Cinema

ஒழுங்காக போய்க்கொண்டிருந்த தக் லைஃப் ஷூட்டிங்... எதிர்பாராமல் நடந்த அந்த கொடுமை...

KAMALHASSAN, JOJU GEORGE
KAMALHASSAN, JOJU GEORGE

கடந்த 1987 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் மணிரத்தினம் இயக்கிய நாயகன் திரைப்படம் வெளியாகி எந்த அளவிற்கு ரசிகர்களின் வரவேற்பை பெற்று வந்தது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அந்த திரைப்படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் இணைந்து  வேறு எந்த திரைப்படமும் எடுக்காத நிலையில் இவரின் ரசிகர்கள் பெரும் வருத்தத்துடன் இவர்கள் இருவரும் இணைந்து திரும்பி எப்போது கம்பா கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில் தற்போது கமலஹாசன் நடிப்பில் இயக்குனர் மணிரத்தினம் தற்போது தக் லைஃப் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் கமலஹாசன் மட்டுமல்லாமல் திரிஷா, ஜெயம் ரவி மற்றும் சிம்பு உள்ளிட்ட பல பிரபலமான நடிகர்களும் நடித்து வருகின்றனர்.சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினத்தில் பொன்னியின் செல்வன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இவ்வாறு பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது அடுத்த படியாக தக் லைஃப் திரைப்படத்தை தற்போது இயக்கி வருகிறார்.


பொன்னியின் செல்வன் திரைப்படம் ஏற்கனவே நல்ல வெற்றியை கொடுத்தது போலவே இந்த திரைப்படமும் பெரிய அளவில் வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் கமலஹாசன் மற்றும் மணிரத்தினத்தின் கம்பேக் திரைப்படம் என்பதால் நாயகன் திரைப்படத்திற்கு கிடைத்த அதே வரவேற்பு இந்த திரைப்படத்திற்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் ஆனது கமலஹாசனின் 234 வது திரைப்படம் ஆகவும் இருந்து வருகிறது.மேலும் இந்த திரைப்படம் ஆனது உதயநிதி ஸ்டாலின், கமலஹாசன் மற்றும்  மணிரத்தினத்தின் தயாரிப்பு நிறுவனங்களான ரெட் ஜெயன்ட் மூவிஸ், ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகியவை இணைந்து மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. எனவே இந்த இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்புகளும் ரசிகர் மத்தியில் பெரிய அளவில் இருந்து வருவதால் அதிக அளவில் ரசிகர்கள் இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக காத்துக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பானது தற்பொழுது நடந்து வரும் சமயத்தில் படப்பிடிப்பின் போது பிரபல நடிகருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக காணலாம்!!

தக் லைஃப் திரைப்படத்தின் பட சூட்டிங் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. மேலும் ஏற்கனவே ராஜஸ்தான் டெல்லி கேரளா போன்ற பல இடங்களில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது புதுச்சேரியில் படப்பிடிப்பினை மேற்கொண்டுள்ளனர். அப்போது கமலஹாசன் வில்லன்களுடன் மோதும் காட்சியானது சூட்டிங் எடுக்கப்பட்ட போது நடிகர் ஜோஜூ ஜார்ஜ் ஹெலிகாப்டரில் குதிப்பது போன்று  காட்சி எடுக்கப்பட்டு வந்துள்ளது. அவ்வாறு ஹெலிகாப்டரில் இருந்து குதிக்கும் காட்சி எடுக்கும் பொழுது விபத்து ஏற்பட்ட நடிகர் ஜோஜூ ஜார்ஜ் பலத்த காயம் அடைந்துள்ளார். 

இதனை தொடர்ந்து முதல் உதவி செய்து மருத்துவமனையில் அனுமதித்து பார்க்கும் பொழுது அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரும் முழுமையாக ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் அவரை மீண்டும் கொச்சிக்கு பட குழுவினர் பத்திரமாக அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர் என் ரசிகர்கள் அவர் விரைவில் குணமாக வேண்டும் இணையதள பக்கங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் அவர் காலில் கட்டு போட்டுக் கொண்டு நடந்து வரும் புகைப்படம் ஒன்று தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது குறித்த செய்தி இணையத்தில் தற்பொழுது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.