24 special

வில்லன் விநாயகன் க்கு போலீசார் கொடுத்த அதிரடி சம்பவம்...!!

villain vinayakan
villain vinayakan

மலையாள நடிகர் விநாயகன் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம் இந்நிலையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விநாயகனை காவல்துறை தூக்கி உள்ளே வைத்த சம்பவம் தற்போது கேரளாவை தாண்டி அதிர செய்து இருக்கிறது.நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி  ஹிட் அடித்த படம் ஜெயிலர். இந்த படத்தில் நடிகர் ரஜினிக்கு வில்லனாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மலையாள நடிகர் விநாயகன்.ஜெயிலர் படத்தில் வர்மன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததால் சமூக வலைதளங்களில் நடிகர் விநாயகனுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது.


இந்நிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நடிகர் விநாயகன்  உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுடன் தகராறில் ஈடுபட்டதால்   கைது செய்யப்பட்டுள்ளார்.தகராறில் ஈடுபட்ட போது அவர் மது அருந்தி இருந்தார் என்றும், அதனை உறுதி செய்ய காவல்துறை அதிகாரிகள் நடிகர் விநாயகனை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளார்கள்.ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விநாயகன் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாக உள்ள துருவ நட்சத்திரம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அந்த படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை 5 மணிக்கு தான் வெளியானது. மீண்டும் நடிகர் விநாயகனின் அற்புதமான நடிப்பை திரையில் பார்க்க காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தற்போது அவர் கைதாகி உள்ள செய்தி அதிர்ச்சி அளித்துள்ளது.போலீசால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என பேசியதாகவும் உன்னை தண்ணி இல்லாத காட்டிற்கு மாற்றுவேன் என விநாயகன் தன்னை கைது செய்ய வந்த போலீஸ் அதிகாரியை மிரட்டியதாகவும் கூறப்படும் நிலையில் எதையும் பார்த்து கொள்ளலாம் வண்டியில் ஏறுங்கள் என இன்ஸ்பெக்டர் விநாயகனை போலீஸ் வண்டியிலேயே ஏற்றி காவல் நிலையம் அழைத்து சென்றதாக செய்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.