2011 அதிமுக ஆட்சி காலத்தில் அப்போதைய திமுக முன்னாள் அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மனைவி மீது விழுப்புரம் முதன்மை நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையால் செத்து குவிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு குறித்த விசாரணை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றிய பிறகு அதில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவர்களை குற்றவாளிகள் என நிரூபிக்கும் வகையிலான போதிய ஆதாரங்கள் இல்லை என்று இருவரையும் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதனை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. அதற்குப் பிறகு கிடப்பில் போடப்பட்ட இந்த வழக்கு குறித்த மறுவிசாரணையை மேற்கொள்ள சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு குறித்து அறிவிப்புகள் செய்திகளில் வெளியான பொழுது அமைச்சர் பொன்முடிக்கு நிச்சயமாக சிறை தண்டனை கிடைக்கும் அல்லது இவரது பதவி போகும் என்ற கருத்துக்கள் அரசியல் விமர்சகர்களால் முன்வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு குறித்து அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவியும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்தார். அந்நாளில் இந்த வழக்கின் விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுதே சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு மாற்றப்பட்டார். அதாவது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உள்ள சில நீதிபதிகள் சென்னையிலிருந்து மதுரைக்கு மதுரையிலிருந்து சென்னைக்கும் மாற்றப்படுவது வழக்கமான ஒன்று. அதன்படி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த ஆனந்த வெங்கடேஷ் மதுரை கிளைக்கு மாற்றப்பட்டார். அதற்குப் பிறகு அமைச்சர் பொன்முடியின் வழக்கு குறித்த விசாரணைகளை நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் மேற்கொண்டார்.
தற்பொழுது இந்த வழக்கின் முடிவில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 50 லட்சம் ரூபாய் அபராதத்தையும் பெற்றுள்ளனர். மேலும் அமைச்சர் தனது பதவியையும் இணைந்துள்ளார். இதனை அடுத்து மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு மாற்றப்பட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் எம் பி, எம் எல் ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு தமிழகத்தில் இந்நாள் மற்றும் முன்னாள் அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைகள் ஜனவரி 2ஆம் தேதி முதல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதுமட்டுமின்றி, ஏற்கனவே தமிழக அமைச்சர்களான பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ பெரியசாமி, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோரின் சொத்துக்கவிப்பு மற்றும் ஊழல் வழக்குகளில் விடுதலை ஆனதை மறு ஆய்வு செய்யும் விதமாக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தற்பொழுது ஜனவரி முதல் வாரத்திற்கு பிறகு மீண்டும் மற்ற சில முக்கிய அமைச்சர்களின் வழக்குகளையும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தோண்டுவார் என தெரிகிறது! அதோடு உதயநிதியின் சனாதன வழக்கையும் இவர் தோண்டுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.