24 special

சூரியிடம் வேலையை காட்டிய அறிவாலயம்....

ACTOR SURI, UDHAYANITHI
ACTOR SURI, UDHAYANITHI

தமிழக அரசியல் கட்சிகளிலேயே அதிக சினிமா தாக்கத்தையும் சினிமா பின்புறத்தையும் சினிமா மூலமே தனது அரசியலையும் நிகழ்த்தி வருகின்ற ஒரு கட்சியாக பார்க்கப்படுவது திராவிட முன்னேற்ற கழகம் இதனை மறுக்க முடியாது ஏனென்றால் இக்கட்சியின் தலைவரும் தமிழகத்தின் முதல்வருமான முக ஸ்டாலின் அவர்களின் மகன் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்கின்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஆரம்பத்தில் இந்த தயாரிப்பு நிறுவனத்தை மட்டும் நடத்தி வந்த இவர் பிறகு படிப்படியாக அரசியல் பக்கம் நுழைய ஆரம்பித்து தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த வாரிசு என்ற பதவியை பெற உள்ளார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இவரது நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் தமிழக முழுவதும் நல்ல வரவேற்பு பெற்றது. அந்த படத்திலும் தனது அரசியலை புகுத்தி பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மாமன்னன் திரைப்படத்தை வெளியிட்டார் என்பதும் அரசியல் வட்டார முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.


மேலும் இப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் உதயநிதியின் நெருங்கிய நண்பராகவும் இப்படத்திற்குப் பிறகு மாறியுள்ளார் அது மட்டும் இன்றி தமிழக முழுவதும் பரவலான மழை பெய்த பொழுது சென்னை மற்றும் தென் தமிழகத்தில் பெய்த மழையின் தாக்கத்தால் பெரும்பாலான பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கி பெரும்பாதிப்பை சந்தித்தது அந்த பாதிப்பை பார்வை இடுவதற்கு அமைச்சர் உதயநிதியுடன் மாரி செல்வராஜ் சென்றது செய்திகளில் பரபரப்பாக வெளியாகியதோடு அரசியல் வட்டாரம் முழுவதும் விமர்சனங்களை பெற்றது ஏனென்றால் ஒரு படத்தின் இயக்குனராக நடிகராக இருவரும் சேர்ந்து பணிகளை முடித்து விட்ட பிறகும் அமைச்சர் தன் பணியை செய்வதற்கு சென்ற பொழுது அவருடன் மாறி செல்வராஜூம் சென்றது எதற்காக என்ற வகையிலான விமர்சனங்களும் அதற்கு மாரி செல்வராஜ் பதிலளிக்கும் வகையில் பலரது கோபத்திற்கு உள்ளாகும் வகையிலான கருத்துக்களை பதிவிட்டது குறிப்பிடத்தக்கது. 

இப்படி மாரி செல்வராஜ் உதயநிதியின் ஆதரவாளராக செயல்படுவது போன்று தமிழகத்தில் பெரும்பாலான திரை உலக பிரபலங்கள் திமுகவிற்கும் உதயநிதிக்கும் ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள் என்பதும் அரசியல் வட்டாரம் முழுவதும் கிசுகிசுக்கப்படுகின்ற ஒன்று!! ஏனென்றால் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போர் வீரர்களாக காட்சி அளித்த சினிமா பிரபலங்கள் தற்போது எந்த பிரச்சினைக்கும் குரல் கொடுக்காமல் இருக்கின்றனர். இந்த வரிசையிலேயே நடிகர் சூரி தமிழ் சினிமாவில் தற்போது ஒரு நடிகர் என்று அங்கீகாரத்தை பெற்று வருகிறார் இவர் தமிழகம் முழுவதும் அம்மன் என்ற உணவகத்தையும் நடத்தி வருகிறார் இந்த உணவகம் தமிழக முழுவதும் பிரபலமான ஒன்றாகும் ஆனால் இதற்கான இடம் கட்டுமான பணிகளுக்கு தேவையான அனுமதிகள் என அனைத்திற்கும் திமுக ஒரு முக்கிய உதவியை செய்து வருவதாகவும் இதனால் சூரி திமுகவில் உள்ள வடிவேலுவின் இடத்தை பிடிக்கலாம் என்ற வகையிலும் அரசியல் விமர்சகர்களால் கூறப்பட்டது. 

அதோடு திமுகவின் சில நிகழ்ச்சிகளிலும் சூரி கலந்து கொண்டு திமுகவின் முக்கிய அமைச்சர்களுடன் நெருங்கி பழகியுள்ளார் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த நிலையில், பத்திரிகையாளர்கள் மத்தியில் உதயநிதி பற்றி சூரி கூறியுள்ள ஒரு கருத்து தற்போது அரசியல் வட்டாரங்களில் பல சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது,  தமிழக அரசியல் தற்போது லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகளை முழுமூச்சில் செய்து வருகிறது ஏறத்தாழ வேட்பாளர்கள் அறிவிப்பது தொகுதி பங்கீடு செய்வது கூட்டணியை அறிவிப்பது என அனைத்து நடவடிக்கைகள் முடித்துவிட்டது ஏன் சில கட்சிகள் வாக்குறுதிகளை அளித்து விட்டனர் இன்னும் சில கட்சிகள் வாக்குறுதிகள் விரைவில் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

அதோடு ஒவ்வொரு வேட்பாளர்களும் தங்கள் பகுதியில் பிரச்சாரங்களை ஆரம்பித்து விட்டனர். அதனால் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிகள் பத்திரிகையாளர்களை சந்தித்த சூரி தனது படத்தின் குறித்த அறிவிப்புகளை கூறிய பிறகு உங்கள் நண்பர் உதயநிதி பிரச்சாரத்திற்கு உங்களை அழைக்கவில்லையா என்று கேள்வி முன்வைக்கப்பட்டதற்கு அவர் என்னை அழைக்கவில்லை ஆனால் நான் என் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளேன் என்று கூறி பிறகு சமாளிக்கும் விதமாக அவருக்கு தெரியும் நான் படங்களில் பிஸியாக இருக்கிறேன் என்று அதனால் என்னை அழைத்து இருக்க மாட்டார் என சூரி கூறி உள்ளதும் தற்போது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றதோடு பல கேள்விகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது!!