Cinema

பேமிலிமேனாக தயாரான முரட்டு சிங்கிள்...! இது லிஸ்டுலேயே இல்லையே!

Premji
Premji

தமிழ் சினிமாவின் இயக்குனராகவும், இசையமைப்பாளராகவும் உச்சம் பெற்றவர் கங்கை அமரன். இவரின் படங்கள் அனைத்தும் இன்றும் மக்களிடம் பேசப்படுகிறது. இவரின் மகன்கள் தான் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் துணை நடிகர் பிரேம்ஜி. ஹீரோவாக படங்களில் நடித்த வெங்கட் பிரபுவுக்கு அது செட்டாகவில்லை. அதனால் அதை விடுத்து சென்னை28 படத்தினை இயக்கினார். இதில் மிர்ச்சி சிவா, அகத்தியன் மகள் விஜயலெட்சுமி, ஜெய், ஆகாஷ் அரவிந்த், வசந்த் விஜய், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.


அந்த படம் எதிர்பார்த்ததை விட மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது, அதன் பிறகு வெங்கட்பிரபு இயக்கும் அனைத்து படத்திலும் தனது தம்பி பிரேம் ஜி மற்றும் முதல் படத்தில் ஆரம்பித்த சினிமா வட்டாரங்களை அப்படியே தனது எல்லா படத்திலும் ஒரு கேரட் கொடுத்தார் வெங்கட்பிரபு. அதனாலே, வெங்கட் பிரபு தன்னுடைய தம்பியை தன் எல்லா படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரை கொடுத்து நடிக்க வைத்து விடுவார். அந்த வகையில் சமீபத்தில் ரிலீஸான மாநாடு படத்திலும் நடித்து இருந்தார் பிரேம்ஜி. இவரும் நிதின் சத்யாவின் தோழா, ஜெய்யின் அதே நேரம் அதே இடம் உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

வெங்கட்பிரபுக்கு திருமணம் முடிந்த நிலையில் கங்கை அமரனின் இரண்டாவது பையனான பிரேம்ஜி 44 வயதாகும் பிரேம்ஜி தன்னை எலிஜிபில் பேச்சுலர் எனச் சொல்லிக்கொண்டு இருக்கிறார். சமீபத்திய புத்தாண்டி போஸ்டில் கூட இந்த வருடம் கண்டிப்பாக எனக்கு கல்யாணம் ஆகும் என பதிவிட அவர் காமெடி பண்ணுவதாகவே சிலர் நினைத்தனர். ஆனா அதான் உண்மையாம் வீட்டில் திருமண பேச்சு ஆரம்பித்துள்ளனராம். அதிலும் காதல் திருமணமாக இருப்பதாக கூறப்படுகிறது. இவர் காதலை சொல்ல 24 வயதாகும் அவரும் ஓகே சொல்லியதாக தகவல்கள் தெரிவிக்கிறது. படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரேம்ஜி வெங்கட்பிரபு இயக்கத்தில் சென்னை 600028 2 மற்றும் மங்காத்தா, சூர்யாவுடன் மாஸ் என்கிற மாசிலாமணி, சரோஜா, தற்போது விஜயின் தளபதி 69 உள்ளிட்ட படத்தில் நடித்து வரும் இவர் சிங்கிளாகவே தன்னை ரசிகர்களிடம் சுற்றி வந்த அவர் திருமணத்திற்கான கதவு ஓபன் ஆகி விட்டதாக தெரிவித்துள்ளார். 

தற்போது சமூக தளத்தில் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் பிரேம்ஜி, இந்தாண்டிற்குள் தான் திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்துள்ளார். இந்த செய்தியை கேட்டு பலரும் கிண்டலடித்து வந்த நிலையில் உண்மையாகவே அவருக்கு திருமணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 44 வயதில் திருமணம் செய்து கொள்ளும் பிரேம்ஜியை கண்டு நெட்டிசன்கள் வயித்தெரிச்சலை கொட்டி வருகின்றனர். மேலும், பிரம்ஜி திரைப்படங்களில் யுவன் ஷங்கர் ராஜா உடன் பல பாடல்களை பாடியுள்ளார். திருமணம் செய்து கொள்ளும் அந்த பெண் குறித்து இதுவரை எந்த தகவலும் வரவில்லை முன்னதாக ரெட்டின் கிங்ஸ்லி, சங்கீதா திருமணம் முடிந்து ரசிகர்கள் கவலையில் இருக்கும் நிலையில் பிரேம்ஜி காதல் திருமணம் செய்யும் அந்த 24 வயது பெண்ணும் எதும் நடிகையாக இருந்து விட்டால் நெஞ்சு வலியே வந்திருமே என ரசிகர்கள் இப்போதே கிசுகிசுக்கின்றனர்.