24 special

இரட்டை இலை சின்னம்...தேர்தல் அதிகாரி சொன்ன பரபரப்பு தகவல்..!

Pneer selvam, Edapadi palanisamy
Pneer selvam, Edapadi palanisamy

நாடளுமன்ற தேர்தலுக்காக அதிமுக கட்சி தொடர்ந்து அதற்கான பணிகளை செய்து வருகிறது. அதிமுகவை பொறுத்தவரை இரண்டாக பிரிந்து கடக்கிறது. கட்சியில் முக்கிய பிரச்சனையாக தொடர்ந்து வருவது இரட்டை இலை சின்னம் அதிமுகவில் இருந்து விலகிய பன்னீர் செல்வம் தங்களுக்கு தான் அதிமுக சின்னம் என பேசி வருகிறார். இந்நிலையில் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு முக்கிய விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.


அடுத்த வாரத்தில் லோக்சபா தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டை பேசி வருகிறது. தேசியளவில் இந்த முறை பாஜகவின் என்டிஏ vs எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி இருக்கிறது. தமிழகத்தில் திமுக- அதிமுக மற்றும் பாஜக கட்சிகளுடன் போட்டி கடுமையாக இருக்கும் என தெரிகிறது. திமுக தரப்பில் யாரும் விலகாமல் அப்படியே தொடர்ந்து வருகிறது அவர்களிடம் எத்தனை தொகுதிகள் வழங்க வேண்டும் என பேசி வருகிறது. மறுபுறம் அதிமுகவில் அப்படி பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை. அதிமுகவில் பாமக, தேமுதிக கட்சிகளை இணைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.

பாஜக பக்கம் சிறு சிறு கட்சிகள் இணைந்து வருகிறது. அதிமுகவில் இருந்து நீக்கிய ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் பாஜகவுடன் கூட்டணி என கூறுகின்றனர். அதிமுக சின்னம் தங்களுக்கு தான் என பொது மேடையிலும் பொது கூட்டத்திலும் பேசி வருகிறார் பன்னீர்செல்வம். பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக்கப் பாடுபடுவோம் என்று பேசி வருகிறார். இரட்டை இலை நிச்சயம் எங்களுக்கு வரும் என கூறி வருகிறார். இதுவரை அதிமுக தொடர்பான தீர்ப்புகள் எல்லாம் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக வந்தது. தற்போது பன்னீர் செல்வம் இப்படி பேசி வருவது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. 

ஓபிஎஸ் தற்போது பேசியது, இந்த விவகாரம் ஆரம்பித்தது முதல் இப்போது வரை எடப்பாடிக்கு வந்த அனைத்து தீர்ப்புகளும் தற்காலிகமானது தான். இந்த வழக்கை இப்போது சிவில் சூட் தான் கவனித்து வருகிறது. அவர்கள் தரும் தீர்ப்பு தான் இறுதியானது. இதற்கு முன்பு வழங்கப்பட்டு எந்த தீர்ப்பும் அதைக் கட்டுப்படுத்தாது எனச் சொல்லி இருக்கிறார்கள்" என்றார். வரும் நாட்களில் இது தொடர்பாக மனு அளிப்பார் என கூறப்படுகிறது. இதற்கிடையே தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இது குறித்து முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற சைக்கிள் பேரணியில் தேர்தல் அதிகாரி கலந்துகொண்ட அவரிடம் இந்த கேள்வியை செய்தியாளர்கள் கேட்க அப்படி எங்களுக்குக் கோரிக்கை வந்தால் அந்த கடிதத்தைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புவோம். அவர்கள் அதைப் பரிசீலனை செய்து உரிய உத்தரவைப் பிறப்பிப்பார்கள். அதன்படி நாங்கள் செயல்படுவோம்" என்றார். இவரின் பேச்சை பார்க்கும்போது வரும் நாட்களில் தேர்தலின் போது நிச்சயம் மாற்றம் ஏற்படும் எனபது போல் தெரிகிறது. அதிமுக சின்னம் ஓபிஎஸ் பக்கம் சென்றால் இபிஎஸ் ஆதரவாளர்கள் என்ன செய்வார்கள் என்பது பொறுத்து பார்ப்போம்.