24 special

ஸ்டாலின் குடும்பத்தை மிக கேவலமாக பேசிய அந்த அமைச்சர் யாருன்னு தெரியுமா..!

Mk stalin
Mk stalin

ஆட்சி மாறினால் கட்சி மாறுபவர் என சமூகவலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலினின் குடும்பத்தை பத்தி கேவலமாக பேசியுள்ளார் எனவும் அவர் பேசியது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு பிடிக்கவில்லை எனவும் தற்பொழுது வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழக அரசியல் களம் தற்பொழுது மிகவும் பரப்பாகியுள்ளது, காரணம் ஈரோடு இடைத்தேர்தல் இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள், பரபரப்பாக இயங்கி வருகின்றன! இந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் திமுக அரசின் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக வெற்றிபெற வேண்டும் என ஈரோட்டில் தீவிர பிரச்சாரத்தில் இயங்கி வருகிறார்! மக்களிடம் அமைச்சர் என்றும் பாராமல் வீதியில் இறங்கி வாக்கு கேட்டு முதல்வர் ஸ்டாலின் கைநீட்டிய வேட்பாளர் ஜெயிக்க வேண்டும் என அமைச்சர் செந்தில்பாலாஜி பேசிவரும் நிலையில் இதே அமைச்சர் செந்தில் பாலாஜிதான் ஸ்டாலின் அவர்கள் குடும்பத்தை கேவலமாக பேசினார் என்ற பகீர் தகவல் இப்பொழுது வெளியாகியுள்ளது.

 திருமலை நாயக்கரின் 440வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் உள்ள திருமலை நாயக்கரின் திருவுருவ சிலைக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கடம்பூர் ராஜு பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். 

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது, 'கலைஞரின் பேனா சிலை விவகாரத்தில் சீமான் போன்ற அரசியல் பிரமுகர்கள் கடுமையான வார்த்தைகளால் பேசியுள்ளார்கள். கலைஞர் பேனா சிலை விவகாரத்தில் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவே இந்த திட்டத்தை தமிழக அரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என கேட்டுக்கொண்டார்.

இதனை தொடர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு என்ன கூறினார் என்றால், 'செந்தில் பாலாஜி நன்றாக கூவுகிறார். அதிமுகவில் இருந்த போது நன்றாக கூவினார். செந்தில் பாலாஜி பல கட்சிக்கு சென்று வந்தவர் அவருக்கு அடையாளம் கொடுத்தவர் ஜெயலலிதா.

திமுக குடும்பத்தை பற்றி தரை குறைவாக பேசியவர் செந்தில் பாலாஜி. திமுக குடும்பம் பற்றி செந்தில் பாலாஜி கேவலமாக பேசிய பேச்சு அம்மா அவர்களுக்கே பிடிக்கவில்லை என கூறினார்.

மேலும் பேசிய செல்லூர் ராஜு,  செந்தில் பாலாஜி பேச்சு எல்லாம் ஒரு பொருட்டு அல்ல. அவர் ஒரு பச்சோந்தி. வருகின்ற இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக பெருவாரியான வெற்றி பெறும். மிகப்பெரிய மாற்றத்தை எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் கொடுப்பார்' என்று கூறினார்.

இறுதியாக, 'திமுக அரசு பொய்யாக பேசி ஆயிரம் ரூபாய் பணம் தருகிறேன், கேஸ் மானியம் தருகிறேன், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மின் கட்டணத்தை உயர்த்த மாட்டேன் என கூறிவிட்டு அனைத்தையும் உயர்த்தி விட்டது, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக அரசுக்கு மக்கள்  தகுந்த பாடத்தை புகுட்டுவார்கள்' என கூறி தனது பத்திரிகையாளர் சந்திப்பை செல்லூர் ராஜூ முடித்துக்கொண்டார். 

முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தை செந்தில்பாலாஜி கேவலமாக பேசியதாக செல்லூர் ராஜு குறிப்பிட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.