24 special

இப்ப தெரிகிறதா நீட் தேர்வின் வெற்றி...! உளறிய தயாநிதி..?

annamalai, thayanidhi
annamalai, thayanidhi

மேடையில் விமர்சனம் செய்வதாக நினைத்து தயாநிதி மாறன் பேசிய சம்பவம் தற்போது பொதுமக்கள் மத்தியில் கடும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது அதிலும் எனது மகளை மலேசியா சென்று படிக்க வைத்தேன் என தயாநிதி மாறன் பேசிய கருத்து தான் அவருக்கு மட்டுமல்ல ஓட்டு மொத்த திமுகவிற்கும் எதிராக திரும்பி இருக்கிறது.நீட் தேர்விற்கு எதிரான நிகழ்ச்சியில் பேசிய தயாநிதி மாறன், “அனிதா இறந்தபோது ஒவ்வொரு பெற்றோரும் கதிகலங்கி நின்று கண்ணீர் சிந்தினர். அவர்களில் நானும் ஒருவன். ஏனெனில் எனக்கும் அப்படி ஒரு சம்பவம் நடந்தது.


எங்கள் குடும்பமே திமுக குடும்பம். நாங்கள் அனைவரும் ஸ்டேட் போர்டு எனப்படும் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள். சிபிஎஸ்இ பள்ளியில் நாங்கள் படிக்கமாட்டோம். ஏனெனில் இந்தியை படித்து என்ன புடுங்கப் போகிறோம் என்று சொல்லி நாங்கள் இந்தியே படிக்கவில்லை.எனது மகளை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் சேர்க்க எனது மனைவி கூறினார். நான் முடியவே முடியாது என்று சொல்லி சண்டையிட்டேன். டாக்டருக்கு படிக்க வேண்டும் இல்லையா என்று அவர் கேட்டார். நாங்கள் எத்தனை பேருக்கு சீட் வாங்கித் தந்துள்ளோம், நம் பிள்ளைக்கு வாங்கித் தர மாட்டோமா என்று மார்தட்டினேன்.

2017ஆம் ஆண்டு எனது மகள் பிளஸ் டூ முடித்தார். அப்போதுதான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.என் மகளுக்கு உதவி செய்ய முடியல - தயாநிதி மாறன்என் மகள் என்னிடம் வந்து கேட்டார். டாக்டர் சீட் வாங்கித் தருகிறேன் என்று சொன்னியே அப்பா.. உன்னால்தான நான் ஸ்டேட் போர்டில் படிச்சு நல்ல மார்க் வாங்கிருக்கேன். எனக்கு மெடிக்கல் சீட் வாங்கித் தா என்றார். இயலாமையால் கண்கலங்கி நின்றேன். என்னுடைய சொந்த மகளுக்கே என்னால சீட் வாங்கித் தர முடியலை. நீட் தேர்வு எழுதினாலும் அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை. ஏனெனில் ஸ்டேட் போர்டில் படித்துவிட்டு சிபிஎஸ்இ போர்டில் நடக்கும் தேர்வில் எப்படி தேர்ச்சி பெற முடியும்?

பிறகு ஒரு வாய்ப்பு இருந்தது அந்த வருடம் மட்டும் நீட் தேர்வு எழுதால் வெளிநாட்டில் படிக்கலாம் என்று. நீதிமன்றத்தில் வழக்கு போட்டு என்னுடைய மகளை மலேசியாவில் டாக்டருக்கு படிக்க வைத்தேன். ஆக, தங்களது மகளை டாக்டருக்கு படிக்க வைக்க முடியாத பெற்றோரின் நிலை எப்படி இருக்கும்? ஆக நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.பிறகு ஒரு வாய்ப்பு இருந்தது அந்த வருடம் மட்டும் நீட் தேர்வு எழுதால் வெளிநாட்டில் படிக்கலாம் என்று. நீதிமன்றத்தில் வழக்கு போட்டு என்னுடைய மகளை மலேசியாவில் டாக்டருக்கு படிக்க வைத்தேன்.

ஆக, தங்களது மகளை டாக்டருக்கு படிக்க வைக்க முடியாத பெற்றோரின் நிலை எப்படி இருக்கும்? ஆக நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.ஆனால் இங்கு தான் சிக்கல் எழுந்து இருக்கிறது உங்கள் மகளை மலேஷியா சென்று படிக்க வைத்த உங்களால் அனிதாவை அதே போன்று மலேஷியா சென்று படிக்க வைத்து இருக்க முடியாதா? ஏன் செய்யவில்லை இரவு பகலாக படித்து நீட் தேர்வில் கூலி வேலை செய்யும் பெற்றோரின் மகள்கள் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள் டாக்டர் படிப்பிற்கு படிக்கிறார்கள் ஏன் ஆடு மேய்க்கும் மாணவன் கரூரில் தேர்ச்சி பெற்று அரசு மருத்துவ கல்லூரியில் படிக்கிறார் இதெல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியாதா?

அன்றே பாஜகவினர் சொன்னார்கள் நீட் தேர்வு வந்தால் பணம் வைத்து இருக்கும் பணக்காரர்கள் கூட நீட் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே படிக்க முடியும் என கூறி வந்தார்கள் அதை உறுதி செய்வது போல் அமைந்து விட்டது தயாநிதி மாறன் பேச்சு என அடித்து கூற தொடங்கி இருக்கின்றனர் பொதுமக்கள்.தற்போது தயாநிதி மாறன் பேச்சை பகிர்ந்து பணம் இருந்தாலும் படிப்பு இல்லை என்றால் சீட் கிடையாது அதே நேரத்தில் பணம் இல்லை என்றாலும் படிப்பு இருந்தால் டாக்டர் ஆகலாம் என நீட் தேர்வின் பலனை பகிர தொடங்கி இருக்கிறார்கள் பாஜகவினர்.