தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள் அரசு அதிகாரிகளுடன் துபாய் சென்று இருக்கிறார், வெளிநாட்டு முதலீடுகளை தமிழத்திற்கு கொண்டு வர ஸ்டாலின் துபாய் சென்று இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். இந்த சூழலில் முதல்வரின் வெளிநாட்டு பயணம் திமுகவினரிடையே வரவேற்பை பெற்ற நிலையில் பொது மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
அரசு சார்பு பயணத்திற்கு ஏன் முதல்வர் தனது மருமகன் முதல் பேரன்கள் வரை அழைத்து செல்லவேண்டும்? ஏன் தனி விமானத்தில் துபாய் செல்லவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்தன? மேலும் கடந்த முறை எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்றபோது அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் நீங்கள் சென்று இருப்பது அரசுமுறை பயணமா? அல்லது சுற்றுலா பயணமா என்று கேள்வி எழுப்பினார்.
இப்போது அதே வீடியோவை பகிர்ந்து முதல்வர் ஸ்டாலினை கேள்வி எழுப்பி வருகின்றனர் எதிர்க்கட்சிகள். இந்த சூழலில் முதல்வர் ஸ்டாலின் பயணித்த ஹெலிகாப்டர் கட்டணம் ஒரு கோடி ரூபாய் என பிரபல தமிழக நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில்.,
இதுகுறித்து, தனியார் விமான சேவை நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:இருக்கை வசதியைப் பொறுத்து, ஒவ்வொரு தனி விமானத்தின் கட்டணங்களும் வேறுபடும். பால்கான், பினோம், லீயர்ஜெட், அஸ்ட்ரா எஸ்.பி., போயிங் பிசினஸ் ஜெட் என, தனி விமான சேவையில் பல ரகங்கள் உள்ளன.இதில், நான்கு பேர் பயணிக்கக் கூடிய விமானத்திற்கு, ஒரு மணி நேரத்திற்கு 1.85 லட்சம் ரூபாய் அடிப்படைக் கட்டணம். எத்தனை பேர் என்பதற்கேற்ப கட்டணம் மாறுபடும்.
இதுவே, 50 பேர் வரை பயணிக்கும் விமானத்திற்கு 17.50 லட்சம் ரூபாய் கட்டணம். இந்த அடிப்படை கட்டணம், விமான வகைகளுக்கு ஏற்ப மாறுபடும்.மேற்கூறிய அனைத்தும், ஒரு மணி நேரத்திற்கான அடிப்படைக் கட்டணம் மட்டுமே. இத்துடன், விமான நிலையங்களில் புறப்பாடு மற்றும் தரையிங்குவதற்கான கட்டணம், விமானத்தை நிறுத்துவதற்கான கட்டணம் உட்பட இதர கட்டணங்களும் உண்டு.40 லட்சம் ரூபாய்முதல்வர் ஸ்டாலின் பயணித்ததாகக் கூறப்படும் விமானத்திற்கு, ஒரு மணி நேரத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை அடிப்படை கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
இத்துடன், இதரக் கட்டணங்கள் இணையும் போது, சென்னையில் இருந்து துபாய் செல்ல 40 லட்சம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கலாம். இது ஒரு வழி பயணத்திற்கான கட்டணம்.இது தவிர, துபாயில் விமானத்தை நிறுத்துவதற்கான கட்டணம், மீண்டும் அங்கிருந்து சென்னை வருவதற்கான கட்டணம் என, அதிக பட்சம் 1 கோடி ரூபாய் வரை, கட்டணம் நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளது.இவை, அனைத்தும் தோராய கட்டண விபரம் மட்டுமே. ஒவ்வொரு விமான சேவை நிறுவனங்களைப் பொறுத்தும், கட்டணங்கள் மாறுபடும்.இவ்வாறு அவர்கள் கூறினர் என நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
இந்த சூழலில் தனி விமானத்தின் செலவை திமுக ஏற்று கொள்வதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார் மேலும் டிக்கெட் கிடைக்காத காரணத்தால் தனி விமானம் புக் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார், இந்த சூழலில் முதல்வர் வெளிநாட்டு பயணத்தின் போது துபாய் சென்ற பல விமானங்களில் பிசினஸ் கிளாஸ் டிக்கெட் இருந்ததை பலர் பகிர்ந்து வருகின்றனர்.
அத்துடன் இப்படி ஆடம்பர செலவு செய்வதற்கு பதில் இந்த பணத்தில் எத்தனை ஏழை குழந்தைகளை படிக்க வைக்கலாம் எனவும் நெட்டிசன்கள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.