24 special

உங்க பாவத்தின் அளவுகள் தெரியனுமா....?

PERUMAL TEMPLE
PERUMAL TEMPLE

இந்த உலகில் நாம் வாழும் அனைவரும் ஏதோ ஒரு வகையில் ஒன்றின் மீது நம்பிக்கை கொண்டிருப்போம் அதன்படியே ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு மாதமும் தோன்றியது அந்த சமயத்தை பின்பற்றுபவர்கள் அப்படி நம்பிக்கை கொண்டவர்கள் அனைவரும் இந்த உலகில் நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே இறந்த பிறகு நம் ஆன்மா சொர்க்கத்தையும் நரகத்தையோ அடையும் என்பது அனைவரும் கொண்ட ஒரு வித நம்பிக்கை! அதன்படி உலகில் வாழும் ஒருவர் தனது புண்ணியத்தை மீறி பாவத்தை செய்திருந்தால் நரகத்திற்கு செல்வதும் பாவத்தை மீறிய புண்ணியம் செய்திருந்தால் சொர்க்கத்திற்கு செல்வதாகவும் கூறப்படுகிறது அந்த வகையில் ஒருவர் நரகத்திற்கு சொல்லும் முன்பு பூலோக வைகுண்டமாக கருதப்படுகின்ற திருவெள்ளரையின் திரு கோபுரத்தில் உள்ள பெருமானை தரிசித்தது உண்டா என்றும் கேட்பாளர்களாம் ஒருவேளை தரிசித்துள்ளோம் என்ற உண்மையை அவர்கள் கூறினால் அந்த ஆன்மா செய்த பாவங்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டு சொர்க்கத்திற்கு கூட்டிச் செல்லப்படுமாம் அப்படி ஒரு பாவத்தை தீர்க்கக் கூடிய ஒரு புனித தளமாக விளங்குகிறது திருச்சி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு புண்டரிகாட்சன் திருக்கோவில்! 


இந்த கோவில் மற்ற கோவில்களை விட மிகவும் அற்புதமான கலை வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது ஏனென்றால் ஒரு கோட்டை வடிவமைப்பில் இந்த கோவில் கட்டப்பட்டு பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது அது மட்டும் இன்றி சுமார் 50 அடி உயரத்தில் வெண்மையான பாறையால் ஆன ஒரு குன்றின் மீது இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காகவே இக்கோவிலுக்கு வெள்ளரை என்ற பெயர் கிடைத்தது எனவும் கூறப்படுகிறது. சரி எதற்காக தான் இந்த கோவிலுக்கு புண்டரிகாட்சன் திருக்கோவில் என்று பெயர் வந்தது என்று பார்த்தால் ஒருமுறை புண்டரீகன் என்கின்ற யோகி இந்த கோவிலில் உள்ள நந்தவனத்தில் வளர்ந்த துளசியால் பெருமாளையும் தாயாரையும் பூஜித்து வந்துள்ளார் அதனால் மகிழ்ந்த பெருமாள் இவருக்கு தரிசனம் கொடுத்த காரணத்தினாலே இங்குள்ள பெருமாள் புண்டரிகாசன் பெருமாள் என்று அழைக்கப்படுகிறாராம்! 

மேலும் 108 திருப்பதிகளில் ஒன்றான இந்த கோவில் பூலோகத்தின் வைகுண்டமாகவும் கருதப்படுகிறது மேலும் இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கட்டிடக்கலையும் ஒவ்வொரு சிறப்புகளை பிரதிபலிக்கிறதாம் 18 படிக்கட்டுகள் தாண்டியே இங்குள்ள பெருமாளை தரிசிக்க முடியுமாம் அந்த 18 படிக்கட்டுகளும் கீதையின் 18 அத்தியாயங்களை குறிக்கிறது , மேலும் அங்குள்ள கோபுர வாயில் நான்கு படிக்கட்டுகள் இருக்குமாம் அந்த நான்கு படிக்கட்டுகளும் நான்கு வேதங்களையும் பலிபீடத்தை வணங்கி 5 படிக்கட்டுகளை கடந்து வரும் பொழுது அந்த ஐந்து படிக்கட்டுகளும் பஞ்சபூதங்களை குறிக்கிறதாக கூறப்படுகிறது. இவற்றை விட இந்த கோவலின் தல வரலாறு கூறப்படும் புராண கதையை கேட்கும் பொழுது பெருமாளின் மகிமை ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. 

