Cinema

கோவிலை கட்டி கொடுத்த விஜய்.. நெகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

Vijay, SA, Shobha
Vijay, SA, Shobha

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'தி கோட்' திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி அரசியலில் குதித்துள்ள விஜய், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், விஜய் தன் தாய்க்காக ஒரு கோவிலை கட்டியுள்ளது தெரியவந்துள்ளது.


தமிழ் சினிமாவில் கிங் மேக்கராக வளம் வருபவர் நடிகர் விஜய், சினிமாவில் நெம்பர் ஒன் வசூல் மன்னனாக ஆதிக்கம் செலுத்தி வரும் விஜய் சூப்பர் ஸ்டார் ரஜினியை விட அதிகம் ரசிகர் கொண்டுள்ளார் விஜய். கடந்த சில மாதங்களாக அரசியலில் ஈடுபட்டு வரும் விஜய் மக்களுக்கு சேவையும் செய்து வந்தார். இதனால் அவர் விரைவில் அரசியலில் இறங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் அரசியலிலும் குதித்தார் விஜய். தற்போது வரை கொள்கை குறித்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்து வருகிறார். இந்த சூழ்நிலையில், திடீரென்று விஜய் சாய்பாபா கோவிலுக்கு சென்றது தொடர்பான  ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் பின்னணியில், எதற்காக விஜய் கோவிலுக்கு சென்றார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது ஆனால், சென்னையில் உள்ள இந்த கோவிலை கட்டியதே விஜய் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் தாய் ஷோபா இன்று வியாழக்கிழமை என்பதால் சாய்பாபா கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பும் போது பத்திரிக்கையாளர்களை சந்தித்து சில தகவல்களை கூறினார். அதில், " நீண்ட நாள்களாக விஜயிடம் இதை நான் கேட்டுக் கொண்டே இருந்தேன். உன் பேரில் இருக்கும் சொத்தில் எனக்கு சாய்பாபா கோயிலை கட்டிக் கொடு என்று கேட்டேன். உடனே விஜயும் எனக்காக இதை செய்திருக்கிறார். வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் நான் இங்கு வந்து சாமி தரிசனம் செய்ய இருக்கிறேன். அன்னதானமும் வழங்கப்படும் என்று ஷோபா கூறினார்.

விஜய் அந்த கோவிலுக்கு அடிக்கடி வருவதாக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர். விஜய் ஒவ்வொரு முடிவும் அனைவருக்கும் ஒரு ஷாக்கை கொடுத்து வருகிறது. கோட் படத்தில் நடித்து வந்த விஜய் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்றும் குடும்பத்திற்க்காக ஒரு கோவிலை கட்டியுள்ளது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் அரசியலில் கவனம் செலுத்தி வரும் நிலையில் அவரது இந்த மூவ் மக்களிடம் கவனத்தை பெற்றுள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழாவில் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகரும், தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தும் கலந்து கொண்டனர்.

ஆனால், விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் ஆன்மிகம் மீது நம்பிக்கை உடையவர் அவர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே விஜய் தனது தந்தையின் பேச்சை கேட்காமல் தான் அரசியலுக்கு வந்தார் என பேசப்பட்டது. பிறகு விஜய்யுடன் இருக்கும் விஜய் மக்கள் மன்ற தலைவர் புஸ்சி ஆனந்த் குறித்து சந்திரசேகர் நிகழ்ச்சி ஒன்றில் புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம் ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல என விமர்சனம் செய்திருந்தார். தந்தை மகனிடம் ஒரு நீண்டகால பிரச்சனை நீடித்து வருவதால் தான் விஜய் தாய், தந்தையிடம் விட்டு தனித்து வாழ்வதாகவும் விஜய்யின் ஒவ்வொரு முடிவும் சந்திரசேகர் விமர்சைது வருவதாக கூறப்படுகிறது.