தமிழக ஆட்சி கட்டிலில் திமுக ஏறிய பிறகு பல அதிரடி மாற்றங்களை செய்து வருவதாக திமுக ஆதரவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு கொண்டு இருக்க உண்மையான நிலைமையோ மக்களை ஆபத்தில் தள்ளும் வகையில் அமைந்துள்ளது.
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து இது பல குழுக்களை அமைத்து உத்தரவிட்டு வருகிறார் குறிப்பாக ஆட்சிக்கு வந்த 45 நாட்களில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு; மாநில நிதி ஆதாரம் குறித்து ஆராய ஜெயரஞ்சன் தலைமையில் ஒரு குழு; கருப்பு பூஞ்சையைக் கண்டறிய டாக்டர் மோகன் தலைமையில் ஒரு குழு; கரோனா குறித்து ஆராய டாக்டர் குகநாதன் தலைமையில் இன்னொரு குழு என அண்மையில் தான் பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இந்த குழுக்கள் எல்லாம் போதவில்லை போலும். இப்பொழுது சர்வ தேச குழு ஒன்று புதிதாக முளைத்துள்ளது. நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்லோ, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன் உள்ளிட்டவர்கள் அடங்கிய முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழு அமைக்கப்படும் என நேற்றைய ஆளுநர் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கொடுமை என்னவென்றால் இவர்களின் சம்பளங்கள் பல ஆயிரம் டாலர்கள், ஏற்கனவே நிதி பற்றாக்குறையில் இருக்கும் தமிழக அரசு எவ்வாறு இவர்களுக்கு சம்பளம் கொடுக்க போகிறது, பொருளாதார ஆலோசனை சொல்ல தமிழகத்தில் எந்த தமிழர்களும் இல்லையா? வெளிநாட்டில் இருந்து இருவர் வந்துதான் இதனை செய்ய வேண்டுமா? அவர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில் 1000 தமிழர்களுக்கு வேலை கொடுக்கலாமே?
சரி இவர்கள் சம்பளம் எவ்வளவு ரகுராம் ராஜன் உட்பட அனைவரின் மொத்த சம்பளமும் ஆண்டிற்கு குறைந்தது 4 முதல் 5 கோடிக்கு குறையாமல் இருக்கும் என கூறப்படுகிறது, இதில் விமான செலவுகள்,தங்கும் இடத்தின் செலவு, அவர்களின் உதவியாளர் செலவு என அனைத்தும் தமிழக அரசின் மீதும் தமிழர்களின் மீதும்தான் விழ போகிறது.
ஏற்கனவே காங்கிரஸ் அரசு மேற்கொண்ட தவறான பொருளாதார கொள்கைக்கு காரணமானவர் என விரட்ட பட்டவர் ரகுராம் ராஜன் அவரை தமிழக அரசின் பொருளாதார ஆலோசனை குழுவில் நியமித்து இருப்பது முழுக்க முழுக்க மோடி எதிர்ப்பு மட்டுமே ஒரே நோக்கம் என கூறப்படுகிறது.
மொத்தத்தில் புதிய தமிழக அரசு சிக்கனமாக செயல்பட்டு பொருளாதாரத்தை மேம்படுத்தும் என பார்த்தால், குழு மேல் குழுவாக அமைத்து தமிழக மக்களை சிக்கலில் சிக்க வைக்கிறது, இதில் கொடுமை என்னவென்றால் குழுவில் இடம்பெற்றுள்ள மூவர் பிராமணர்கள் எனவும் பிராமணர்கள் இல்லை என்றால் திமுகவே இல்லை என்ற சூழல் மீண்டும் நிரூபணமாகியுள்ளது என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.
ஸ்டாலின் அமைத்துள்ள குழுக்களுக்கு சம்பளம் கொடுத்தே தமிழர்களின் சோலி முடியபோகிறது என பலரும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.