அதாவது திருப்பாற்கடலில் மகாவிஷ்ணு லட்சுமியும் பேசிக்கொண்டிருந்த பொழுது பெருமாள் இந்த உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் உனது கருணையாலே சந்தோஷமாக உள்ளது என்று லட்சுமி இடம் கூறியுள்ளார் அதனால் உனக்கு வேண்டிய வரங்களை என்னிடம் இருந்து கேட்டுப் பெறலாம் என்று விஷ்ணு கேட்டதற்கு எனது பிறந்த இடம் ஆன இந்த பாற்கடலில் தேவர்களை காட்டிலும் எனக்கு தான் அதிக உரிமை வேண்டும் என்று வரம் கேட்டுள்ளார் அதற்கு பெருமாள் உனது கோரிக்கையை என்னால் இங்கு நிறைவேற்ற முடியாது இங்கு நான் அனைத்துக்குமாக இருக்கிறேன் அதனால் பூமியில் சிபிச் சக்கரவர்த்திக்கு நான் தரிசனம் கொடுக்கும் பொழுது உனக்கு இந்த வரத்தை நான் கொடுக்கிறேன் என்று கூறினார் அதன்படியே அரசர் சிபிச் சக்கரவர்த்திக்கு விஷ்ணு தரிசனம் கொடுக்கும் பொழுது மகாலட்சுமியின் காட்சி கொடுத்து மகாலட்சுமியிடம் நீ விரும்பியப்படியே இந்த தளத்தில் உனக்கு சகல அதிகாரத்தையும் தந்துவிட்டு நான் அர்சரூபமாக இருந்து கொண்டு நான் அனைவருக்கும் அருள் பாளிக்கிறேன் என்று கூறினார்! 

இதற்குப் பிறகு அரசனும் பெருமாளுக்கு கோவில் கட்டி சேவை செய்வதற்காக 3, 700 குடும்பங்களை அழைத்து வந்திருக்கிறான் வரும் வழியில் ஒருவர் இறந்து விட்டதால் அதற்கு மனம் உடைந்து சிபிச் சக்கரவர்த்திக்கு ஆதரவாக பெருமாளே அரசனிடம் நீ கவலைப்பட வேண்டாம், நானே இறந்தவருக்கு பதிலாக வந்து 3700 பேரில் ஒருவராக இருந்து நீ நினைத்த  3700 குடும்ப கணக்குகள் குறைவுபடாமல் பார்த்துக் கொள்கிறேன் என்று அருள்பாளித்துள்ளார் அதன்படியே இங்கு நடைபெறும் திருவிழா காலங்களில் பெருமாளுக்கு முன்பாக பல்லக்கில் பெருமாள் அளித்த வரத்தின் படி தாயார் செங்கமலவல்லி மூலஸ்தானத்திலேயே இருந்து கொண்டு எழுந்தருளுகிறார். இப்படி ஒரு மன்னனின் வேண்டுகோளுக்காக பெருமாளே இறந்தவரின் குடும்பத்தில் ஒருவராக இந்த பூலோகத்திற்கு இறங்கி வந்தது இத்தளத்தின் முக்கிய சிறப்பாகும்! அதுமட்டுமில்லாமல் உங்கள் பாவங்கள் அளவு என்ன என அறிந்து அவை அனைத்தும் இங்கு வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என கூறப்படுகிறது....