24 special

வம்படியாக வந்து அசிங்கப்பட்ட ஜோதிமணி..! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

Annamalai, Jothimani
Annamalai, Jothimani

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடக்கி நாட்டில் 7 கட்டங்களாக நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார். அதன் பிறகு தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர்  உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக வேட்பாளர் பட்டியலில் பாஜக சார்பாக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார் அங்கு அவருக்கு ஆதரவும் அதிகரித்து உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளது பாஜகவினரிடம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோயம்பத்தூரில் போட்டியிடுகிறார், பாரத பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி தென்சென்னையில் தமிழிசையும், கோவையில் மாநில தலைவர் அண்ணாமலையும் போட்டியிடுகின்றனர். பாஜக கட்சி தற்போது தனித்து நிற்க காரணமே அண்ணாமலை தான் அந்த அளவுக்கு தமிழகத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில், கொங்கு  பகுதியான கோவையில் அண்ணாமலை போட்டியிடுவதால் வெற்றி பெறுவார் என்று அனைத்து தரப்பிலும்  கூறப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மட்டும் எதிராக கருத்தை தெரிவித்துள்ளார்.

அதவாது, பாஜக தலைவர் அண்ணாமலை கரூர்  நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்தவர். அவர் கடந்த முறை கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். பாஜக அவர் தலைமையில் தமிழகத்தில் வளர்ந்திருக்கிறது என்றால் அவர் சொந்த தொகுதியில் போட்டியிடாமல் கோவையில் போட்டியிடுவது ஏன்? கரூர் தொகுதியில் போட்டியிட்டால் டெபாசிட் போய்விடும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் இந்திய கூட்டணி வேட்பாளராகிய என்னை எதிர்த்து நிற்க பயந்து கோவைக்கு ஓடிவிட்டார் என்று தெரிவித்தார். 

இந்த காணொளி இணையத்தில் உலா வர பாஜகவை சேர்ந்தவர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். கரூரில் எம்பி ஜோதிமணி கடந்த முறை திமுகவின் தயவால் வெற்றி பெற்றார். இந்த முறை அங்கு சீட் கொடுப்பதற்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஜோதிமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார்கள். இதனால் காங்கிரஸ் மாநில  தலைவர் செல்வ பெருந்தகை ஜோதிமணிக்கு சீட் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் ஜோதிமணி காங்கிரஸ் தலைவர்களிடம் கேட்டு தான் தற்போது சீட் வாங்கினார் என்றும் அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது.

மேலும், இந்த முறை கரூரில் பாஜக சார்பாக செந்தில்நாதன் போட்டியிடுகிறார், அங்கு அதிமுக சார்பாக தங்கவேல் போட்டியிடுகிறார். இதனால் திமுகவினரே அதிமுக, பாஜகவை தான் தேர்தெடுப்பார்கள். தற்போது திமுக செல்வாக்கு உடைய நிர்வாகிகள் யாரும் கரூரில் இல்லை. ஜோதிமணி இந்த முறை டெபாசிட் வாங்கவே முடியாது மைக்  கிடைத்தால் எதாவது உலர வேண்டியது. சொந்த கட்சியினரே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் மக்கள் தொகுதி பக்கம் வரவில்லை என்று விரட்டி அடிக்கின்றனர். நீயெல்லாம் அண்ணாமலையை  விமர்சிக்கலாமா என பாஜகவினர் பதிலடி கொடுத்து இந்த தேர்தலோடு மீண்டும் போட்டியிட்டால் பார்க்கலாம் என்று விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.