24 special

அந்த மேட்டரை கண்டுக்காதீங்க விடுங்க..! அண்ணாமலை அட்வைஸ்!

Annamalai
Annamalai

தேசிய சிந்தனை, traditional கட்சியாக அறியப்படும் பாஜகவில் பெண்கள் விஷயம் என்றால் மட்டும் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு முட்டுபுள்ளி வைத்து உள்ளார் அண்ணாமலை. சமீபத்தில் ஹனி trap என்ற வார்த்தை பாஜக வில் அதிகம் உலா வர கட்சிக்குள் இருக்கும், இருந்த சிலர் தான் காரணம் என ஒருபக்கம் கிசு கிசுக்க...மறுபக்கம் இதுதான் சரியான நேரம் என honey trap விஷயத்தை கையில் எடுத்த பிஜேபி எதிர்ப்பாளர்கள் சமூக வலைதளத்தில் எப்போதும், யார் யாருக்கு தொடர்பு இருக்கு என்றே அதிகம் ஆராய தொடங்கினர்..


அதாவது ... நாட்டில் எத்தனையோ விஷயங்கள்  இருக்கும் போது சமூக வலைதள நெட்டிசன்களும்  கில்மா விஷயம் கிடைக்குமா என எதிர்பார்ப்போடு இருப்பதை உணர்த்தும் விதமாக, honey trap பற்றி யார் பேசினாலும் views அள்ளுகிறது என்பதிலேயே அனைவரும் புரிந்துக் கொள்ள முடிகிறது, இந்த விஷயத்தில் நம்ம மக்கள் காண்பிக்கும் ஆர்வத்தை என்கின்றனர் சிலர்.

இப்படியான நிலையில் தான் இது போன்ற கேள்விகளை அண்ணாமலையிடம்  செய்தியாளர்கள் கேள்வி கேட்டும் வந்தனர். அதற்கும் பதில் அளித்து வந்த அண்ணாமலை, மக்கள் நலனுக்காகவும் நாட்டு நலனுக்காகவும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கும் போது இதற்கெல்லாம் பதில் அளித்து நேரத்தை வீண்டிக்க தேவை இல்லை என முடிவெடுத்தவர், இனி தொண்டர்களும் இது போன்ற விஷயங்களுக்கு செவி சாய்க்கக் கூடாது என கடலூரில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் சொல்லியிருக்கிறார்.

அதற்கு உதாரணமாக சமீபத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் ஒரு பக்கம் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக tweet செய்து வருவதும், மறுபக்கம் கூட்டத்தில் நடிகை நமீதா மற்றும் கேசவ விநாயகம் அடுத்தடுத்த இருக்கையில் அமர்ந்த வீடியோவை தொடர்ந்து தொலைக்காட்சிகள் டெலிகாஸ்ட் செய்ததும், சமூக வலைத்தளங்களிலும் போட்டோ மற்றும்  வீடியோ பதிவிட்டு  கிண்டல் செய்து வந்ததையும் கூட்டத்தில் இருந்தபடியே கவனித்த அண்ணாமலை இதெல்லாம் கொஞ்சம் கூட சட்டப் பண்ணிக்காதீங்க....

நீங்கள் மக்களை சந்திப்பதிலும் கட்சி பணிகளிலும் மட்டும் உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.. என்று அடித்துக் கூறியுள்ளார். இதன் மூலம் இது நாள் வரை பெண்கள் விஷயம் என்றால் உடனடியாக பாஜகவை பெரும் அளவு குற்றம் சாட்டும்  நிலை மாறி, இனி அதிரடி அரசியல் மட்டுமே பாஜகவில் பார்க்கப்படும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.