24 special

சும்மா சொல்லக்கூடாது அண்ணாமலை நடைபயணம் செம்மையா வேலை செய்கிறது..!

mk stalin, annamalai
mk stalin, annamalai

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் துவங்கிய 'என் மண் என் மக்கள்' யாத்திரை தென் மாவட்டங்களை முடித்துள்ளது, தற்பொழுது கொங்கு மண்டலத்தில் இந்த யாத்திரை நடந்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்தபடியாக மத்திய மண்டலமான திருச்சி மற்றும் தஞ்சை திருவாரூர் போன்ற டெல்டா பகுதிகளுக்கு வரவிருக்கிறது.இந்த நிலையில் தென் மாவட்டங்களில் யாத்திரை பெரும் அளவில் வெற்றி பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆனால் திராவிட கட்சிகளின் சார்பில் யாத்திரையில் அண்ணாமலை நடந்து செல்லவில்லை, அவர் பாதி சொகுசு வண்டியிலும் மீதி நடந்ததும் தான் செல்கிறார்!


யாத்திரை பெரிதாக வெற்றி பெறவில்லை! யாத்திரை பாஜகவிற்கு பின்னடைவு! அங்கு வரும் மக்கள் பணம் கொடுத்து அழைத்து வரப்படுகிறார்கள்! என்பது போன்றெல்லாம் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் யாத்திரை கொடுத்த அதிரடி ரிப்போர்ட்டால் அலறியடித்து முதல்வர் செய்த காரியம் ஒன்று தற்பொழுது அரசியல் உலகில் பேசு பொருளாக மாறி உள்ளது. தென்மாவட்டங்களில் தற்பொழுது குறிப்பாக அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டதற்கு பிறகு முக்குலத்தோர் சமுதாயத்தின் வாக்குகள் பெருமளவில் பாஜகவிற்கு செல்லும் என ஏற்கனவே பாஜக தரப்பில் சில நிர்வாகிகள் உறுதியாக கூறி வந்தனர்.

ஏன் என விசாரித்த பொழுது இல்லை தற்பொழுது இருக்கக்கூடிய தலைவர்களில் அதுவும் குறிப்பாக இளம் தலைவர்களில் அண்ணாமலை அரசியல் செய்வது தென் மாவட்ட மக்களை ஈர்த்துள்ளது, இதனால் பெரிய அளவில் தென் மாவட்டத்தில் இருக்கக்கூடிய முக்குலத்தோர் சமுதாயத்தின் வாக்குகள் அண்ணாமலைக்கு கண்டிப்பாக வரும், அது பாஜகவிற்குத்தான் சேரும் நீங்கள் வேணால் பொறுத்திருந்து பாருங்கள் என கடந்த சில நாட்களுக்கு முன்னரே பாஜகவினர் கூறினர், அது தற்பொழுது நடைமுறையில் தெரிவது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. தேவர் குருபூஜைக்கு வரும் அக்டோபர் முப்பதாம் தேதி முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியே அறிவிக்கப்பட்ட செய்தி குறிப்பில் வரும் 29ஆம் தேதி அன்று முதல்வர் ஸ்டாலின் கிளம்பி கோரிப்பாளையம் சென்று அங்கு உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு பின்னர் அங்கிருந்து கார் மூலமாக பசும்பொன் செல்வார் எனவும் அங்கு தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏன் இது தற்பொழுது கவனிக்கப்பட்டுள்ளதாக இருக்கிறது என்றால் கடந்த ஆண்டு 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தேவரின் 115 ஆவது பிறந்தநாள் மற்றும் குருபூஜை விழாவிற்கு முதல்வர் செல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது, அப்பொழுது தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலாக மூத்த அமைச்சர்களான துரைமுருகன், கே.என்.நேரு மற்றும் ஐ.பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். 

கடந்த குருபூஜைக்கு முதல்வர் ஸ்டாலின் தேவர் குருபூஜை செல்லாமல் இருந்தது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது, இந்த சூழலில் சென்ற ஆண்டு கலந்து கொள்ளாமல் இருந்துவிட்டு இந்த ஆண்டு தேவர் பூஜை ஸ்டாலின் கலந்து கொள்வதற்கு காரணம் என்ன என விசாரித்த பொழுது அண்ணாமலை பாதையாத்திரைதான் காரணம் என கூறுகின்றனர் தென் மாவட்ட மக்கள். இது குறித்து அவர்கள் கூறும் பொழுது இந்த முறை பாஜகவிற்கு பெருமளவில் தென் மாவட்ட மக்கள் ஆதரவு கொடுப்பது என முடிவு செய்துவிட்டார்கள், இந்த விவரம் தான் அறிவாலயத்தை எட்டி உள்ளது. இதன் காரணமாகத்தான் சென்ற ஆண்டு தேவர் குருபூஜைக்கு வராத முதல்வர் இந்த ஆண்டு வருகிறார் என கூறுகின்றனர் அங்குள்ள மக்கள். அண்ணாமலை யாத்திரை பெருமளவில் கை கொடுக்கவில்லை, அண்ணாமலை யாத்திரை எல்லாம் நாடகம் எனக் கூறி வந்தவர்களே இன்று அண்ணாமலை யாத்திரை கொடுத்த அடியின் காரணமாக தென் மாவட்ட குருபூஜைக்கு செல்வது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.