ஈரோடு கிழக்கு தொகுதியில் பல்வேறு தனியார் அமைப்புகள் சர்வே எடுத்து வருகின்றனர் அதன் படி ஆளும் கட்சியான திமுக தங்களுக்கு கடந்த தேர்தலில் பணியாற்றிய மூன்று குழுக்கள் மூலம் தனி தனியாக சர்வே எடுத்து இருப்பதாகவும் மேலும் மாநில உளவு அமைப்புகளும் சர்வே எடுத்து அதன் முடிவுகள் சேர வேண்டியவர்களிடம் சேர்க்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்த வரை கொங்கு வெள்ளாளர், முதலியார், பிள்ளைமார், தெலுங்கர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் வாக்கு வங்கி அதிகமாக இருக்கிறது,இந்த சமூக வாக்குகளை இரண்டு தரப்பும் குறிவைத்து இருக்கிறது, குறிப்பாக கொங்கு வெள்ளாளர் வாக்குகளை செந்தில் பாலாஜி மூலம் குறிவைத்து இருக்கிறது திமுக, தெலுங்கு வாக்குகிற்கு KN நேரு மூலமும் இவ்வாரு ஒவ்வொரு சமூக மக்கள் வாக்குகளை அதே சமூகத்தை சேர்ந்த அமைச்சர்கள் மூலம் பெற திமுக தீவிரமாக களத்தில் இறங்கி இருக்கிறது.
இவை தவிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவதை தாண்டி வேறு எந்த கட்சியும் டெபாசிட் எடுக்க கூடாது என ஸ்டாலின் உத்தரவு போட்டு இருப்பதால் அமைச்சரவை எந்திரம் முழுவதும் ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் களம் இறங்கி இருக்கிறது.
இந்த சூழலில் தனியார் சர்வே முடிவுகள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்து இளங்கோவன் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றும் அதே நேரத்தில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் டெபாசிட் வாங்குவார் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
மாநில உளவு அமைப்புகளும் அதே தகவலை கொடுத்து இருக்கிறார்கள் இரட்டை இலை சின்னம் மட்டுமே அங்கு பலம் பொருந்தி நிற்கிறது இரட்டை இலை இல்லாமல் ஓபிஎஸ் ஈபிஎஸ் என யார் களத்தில் இறங்கி இருந்தாலும் நிச்சயம் டெபாசிட் வாங்கி இருக்க மாட்டார்கள் என்று சொல்லி இருக்கிறார்கள்.
இது ஒருபுறம் என்றால் தற்போது இரட்டை இலை கை சின்னத்தை எதிர்த்து போட்டி போடுவது உறுதி என்ற நிலையில் அனைத்து தேர்தல் களத்தில் இருக்கும் அமைச்சர்களும் முழுமையாக களத்தில் இறங்கி தேர்தல் பணிகளை செய்ய வேண்டும் என்றும் ஒருவேளை அதிமுக வேட்பாளர் டெபாசிட் வாங்கினால் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்க பட்டுள்ள அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி என்றும் ஸ்டாலின் மறைமுக உத்தரவு போட்டு இருக்கிறாராம்.
காங்கிரஸ் வேட்பாளர் என்பதால் அதிமுக வேட்பாளர் டெபாசிட் வாங்க வாய்ப்பு இருக்கிறது இதுவே திமுக வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் நின்று இருந்தால் நிச்சயம் அதிமுக வேட்பாளர் டெபாசிட் இழப்பார் என்று புலம்பி வருகிறார்களாம் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள உடன் பிறப்புகள்.
இது ஒருபுறம் என்றால் அதிமுக வேட்பாளராக தென்னரசு அறிமுகம் செய்யப்பட்டுள்ள போதிலும் இரண்டு முக்கிய விஷயங்கள் அடுத்தடுத்து அரங்கேறி இருப்பதால் கடும் அதிருப்தியில் இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி அது குறித்து முழுமையாக அடுத்த வீடியோவில் பார்க்கலாம் மறக்காமல் நமது TNNEWS24 DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.