தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இயக்குனர் அமீர் பற்றி கூறிய விபரம் தான் தற்பொழுது தமிழ் சினிமா உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 'என்னுடைய முதல் படமான பருத்திவீரனில் என்னை ஏமாற்றி விட்டார், நிறைய பொய் கணக்கு காட்டி இன்னும் சொல்ல வேண்டும் என்றால் பன்றி வாங்குவதில் கூட பொய் கணக்கு காட்டி இயக்குனர் அமீர் ஏமாற்றிவிட்டார் அதனால் தான் தற்பொழுது வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்' என ஞானவேல் ராஜா கூறினார். இதற்கு அமீர் தரப்பிலிருந்து பல்வேறு எதிர்ப்பு அலைகள் வெளிவந்தன, குறிப்பாக இயக்குனர் சமுத்திரகனி, நடிகர் சசிகுமார், கரு.பழனியப்பன் போன்றோர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.
சூர்யா இதற்கு பேச வேண்டும் எனவும் வேறு திரையுலகில் இருந்து குரல்கள் மெதுவாக எழதுவங்கின.இந்த நிலையில் இது தான் சாக்கு என ஞானவேல் ராஜாவை திரையுலக சினிமா விமர்சகர்கள் வேறு தற்பொழுது தாக்க துவங்கியுள்ளார்கள். இதன் பகீர் பின்னணி வெளிவந்துள்ளது, கடந்த 2019 ஆம் ஆண்டு குறிப்பாக பிறந்தநாள் பிரதமர் பிறந்தநாள் கொண்டாட்ட குறும்பட போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது. அப்போது அந்த பரிசளிப்பு விழாவில் வானதி சீனிவாசன் தயாரிப்பாளர், ஞானவேல் ராஜா, இயக்குனர் கஸ்தூரிராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
அப்பொழுது சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியதுதான் இப்போதைய அவரை குறிவைத்து அனைவரும் டார்கெட் செய்து கார்னர் செய்வதற்கு காரணம் என தெரியவந்துள்ளது. அப்போது ஞானவேல் ராஜா பேசும் பொழுது 'ஹிந்தியை மத்திய அரசு திணிப்பதாக இல்லை, மற்றொரு மொழியை தெரிந்து கொள்வதில் தவறு இல்லை! இதனை தமிழகத்தில் அரசியல் ஆக்குகிறார்கள். பொது மொழி ஒன்று இருப்பது அவசியம், ஒரு மொழி இருப்பதினால் இன்னொரு மொழி அழியும் என்ற பிரச்சாரம் ஒரு கும்பலால் தவறாக இங்கு பரப்பப்படுகிறது. பள்ளிகளில் இந்தி மொழி இருப்பது நல்லது! இங்கு இருக்கும் குழந்தைகள் புரிந்து கொண்ட அளவுக்கு இங்கு உள்ள மூத்த அரசியல்வாதிகளும் புரிந்து கொண்டால் எவ்வளவு நல்லது என எனக்கு தோன்றுகிறது.
ஏனென்றால் அவர்களுக்குள் ஒரு பயம் இருக்கிறது.இந்தியை எல்லோரும் கற்றுக் கொண்டால் நாமும் பார்க்க வேண்டி வரும்! மோடி பேசுவது புரிந்துவிடும் நாமும் மாறிவிடுவோமோ என்ற ஒரு பதட்டமும் பயமும் இருக்குமோ என்று தான் தோன்றுகிறது' என ஞானவேல் ராஜா பேசினார்.மேலும் அந்த விழாவில் கஸ்தூரிராஜா 'பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் இந்தியாவிற்கு நல்ல தலைவர் கிடைத்துள்ளார்' என பிரதமர் மோடியை குறிப்பிட்டார். மேலும் 'பிரதமர் மோடியால் தான் இந்தியாவை காப்பாற்ற முடியும். இனி தமிழகம் தான் காப்பாற்றப்பட வேண்டும்' என இயக்குனர் கஸ்தூரிராஜா கூறிய குறிப்பிடத்தக்கது.
இப்படி ஞானவேல் ராஜாவை மோடி ஆதரவாளர் என முத்திரை குத்தி மோடியை எதிர்க்க நினைக்கும் அனைவரும் தற்போது எதிர்க்க காரணமாகிவிட்டது எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்தி மொழி கற்க வேண்டும், இந்தி கற்றுக் கொண்டால் மோடி பேசுவது அனைத்தும் இங்குள்ளவர்களுக்கு புரிந்து விடும் என அன்று ஞானவேல் ராஜா பேசியதை மனதில் வைத்து தான் இன்று ஞானவேல் ராஜாவை மொத்தமாக ஓரம் கட்டுகிறார்கள் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இது மட்டுமல்லாமல் சிவக்குமார், சூர்யா குடும்பத்தில் இருந்து இப்படி இடதுசாரிகளை நம்பி மோசம் போய் விட்டோமே நமது உறவினரான ஞானவேல் ராஜாவை இவர்கள் இப்படி எல்லாம் ஓரங்கட்டுகிறார்கள் என வேறு புலம்பி வருவதாகவும் சில தகவல்கள் கசிந்துள்ளன.