24 special

முக்தார் செய்த உள்ளடி வேலை வெளியானது...!

mukthar and gangai amaran
mukthar and gangai amaran

லட்சுமி ராமகிருஷ்ணனை போன்று கங்கை அமரனிடம் சித்து விளையாட்டை காட்டிய தனியார் ஊடகத்தை சேர்ந்த முக்தாருக்கு இறுதியாக ரெட் சிக்னல் கொடுக்கப்பட்டு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


செய்தி வாசிப்பாளராக பணியை தொடங்கி தற்போது தனியார் ஊடகம் ஒன்றில் நேர்காணல் நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர் முக்தார் என்ற முக்தார் அஹமத், இவர் செய்யும் நேர்காணல் நிகழ்ச்சியில் ஆரம்ப கட்டத்தில் அதிக பார்வையாளர்களை பெற்றது.

ஒரு கட்டத்தில் முக்தார் எடுத்த நேர்காணல் நிகழ்ச்சிகள் முகம் சுழிக்கும் வகையில் அமைந்தது அதில் ஒன்று பாஜகவில் இருந்து வெளியேறிய திருச்சி சூர்யா கொடுத்த நேர்காணல், திருச்சி சூர்யாவிடம் முக்தார் எழுப்பிய கேள்விகள் ஒவ்வொன்றும் முகம் சுழிக்கும் வகையில் அமைந்த நிலையில் அந்த வீடியோ யூடுப் பக்கத்தில் இருந்தும் நீக்கப்பட்டது.

அப்போதே அதே ஊடகத்தில் பணியாற்றும் சக பத்திரிகை துறையை சேர்ந்தவர்கள் முக்தார் மீது ஊடக நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர், என்ன தான் முக்தார் வீடியோ பார்வையாளர்களை பெற்றாலும் அதில் கேட்கப்படும் கேள்விகள் ஊடக தர்மத்தை மீறி, மஞ்சள் காட்சிகள் போன்று இடம் பிடிப்பது நாளை பெயரை கெடுத்து விடும் என குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

அதை தொடர்ந்து கேள்விகள் மூலம் பேசிய முக்தார்.. தனது நேர்காணல்கள் பார்வைகளை பெற வேண்டும் என்பதற்காக குறுக்கு வழிகளை தேர்வு செய்தது அடுத்தடுத்து தெரியவந்துள்ளது, பாஜகவில் இல்லாத நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை பாஜகவில் இருந்து விலக முடிவு என போலியாக முகப்பு படத்தில் வைக்க அது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

உங்களை போன்ற போலியான ஊடக துறையில் பணியாற்றும் நபர்களை அண்ணாமலை திட்டியதில் தவறு இல்லை என லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம் கொடுத்து இருந்தார், இந்த சூழலில் திமுகவில் இணைய இருப்பதாக கங்கை அமரன் குறிப்பிட்டது போன்று thumnail வைத்து மீண்டும் போலி செய்தியை பரப்பி இருக்கிறார் முக்தார்.

இந்த சூழலில்தான் முக்தார் செய்த கேவலம் என்ன நடந்தது என்ன என்பது குறித்து வீடியோவே வெளியிட்டு இருக்கிறார் கங்கை அமரன், இதன் மூலம் பேட்டி என்ற பெயரில் தனக்கு தேவையான செய்திகளை மட்டும் வெட்டி ஒட்டி பரப்பிய முக்தார் கையும் களவுமாக அம்பலபட்டு நிற்பது தெளிவாக தெரிய தொடங்கி இருக்கிறது.

இந்த சூழலில் ஊடக நிர்வாகம் போலியான thumnail பேட்டிகள் மூலம் ஊடகத்தின் பெயரை கெடுக்கும் முக்தார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் இதே ஊடகத்தில் பணி செய்கிறோம் என்று வெளியில் சொல்லவே கூச்சமாக இருக்கும் என குறிப்பிட்டு வெளியேற இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ஊடக துறையில் நீண்ட அனுபவம் கொண்ட நபர்களும் முக்தார் போக்கு ஊடக துறைக்கு மட்டுமல்ல நாகரீக அரசியலுக்கும் ஏற்கத்தக்கது இல்லை என விளக்கம் கொடுத்து இருக்கிறார்களாம் இதையடுத்து இனி முக்தார் தனது மூன்றாம் நம்பர் வேலையை செய்தால் ரெட் கார்டு கொடுப்பது மட்டுமல்ல பல விஷயங்கள் வெளிச்சத்திற்கு வரும் என்கின்றன வெட்டி ஓட்டும் ரகசியம் தெரிந்த வட்டாரங்கள்.

திமுகவில் இணைய இருப்பதாக போலி செய்தி பரப்பிய முக்தார் குறித்து கங்கை அமரன் கொடுத்த விளக்கம் இதோ..