24 special

சென்னை ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...! வெடிக்கப்போகும் பூகம்பம்..!

mk stalin, rn ravi
mk stalin, rn ravi

சென்னையில் கிண்டியில் ஆளுநர் மாளிகை இருந்து வருகிறது, அந்த மாளிகையில் இன்று முகப்பு வாசலில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது. சென்னை கிண்டியில் பட்டப் பகலில் ஆளுநர் மாளிகையில் காவலர்கள் அத்தனை பேர் காவலுக்கு இருக்கும் பொழுதும் மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசியுள்ளார், இப்படி பெட்ரோல் குண்டு வீசியவரைத் தொடர்ந்து காவல்துறை பிடித்து விசாரித்ததில் அந்த நபர் கருக்கா வினோத் என்பது தெரிய வந்தது. 


அவரிடம் இருந்து மேலும் மூன்று பெட்ரோல் குண்டுகளை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அந்த கருக்கா வினோத்தை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கைது செய்யப்பட்டவர் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது, கருக்கா வினோத் எனப்படும் அவர் மீது ஏற்கனவே ஒன்பது வழக்குகள் உள்ளதாகவும் கடந்த 2022 ஆம் ஆண்டு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத் கைதானதும் குறிப்பிடத்தக்கது. கருக்கா வினோத் 180 மில்லிட்டர் பாட்டிலில் பெட்ரோல் குண்டு வீசி உள்ளார், மொத்தம் நான்கு பெட்ரோல் குண்டுகளை தயார் நிலையில் வைத்திருந்து ஒரு குண்டை மட்டும் வீசியுள்ளார்.

பெட்ரோல் குண்டு வெடிப்பு வழக்கில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தான் கருக்கா வினோத் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நாளை இரவு சென்னை வருகை தர உள்ள நிலையில், இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கருக்கா வினோத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களை காவல்துறையினர் தரப்பில் விசாரித்த பொழுது நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் தீர்மானத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால் விரக்தியில் ஆளுநர் மாளிகை மீது குண்டு வீசியதாகவும் தகவல்கள் கசிந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது. 

தொடர்ச்சியாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், திமுக அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் மற்றும் கருத்தியல் ரீதியான மோதல்கள் இருந்து வரும் நிலையில் ஆளுநர் மாளிகை என் முன்பு அவ்வப்போது போராட்டங்கள் வெடிக்கும். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட இடதுசாரிகள் கட்சிகள் ஆளுநர் ஆர்.என்.ரவி மளிகை முன்பு போராட்டம் நடத்திய குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ஆளுநர் மாளிகையின் முன்பு தாக்குதல் தொடுக்கும் சம்பவமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது தமிழகத்தை உலுக்கி உள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் பல தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பான சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வரும் நிலையில் nia எனப்படும் தேசிய புலனாய்வு முகமை தமிழகத்தை ரேடாரில் வைத்திருக்கும் நிலையில் இப்படி ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது குறித்து அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அவர் தனது எக்ஸ் பதிவில், 'ராஜ்பவன் மீது இன்று பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது, தமிழகத்தின் உண்மையான சட்டம்-ஒழுங்கைப் பிரதிபலிக்கிறது. முக்கியமில்லாத விஷயங்களில் மக்களின் கவனத்தை திசை திருப்புவதில் திமுக மும்முரமாக இருக்கும்போது, குற்றவாளிகள் தெருக்களில் இறங்கிவிட்டனர்.

தற்செயலாக, பிப்ரவரி 2022 இல் சென்னையில் உள்ள பாஜக தலைமையகத்தைத் தாக்கிய அதே நபர்தான் இன்று ராஜ்பவன் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றார். இந்தத் தொடர் தாக்குதல்களுக்கு திமுக அரசுதான் நிதியுதவி செய்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது.  முதல்வர் ஸ்டாலின் எப்பொழுதும் செய்வது போல் அடுத்த திருப்பத்திற்கு தயாராகிக்கொண்டிருக்கிறார்' என பதிவிட்டுள்ளார்..இதுகுறித்து அரசியல் விமர்சகர்களிடம் கேட்டபோது ஆளுநர் அரசியல்வாதியல்ல அவர் அதிகாரி, இந்த விவகாரத்தை அவரை சும்மா விடமாட்டார் கண்டிப்பாக டெல்லி வரை எடுத்துச்சென்று நிச்சயம் வேறுவிதமாக நடவடிக்கை எடுப்பார் எனவும் ஏற்கனவே ஒருமுறை திமுக அரசு வரலாற்றில் கலைக்கப்பட்டது நினைவிருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.