சிவகங்கையில் திமுகவை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா ஆளும் திமுக அரசையும் அமைச்சர்களையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து விலையேற்றம் செய்து இருக்கின்றனர். குறிப்பாக பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு என பொதுமக்கள் எதையும் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு மிகுந்த சுமையை கொடுத்து இருக்கின்றனர். பொதுமக்களால் மின்கட்டணம் கட்டுவதற்கு கூட முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். தினமும் பருகக்கூடிய பாலை கூட நிம்மதியாக குடிக்க முடியாத அளவுக்கு விலை ஏற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
இதனை எதிர்த்து பாஜக மாநிலம் முழுவதும் போராட்டம் அறிவித்து இருந்தது அந்த வகையில் சிவகங்கையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட எச் ராஜா பால்வளத் துறை அமைச்சரை பற்றி பேசும்போது ஒருமையில் பேசினார். அப்போது பால் கொம்புல கிடைக்குமா? காம்புல கிடைக்குமா? என்று கூட அவங்களுக்கு தெரியாது. பேசாம ஒரு ஆறு மாதம் எங்கள் தோட்டத்திற்கு நாசர் வரட்டும். என்னிடம் இருக்கக்கூடிய பாதி மாட்டை அவருக்கு தருகிறேன்.
அதனை வளர்த்து, புண்ணாக்கு பருத்திக்கொட்டை போட்டு, குளிக்க வைத்து வைக்கோல் போட்டு, பாலைக்கரந்து லாபத்த பெற்றுக் கொடுக்கட்டும். அப்போது அவரை பால்வளத் துறை அமைச்சராக ஏற்றுக் கொள்ளலாம் என குறிப்பிட்டு பேசினார்.
மேலும் அடுத்தபடியாக சென்று மானங்கெட்டவர்கள் எல்லாம் மாண்புமிகு மந்திரியாக இருக்காங்க. இவர்கள் எல்லாம் திருமணம் கடந்த உறவில் பிறந்தவர்கள் என்றெல்லாம் ஒருமையில் பேசிய வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதற்கு திமுக தரப்பிலிருந்து கண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.