24 special

கடந்த வாரம் ஏற்பட்ட திருப்பம்...! திமுக வினையே திமுகவிற்கு எதிராக திரும்பியது..!.

mk stalin, soniyagandhi
mk stalin, soniyagandhi

கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருக்கும் சோனியா காந்தி மகளிர் உரிமை மாநாட்டிற்காக சென்னை வந்தபோது சனாதன தர்மத்தால் கட்சிக்கு வந்த பின் விளைவுகளை பற்றி பேசியதாக சில தகவல்கள் கசிகின்றன.அதாவது சனாதன தர்மத்தை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேசியது I.N.D.I.A கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கு இடையே  கிளர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அது காங்கிரஸ் கட்சிக்கு வட மாநிலங்களில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது என்று சோனியா காந்தி தெரிவித்தது திமுக கட்சிக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது எனவே கூட்டணிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இனிமேல் பேசக்கூடாது என்று சோனியா காந்தி தெரிவித்ததும் திமுகவில் உள்ள முக்கிய தலைவர்களை கதி கலங்க செய்தது இதனால் கூட்டணி பிளவுபட்டு விடுமோ என்ற பயத்தில் உடனடியாக திமுக தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் சமாதானப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.


அதன் பின்னர் சென்னையில் திமுக தொழில்நுட்ப அணி சார்பில் நடைபெற்ற சமூக வலைதள தன்னார்வலர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் மேலும் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவாக நீட் தேர்வு ரத்து செய்வதற்காக நீட் விலக்கு நம் இலக்கு என்ற தலைப்பில் திமுக இளைஞரணி மகளிர் அணி மற்றும் மாணவர் அணி மருத்துவர் அணி சார்பில் இன்னும் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெற வேண்டும் என்ற இயக்கத்தை தொடங்கி வைத்தார். மேலும் தொடர்ந்து பேசிய முதல்வர் இதுவரை அரசியலில் திமுகவிற்கு எதிராக அண்மையில் நடந்த விமர்சனங்களை எல்லாம் சம்பந்தப்படுத்தி பேசிக் கொண்டிருந்தார்.

இது மட்டுமில்லாமல் திராவிட இயக்கம் என்பது தமிழினத்தை தலை நிமிர்த்துவதற்காக பிறந்தது என்றும் சமூக வலைதளங்கள் ஒருவரை புகழின் உச்சிக்கும் கொண்டு செல்லும் அதே சமூக வலைதளம் ஒருவர் உருவாக்கிய பிம்பத்தை ஒரு நொடியில் உடைத்து விடும் என்று கூறினார்மேலும் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் 'நாங்கள்  ஆரிய ஆதிக்கத்துக்கு தான் எதிரியே தவிர ஆன்மீகத்திற்கு அல்ல' என்று கூறிவிட்டு அவரது மனைவி துர்கா ஸ்டாலின் தொடர்ந்து பல கோயில்களுக்கு சென்று வருவதையும் எடுத்துக்காட்டாக கூறினார்.

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு ஆட்சியை கலைந்தாலும் பரவாயில்லை சனாதனத்தை எதிர்ப்பதில் நாங்கள் கைவிட மாட்டோம் என்று கூறிய திமுக தற்போது அதில் இருக்கும் முக்கிய தலைவராகிய முதலமைச்சர் ஸ்டாலினே நாங்கள் ஆன்மீகத்திற்கு எதிரி கிடையாது என்று கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது. மேலும் இது பற்றி அரசியல் விமர்சகர்களிடம் கேட்டபொழுது சனாதனத்தை பற்றி இனி ஒரு வார்த்தை தவறாக பேசினால் இந்திய கூட்டணியில் இருந்து விலக்கி வைத்து விடுவோம் என்று சோனியா காந்தி நேரடியாகவே திமுக தலைமையிடம் கூறிவிட்டதால் தமிழக முதல்வர் ஸ்டாலின் 'ஆன்மீகத்திற்கு நாங்கள் எதிரி கிடையாது' என்று கூறியிருப்பதாக அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

மேலும் தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி உடன்பாட்டிலும் தொகுதி எண்ணிக்கையை அதிகமாக காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்து வருவதால் திமுக காங்கிரஸ் கூட்டணியில் இந்த விவகாரமும் விரிசலை ஏற்படுத்தும் என தெரிகிறது. சனாதன விவகாரத்தை வைத்து திமுகவிற்கு செக் வைக்க காங்கிரஸ் டெல்லி தலைமை முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கின்றன. இவை எல்லாவற்றிற்கும் காரணம் உதயநிதி பேசிய சனாதன விவகாரம் தான் சனாதன விவகாரத்தை பேசி பாஜகவிற்கு செக் வைக்கிறேன் என காங்கிரஸிடம் வசமாக திமுக சிக்கிக் கொண்டது எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.