24 special

பொய் வாக்குறுதியின் உச்சம் திமுக.....களத்தில் பாஜக செய்த செயல்!

mk stalin, annamalai
mk stalin, annamalai

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை கண்டித்து  பாரதிய ஜனதா கட்சி சார்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வருவது முன் பல்வேறு வாக்குறுதிகளை மக்களிடம் அள்ளி கொடுத்தது. அதனை இதுவரை நிறைவேற்றமால் இருப்பது வருத்தமளிக்கிறது என்று தமிழக மக்கள் நினைக்கும் அளவிற்கு மக்கள் வருந்துகின்றனர். அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்தால் மாதம், மாதம் ரூ. 1000 குடும்ப பெண்களுக்கு தரப்படும் என்று அறிவித்தது அதனை நம்பி மக்கள் திமுகவை தேர்தலில் வெற்றி பெற வைத்தனர்.


திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டு காலம் ஆகி தற்போது பெண்களுக்கு மாதம் 1000 திட்டத்தை கொண்டுவந்தது. அதிலும், அனைத்து பெண்களுக்கும் 1000 ரூபாய் தொகை தரப்படும் என்று அறிவித்தது. ஆனால், திட்டத்தை அறிவித்த பின் தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும் என்று திமுக அரசி அறிவித்ததும் பெண்களுக்கு பெரும் ஷாக் கொடுத்தது.இதனை கண்டித்து பல கட்சி தலைவர்களும் திமுக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்தும், அனைத்து பெண்களுக்கும் மாதம் 1000 தர வேண்டியும் திருவள்ளுர் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் திமுக அரசை கண்டித்து மாவட்ட தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநிலத் துணைத் தலைவர் ஸ்ரீதர் கலந்து கொண்டு பேசிய போது திமுக தேர்தல் நேரத்தில் வாக்குறுதியான குடும்ப தலைவிக்கும் வழங்கப்படும் என அறிவித்துவிட்டு  தற்போது தகுதியின் அடிப்படையில் மட்டுமே ரூ.1000 வழங்கப்படும் என தெரிவிக்கும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டதாக கூறினார்.இந்த ஆர்ப்பாடத்தில் பாஜக நிர்வாகிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மகளிர் உரிமை தொகை திட்டம் அறிவித்து செயல் படுத்திய போது தகுதியான பெண்களுக்கும் விடுபட்டது இது தொடர்பாக கடந்த சில நாட்களில் விழுப்புரம், புதுக்கோட்டை, தேனீ, சேலம் போன்ற மாவட்டத்தில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், விடுபட்ட பெண்கள் வட்டாச்சியர் அலுவலகத்திலும், இ-சேவை மையத்திலும் பதிவு செய்யும்போது பெண்களிடம் குறிப்பிட்ட தொகையை கையூட்டல் பெறுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் திமுக அரசு ஆட்சிக்கு வந்ததற்கான சாட்சியாகவும் மக்கள் மனதில் திமுக அரசசு மீது ஏற்பட்ட துயரத்தை மறைக்கவும் இதுபோல மகளிர் உரிமை தொகை திட்டத்தை இரண்டு ஆண்டுக்கு பிறகு கையில் எடுத்துள்ளது என்றும் நாடாளுமன்ட்ட்ற தேர்தலை மனதில் கொண்டும் இது போல் மக்களுக்கு ஏமாற்று வேலையை விளையாடி கொண்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.