India

ஆளும் கட்சியை வீழ்த்தி வெற்றி பெற்ற பாஜக மூன்றாம் இடம் சென்ற காங்கிரஸ் வாங்கிய வாக்குகள் எத்தனை தெரியுமா?

Telanagana by election result
Telanagana by election result

கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஹரியானா, பீகார், அசாம், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான்,தெலங்கானா, மேகாலயா, மிசோரம் மற்றும் நாகாலாந்து ஆகிய 13 மாநிலங்களில் 29 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 30ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது.


தாத்ரா மற்றும் நாகர் ஹைவேலி, ஹிமாச்சல பிரதேசத்தின் மந்தி, மத்திய பிரதேச மாநிலத்தின் கந்த்வா ஆகிய மக்களவை தொகுதிகளுக்கும் அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.அசாமில் 5, மேற்குவங்கம் 4, மத்தியப் பிரதேசம் 3, ஹிமாச்சல் பிரதேசம் 3, மேகாலயா 3, பிகார் 2, கர்நாடகா 2, ராஜஸ்தான் 2, ஆந்திரப் பிரதேசம்,

ஹரியானா, மகாராஷ்டிரா, மிசோரம், நாகாலாந்து, தெலங்கானா ஆகிய மாநிலங்களின் தலா 1 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது .

இதில் தெலுங்கானா மாநிலத்தில் ஹுஸுராபாத் பகுதியில் நடந்த இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்டிரிய சமதியை வீழ்த்தி மிக பெரிய வெற்றி பெற்றுள்ளது பாஜக, காங்கிரஸ் வேட்பாளர் டெபாசிட் இழந்துள்ளார்.

மொத்தம் பதிவான வாக்குகளில் 106780 வாக்குகளை பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஏடல ராஜேந்தர் பெற்றார், ஆளும் கட்சியான தெலுங்கானா ராஷ்டிரிய சமதி வேட்பாளர் 82712 வாக்குகள் பெற்றார் காங்கிரஸ் வேட்பாளர் வெறும் 3012 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்து படு தோல்வி அடைந்துள்ளார்.

பாஜக வேட்பாளர் 23855 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார், இடை தேர்தல் என்பது முழுக்க முழுக்க ஆளும்கட்சிக்கு சாதகமாக இருக்கும், அதிகாரிகள், அரசியல் பலம், பணம் பலம் என அனைத்தும் ஒரு சேர இருந்தும் தெலுங்கானா மாநிலத்தில் பாஜக வேட்பாளர் 23 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருப்பது விரைவில் பாஜக கொடி பறக்கும் மாநிலமாக தெலுங்கானா மாறும் என்றே தற்போதைய இடை தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.