என கூறினார். அதன் பிறகு சிறுபான்மையின மக்களை தன் பக்கத்தில் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினர். அப்படி இருக்கையில் அதிமுக பக்கம் எஸ்.டி.பி.ஐ கட்சி மட்டுமே இணைந்தது. இது வரை அந்த கட்சிக்கு பெரியதாக கூட்டணிகள் ஏற்படுத்த வரவில்லை. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் யாரும் கூட்டணி இல்லாததால் தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிராக எதிர்கட்சியாக இல்லை என்றே சொல்லலாம். அதேபோல, திமுக, அதிமுகவுக்கு மாற்றான பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கும் ஏற்பட்டுள்ளது. இப்படி தொடர் நெருக்கடி இருகட்சிகளுக்கு இருந்தாலும், இரண்டு கட்சிகளும் கூட்டணி அமையவில்லை.
அதிமுக தரப்பில் பூத் கமிட்டி போன்ற வேலைகளை பெரியதாக செய்து வந்தாலும் திமுகவில் இருக்கக்கூடிய காட்சிகள் அதிமுக பக்கம் வரும் என எதிர்பார்த்தார். ஆனால் அப்படி ஒரு மாற்றமும் இதுவரை நடக்கவில்லை. திமுகவில் உள்ள கட்சிகள் அப்படியே அங்கேயே நிலை நிறுத்த கொண்டனர். பாஜக கட்சியில் அதிமுகவில் இருந்து பிரிந்த பன்னீர் செல்வம் மற்றும் அதிமுகவில் இருந்து விலகி தனியாக கட்சி தொடங்கிய தினகரன் ஆகியோர் நிச்சயம் பாஜகவில் கூட்டணி அமைப்பார்கள் என தகவல் வெளியானது. இந்த நிலையில், வெளியில் இருக்கக்கூடிய பாமக,தமாக மற்றும் தேமுதிக கட்சிகளுடன் அதிமுக-பாஜக கட்சிகள் பேசுவரத்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இதுவரை மூன்று கட்சிகளும் யாருடன் கூட்டணி என்பதை உறுதிப்படுத்தவில்லை நேரம் வரும்போது நிச்சயம் அறிவிப்பேன் என கூறி வருகின்றனர். இதற்கிடையில் வரும் 27ம் தேதி அண்ணாமலை மேற்கொண்ட என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மிக பிரமாண்டமாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளது பாஜக. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வருகை தருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடியை மதுரையில் தினகரன் சந்திக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.
முன்னதாக, பிரதமரை ஓபிஎஸ் சந்திக்க இருப்பதாகவும் தகவல் வந்த நிலையில், தினகரன்,ஓபிஎஸ் என இருவரும் சந்திக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த சந்திப்பின் போது, கூட்டணி, சீட், தொகுதி விவகாரங்களை தாண்டி, எடப்பாடி பழனிசாமி மீது பகீர் குற்றச்சாட்டுகளை பிரதமரிடம் ஓபிஎஸ் சொல்லப்போகிறாராம். பிரதமருடனான இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காரணம், எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளரான பிறகு, இணைந்து பயணிக்க போவதாக ஓபிஎஸ் - டிடிவி தினகரன் கூட்டாக அறிவித்த பிறகு முதல்முறையாக மோடியை சந்திக்க போகிறார்கள். இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் பயத்திலுள்ளர்களாம். மோடி தமிழகம் வரும்போது மாற்று கட்சியினர் பாஜகவில் இணையலாம் என கூறப்படுகிறது.