24 special

வேண்டாம் விட்ரு.. திரும்ப திரும்ப பேசுற நீ..! - "நான் அப்படித்தான் பேசுவேன்" என்ன இப்ப? ஒரே அக்கப்போர்.!

Rn ravi,  stalin
Rn ravi, stalin

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது போல தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, எப்போதெல்லாம் திராவிடம் என பேசுகிறாரோ அப்போதெல்லாம் திமுகவினருக்கு செம்ம காண்டாகி விடுகிறது. ஆளுநரும் தன் பங்குக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அப்பப்ப திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தி திமுகவை டென்ஷன் ஏற்றி விடுகிறார். அப்படி என்னதான் நடந்தது இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.....


கடந்த சில நாட்களாக எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி புதிய கல்வி கொள்கை குறித்தும், திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்தியும் பேசி வருகிறார். அதில் என்ன திமுகவுக்கு பிரச்சனை என்றால், ஆளுநர் பங்கேற்கும் பல நிகழ்ச்சிகளில் "திராவிடபர் இனம் என தவறாக ஆங்கிலேயர் குறிப்பிட்டதை தற்போதும் இவர்கள் பின்பற்றி வருகின்றனர். இப்போது கூட பாட புத்தகத்தில் இந்தியாவின் வடக்கே ஆரிய பகுதி என்றும் தெற்கில் இருப்பவர்கள் திராவிடம் என்றும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

இன்னும் சொல்லப்போனால் பழங்குடியின மக்களிடையே செயற்கை தனமான ஒரு விதமான வகைப்படுத்துத்தலை,  ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திட்டாங்க. ஏன் இப்படி செய்தார்கள் என்று இப்போதும் என் மனதில் கேள்வி இருக்கின்றது என நேற்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பழங்குடியின பெருமை  தின விழாவில் பேசினார். 

இவ்வாறு தொடர்ச்சியாக ஆளுநர் பேசுவது திமுகவின் மேலிடம் வரை மிகுந்த கோபத்தை உண்டு பண்ணி இருக்கின்றது. இதனை எல்லாம் காரணம் காட்டி தான், ஏற்கனவே ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் கையெழுத்திட்டு குடியரசு தலைவரிடம் கடிதம் கொடுத்து இருக்கின்றனர். இருந்தாலும் நீங்க உங்க வேலைய பாருங்க... நான் என் வேலையை பார்க்கிறேன்... என்ற தோணியில் ஆளுநர் பேசி வருகிறார்.

நேற்று நிகழ்வில் தொடர்ந்து பேசிய ஆளுநர், எட்டு கோடிக்கும் அதிகமாக வசிக்கும் தமிழகத்தில் 8 லட்சம் பேர் இருக்கும் பழங்குடியின மக்களுக்கு ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்றும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒரு மாணவி கேட்ட கேள்வியான "காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்" என்பதற்கு முதலில் ஆரோக்கியமாக இருங்கள் நன்கு படிங்கள் அடுத்து சில வருடங்களில் நீங்கள் காவல் அதிகாரியாக உருவாகி விடுவீர்கள் என பேசி மாணவ செல்வங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினார்.