24 special

பாஜகவில் "அதிரடி மாற்றம்" .. யார் யார் உள்ளே யார் வெளியே...!

Annamalai
Annamalai

பாஜக தேசிய அமைப்பு செயலாளர் BL.சந்தோஷ் தமிழகம் வருகை தந்துள்ளார். தமிழக பாஜகவின் அடுத்தகட்ட செயல்பாடு குறித்து ஆலோசனை நடத்தவும், கட்சி எதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என மாநில நிர்வாகிகள் மட்டத்தில் ஆலோசனை நடத்தவும் அவர் வருகை தந்ததாக கூறப்படுகிறது.


இந்த சூழலில் பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் நிர்வாகிகள் மாற்றம் குறித்தும் கட்சியில் மாவட்ட முதல் மாநில நிர்வாகிகள் வரை மாற்றம் செய்வது குறித்து பட்டியல் ஒன்றை தயாரித்து இருப்பதாகவும் அது குறித்து இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை செய்து இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.


கட்சியில் புது முகங்கள் பலவற்றிற்கு பொறுப்புகள் வழங்க இருப்பதாகவும் மேலும் தற்போதுள்ள நிர்வாகிகள் பலருக்கு பதில் புதிய நிர்வாகிகள் பலர் கட்சியில் நியமிக்க அண்ணாமலை முடிவுசெய்துள்ளாராம், மேலும் BL சந்தோஷ் உடன் மாரிதாஸ் சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

2024 தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் வேட்பாளர்கள் போன்றோரை கணக்கில் கொண்டு நிர்வாகிகள் மாற்றம் இருக்கலாம் எனவும் குறிப்பாக இளைஞர் அணி தொடங்கி, சமூக வலைத்தள அணி, பொது செயலாளர்கள், வர்த்தக அணி என அனைத்திலும் மாற்றம் இருப்பதாக கூறப்படுகிறது.

பல முறை பட்டியல் மாற்றம் இருக்கும் என கூறிய நிலையில் இந்த முறை நிச்சயம் மாற்றம் இருக்கலாம் என கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய பட்டியலில் தங்களுக்கு இடம் கிடைக்க வேண்டும் என பலர் எதிர் பார்த்து காத்திருக்கும் சூழலில் யார் உள்ளே யார் யார் வெளியே என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.