காலை மதியம் இரவு என மூன்று வேளை உணவை சரியாக ஒருவர் எடுத்துக் கொண்டாலும் தின்பண்டம் சாப்பிடுவது பலரின் விருப்ப உணவாக இருக்கிறது. ஏன் சில நேரங்களில் திண்பண்டங்களே உணவாக எடுத்துக்கொண்டு பிறகு அஜீரண கோளாறால் அவதிப்படுவார்கள். ஆனால் தற்பொழுது தின்பண்டங்கள் அனைத்திற்குமே டஃப் கொடுக்கும் தின்பண்டங்களின் ராஜாவாக இருப்பது பானி பூரி! இந்த பானி பூரி என்று? நம் வழக்கத்திற்கு வந்தது அல்லது முன்பிருந்தே இந்த தின்பண்டம் இருந்துள்ளதா அல்லது சமீபத்தில் தான் புகுந்து அவற்றிற்கு நாம் அடிமையாகி விட்டோமா என்பது தெரியவில்லை ஆனால் சிறு பிள்ளைகள் முதல் முதியவர்கள் வரை கூட இந்த பானிபூரியை விரும்பி உண்கிறார்கள்.
அதாவது குட்டியாக சுடப்பட்ட பூரியை ஒரு பக்கம் ஓட்டையாக்கி அதில் உருளைக்கிழங்கின் மசாலாவை வைத்து சிறு வெங்காயத்தையும் வைத்து பிறகு அதற்கென்று பிரத்தியேகமாக செய்யப்பட்டிருக்கும் மசாலா பாணியில் முக்கி அந்த பாணி பூரி முழுவதும் நீர் நிரம்பி இருக்கும் பொழுது லபக் என்று வாயில் போட்டு மெண்டு கடிப்பார்கள். அப்படி சாப்பிடும் பொழுது ஒரு பக்கம் காரம் ஒரு பக்கம் புளிப்பு ஒரு பக்கம் மசாலா என அனைத்துமே கலந்திருப்பதால் பெரும்பாலான இளைஞர்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கு இந்த தின்பண்டம் மிகவும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. அப்படிப்பட்ட பானிபூரியால் மனிதர்களுக்கு கேன்சர் விளைவிக்கும் அபாயம் இருக்கிறது என்று சமீபத்தில் பரபரப்பான செய்திகள் வெளியானது.
அதாவது கர்நாடக மாநிலத்தில் சாலையோரம் விற்கப்படுகின்ற பானி பூரி தரமானது மிகவும் குறைந்து இருப்பதாகவும் தரமற்ற பானி பூரி மற்றும் மசாலா நீரை விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள் என்ற புகார் உணவு பாதுகாப்புத் துறைக்கு சென்றுள்ளது. இதனை அடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சாலையோரம் விற்கப்படுகின்ற கடைகள் மற்றும் மிகப்பெரிய கடைகளில் விற்கப்படுகின்ற பாணி பூரி மசாலா மற்றும் பானிபூரியின் மசாலா நீர் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக மாதிரிகளை சேகரித்துச் சென்றனர். அப்படி பெறப்பட்ட மாதிரிகளை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் பெரும்பாலான பாணி பூரிகள் மனிதர்கள் உண்ணக்கூடிய தகுதியற்ற உணவாகவும் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய உணவாகவும் பானிபூரி மற்றும் நீரில் நிறத்தை தூக்கி காண்பிப்பதற்காக செயற்கை நிறமிகள் பயன்படுத்தப்படுவதாகவும் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியானது. இதை எடுத்து கர்நாடகாவில் பானி பூரி தடை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது மேலும் கர்நாடகவை தொடர்ந்து தமிழகத்திலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பானி பூரி குறித்த சோதனைகளை மேற்கொண்டதில் தமிழகத்தில் அது போன்ற தரமற்ற பானி பூரி விற்கப்படுவதில்லை என்று கூறப்பட்டது.
ஆனால் தற்பொழுது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ உலா வருகிறது அந்த வீடியோவை பார்க்கும் பொழுது நிச்சயம் பானி பூரி விரும்பி உண்பவர்கள் இனி அதை எடுத்துக் கொள்ளும் பொழுது சற்று யோசிப்பார்கள்! அதாவது இரு கல்லூரி மாணவிகள் சாலை ஓரத்தில் விற்கப்படுகின்ற பானிபூரியை உண்ண சொல்கிறார்கள் இதனை விற்பவர் பானிபூரியில் மசாலாவை வைத்துவிட்டு பிறகு அவர்களுக்கு பானியை ஊற்றி கொடுக்கிறார் ஆனால் அந்த பானி பூரி மீது மசாலாவை வைத்துவிட்டு பானி நீருக்குள்ளே தன் கையை விட்டு கழுவுகிறார் அந்த விற்பனையாளர்!!
இதனை தெரியாமல் அந்த இரு பெண்களும் பானிபூரியை உண்ண சொல்லும் பொழுது ஒருவர் வந்து தடுத்து நடந்தவற்றை எடுத்து கூறுகிறார் அதற்கு பிறகு அங்கிருந்த கடையை கீழே தள்ளி விடுகிறார்கள் இதற்கு இடையிலேயே பானி பூரி விற்பவர் அங்கிருந்து ஓடி செல்கிறார். அதனால் இனி பானிபூரியை எங்கு சாப்பிட நினைத்தாலும் விற்பவர்கள் கையில் உரை அடைந்திருக்கிறார்களா என்பதை கவனித்து விட்டு சுகாதாரமாகவும் சுத்தமாகவும் தான் இருக்கிறதா என்பதை பார்த்துவிட்டு உண்ண வேண்டும்!