
தமிழகத்தில் இதற்கு முன்பாக அதிமுக ஆட்சிக்காலம் நடைபெற்றிருக்கும் பொழுது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த புகார் குறித்த வழக்கு விசாரணை சமூக வலைதளங்களில் பத்து ரூபாய் பாலாஜி என்ற பெயர் வைரலானதை அடுத்து தீவிரம் பெற்றது. இதனால் கடந்த மே மாதத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான விவகாரம் பரபரப்பாக பேசப்பட்ட பொழுது வருமானவரித்துறையினர் கரூர் கோவை சென்னை என தமிழக முழுவதும் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு தொடர்புடைய 40 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
அப்படி கரூர் மாவட்டம் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை இடச்சென்ற பொழுது அப்பகுதியில் முன்கூட்டியே கூடியிருந்த திமுக தொண்டர்கள் அதிகாரிகளை சோதனையிட விடாமல் தடுத்தனர் இதனால் அதிகாரிகளுக்கும் திமுக தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது. அது மட்டுமின்றி வருமானவரித்துறை பெண் அதிகாரி காயத்ரி என்பவரை செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் தாக்கியதும் பெரும் பரபரப்பானது. அதோடு வருமானவரித்துறை அதிகாரிகள் வந்த காரின் மீதும் திமுகவினர் கல்லெறிந்து காரின் கண்ணாடியை உடைத்துள்ளனர். இதனால் வருமானவரித்துறை அதிகாரிகள் கரூர் நகர காவல் நிலையத்திற்கு சென்று பெண் அதிகாரி காயத்ரியை தாக்கியது குறித்தும் காரின் கண்ணாடியை உடைத்ததை குறித்தும் புகார் அளித்தனர். இந்த விவகாரம் இந்த ஒரு பகுதியில் மட்டுமின்றி பத்தி இருக்கும் மேற்பட்ட இடங்களில் இது போன்று வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு நடந்தது அதனால் கரூர் நகர காவல் நிலையம் மற்றும் கரூர் மாவட்ட எஸ்பி ஆகியோரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்.
அதோடு காயமடைந்த அதிகாரிகள் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை முடிந்து உடனே தங்களை தாக்கிய திமுக வினர் மீது வருமானவரித்துறை தரப்பில் முறையாக புகார் அளிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு தீவிரம் பெற்றது அமலாக்கத்துறை அதிகாரிகளும் வருமானவரித்துறை அதிகாரிகளை தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர், தற்பொழுது வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஜாமின் கிடைக்காமல் புழல் சிறையில் கிடக்கிறார் செந்தில் பாலாஜி! ஆனால் இந்த விவகாரத்தில் ஏழை குடும்பத்தில் இருந்து தடகள வீராங்கனையாக வருமானவரித் துறையில் பணிபுரிந்து வரும் காயத்ரியை தாக்கியதற்காக திமுகவினருக்கும் பதிலடி கொடுக்க வேண்டும் என வருமானவரித்துறை தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கு தீவிரமாக்கப்பட்டது.
ஆனால் இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வருக்கும் ஜாமீன் கிடைத்தது அந்த தீர்ப்பை எதிர்த்து ஐடி அதிகாரிகள் தரப்பில் கரூரில் ஐடி அதிகாரிகளை தாக்கிய நால்வருக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிகாரியை தாக்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நால்வரின் ஜாமினையும் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் முக்கிய ஆதாரமாக வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கச் சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வீடியோ ஒன்று வருமானத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை எடுத்து ஐடி அதிகாரிகளை தாக்கிய நால்வருக்கும் தண்டனைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.