24 special

ஐபிசி 124 தெரியுமா...? கெத்தாக பதிலடி கொடுத்த ஆளுநர்...! அடுத்து என்ன?

mk stalin, rn ravi
mk stalin, rn ravi

தமிழக ஆளுநர் மாளிகை அமைந்துள்ள கிண்டி ராஜ்பவன் முன்பு நேற்று பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதல் வீசியதுதான் தற்பொழுது தலைப்புச் செய்தியாகி உள்ளது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என எதிர்க்கட்சிகள் விமர்சனத்தை முன்வைக்கும் நிலையில் ஆளுங்கட்சி திமுக தரப்போ ஆளுநருக்கு எந்த ஆபத்தும் வரவில்லை, யாரோ ஒரு மனநோயாளி செய்திருக்கிறார் என சமாளித்து வருகின்றது. 


இந்த நிலையில் முதல்வர்  ஸ்டாலின் இந்த விவகாரம் குறித்து எதுவும் பேசாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது, இப்படி ஆளுநர் மாளிகையில் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் பல அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஆளுநர் தரப்பிலிருந்து அடுத்தபடியாக எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப் போகிறார்? டெல்லி வட்டாரத்தில் இருந்து எந்த மாதிரியான எதிர்வினைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட வரும் நிலையில் இன்று ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்று காவல்துறைக்கு பறந்துள்ளது. 

அந்த கடிதம் தான் ஆளுநர் மாளிகை இந்த விவகாரத்தை எதற்கும் இறங்கி பார்த்து விடலாம் என தயாராக இருப்பதாக தெரிவிக்கின்றன, இந்த சம்பவம் தொடர்பாக ஆளுநரின் துணைச் செயலாளர் செங்கோட்டை ஏ.டி.ஜி.பி மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த புகாரில், 'தமிழ்நாடு அரசின் அரசியல் சாசன தலைவர் மீது மிகக் கடுமையான தாக்குதல் நேற்று மதியம் 2:45 மணிக்கு நடந்தது, ராஜ்பவன் மெயின் கேட் எண் ஒன்றின் வழியாக பெட்ரோல் குண்டுகளை ஏந்திய மர்ம நபர்கள் சிலர் உள்ளே ராஜ்பவனின் பாதுகாப்பு பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். தாக்குதலை கட்டுப்படுத்த முயன்ற போதும் குற்றவாளிகளால் மற்றொரு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. 

இதனால் பிரதான நுழைவாயிலுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது, எப்படியோ தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரை செக்யூரிட்டி பிடித்தனர்! கடந்த பல மாதங்களாக ஆளுநரின் மீது அநாகரிகமான அத்துமீறல்களை பயன்படுத்தியும், அவருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தும் தொடர்ந்து கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆளுநரின் இந்த வாய்மொழி தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் பெரும்பாலும் திமுக அரசு அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களால் பொதுக்கூட்டங்களிலும் சமூக ஊடகங்களின் மூலமாகவும் செய்யப்பட்டன.

இந்த அச்சுறுத்தல்கள் ஆளுநரை மிகைப்படுத்தி அவரது அரசியல் அமைப்பு சட்டப் பணிகளை செய்வதில் அவரை கட்டுப்படுத்தும் நோக்கில் உள்ளன. ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை, கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி நடந்த ஒரு சம்பவத்தை நினைவுபடுத்துகிறோம், ஆளுநர் தருமபுர ஆதீனத்தில் திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தபோது தடியடி மற்றும் கற்களால் உடல் ரீதியாக தாக்கப்பட்டார். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது, ஆனால் தாக்கியவர்கள் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்படவில்லை. தாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, ஆளுநருக்கு வரும் கடுமையான அச்சுறுத்தல்களை காவல்துறை அலட்சியப்படுத்துகிறது.

கவர்னர் மற்றும் ராஜ்பவனின் பாதுகாப்பை கெடுத்து விட்டது, அதன் விளைவுதான் என்று ராஜ்பவன் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்கள். இந்திய தண்டனைச் சட்டம் ஐபிசி 124 இன் கீழ் குறிப்பாக ஆளுநருக்கான அச்சுறுதல்களை நோக்கமாகக் கொன்ற குற்றங்களை உள்ளடக்கிய இன்றைய தாக்குதல்களை நீங்கள் தீவிரமாக அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்' என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆளுநருக்கு இதுவரை தொடுக்கப்பட்ட தாக்குதல்களை தொகுப்பாக வைத்து அந்த புகார் பாய்ந்திருப்பது என்ன நடந்தாலும் பார்த்துவிடலாம் இனி நீயா? நானா? என ஆளுநர் மாளிகை இறங்கி இருப்பதாக தெரிகிறது என அரசியல் வட்டாரங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஆளும் திமுக தரப்பிலிருந்து எந்த மாதிரியான எதிர்வினைகள் வருகிறது என பொருத்திருந்து பார்க்கலாம்.